ஃபாலோவ்
Sri madura Helth & Skin Care
@1146601529ke
41
போஸ்ட்
201
பின்தொடர்பவர்கள்
Sri madura Helth & Skin Care
1.1K காட்சிகள்
கனு பசுமஞ்சள் தீற்றும் போது சொல்ல வேண்டியது #கானும் பொங்கல் . தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும் பேரும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும் சிறிய வயதில் தாலி கட்டி பெரியவளாகி பிள்ளைகள் பெற்று கொண்டவன் மனம் மகிழ தையல் நாயகி போல தொங்க தொங்க தாலி கட்டி தொட்டிலும் பிள்ளையுமாக மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மாமியும் போற்ற பிறந்த கத்தோர் பெருமை விளங்க பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி புதுமாப்பிள்ளை மருமகளோடு புது புது சந்தோஷம் பெருகி ஆல் போல் தழைத்து அருகு போல் ஏரோடி என்றென்றும் வாழனும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கனும் ... என சொல்லி முகத்தில் மஞ்சள் பூசனும்.🌺 கனு பொடி வைக்கும் போது. இஞ்சி கொத்து இலை பரப்பி அதில் முதல் நாள் செய்த சர்க்கரை பொங்கல், கூட்டு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் கலந்த சாதம், கரும்பு துண்டு , வெற்றிலை வாழைப்பழம் வைக்க வேண்டும். விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றி கீழ் கண்டவாக்யத்தை சொல்ல வேண்டும். சூரியன் உதிப்பதற்குள் கனு வைக்க வேண்டும். ஏன் என்றால் பறவைகள் அதிகாலை 4 மணிக்கே எழுத்து விடும். காக்காய் பொடி வைத்தேன்... கனுப்பொடி வைத்தேன்... காக்காய் கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும்.. காக்காய் பொடி வச்சேன் கனுப்பொடி வச்சேன் காக்காய்க்கு எல்லாம் கல்யாணம் குருவிக்கு எல்லாம் கொண்டாட்டம் ... காக்கா கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாது இருக்கனும் என சொல்லி பிராத்தனையாக உடன் பிறந்தோர் ஆயுள் ஆரோக்யம் பெற்று வாழவும் , தன் குடும்ப ஒற்றுமைக்கும் வேண்டி தீபாரதனை காட்டி நமஸ்கரிக்க வேண்டும். ..... SavittriRaju
Sri madura Helth & Skin Care
513 காட்சிகள்
புண்ய ஸ்லோகோ நளோ ராஜா । புண்ய ஸ்லோகோ யுதிஷ்டிர । புண்ய ஸ்லோகோ ச வைதேஹீ புண்ய ஸ்லோகோ ஜனார்த்தன: ॥ நளன் என்ற அரசனும் புண்ணியப் புகழுடையவர். தர்மராஜன் யுதிஷ்டிரனும் புண்ணியப் புகழுடையவர். சீதாதேவியும் புண்ணியப் புகழுடையவள். ஸ்ரீகிருஷ்ணன் (ஜனார்த்தனன்) புண்ணியப் புகழுடையவர். 👉 இவர்களின் பெயர்களே புண்ணியம் தரக்கூடியவை, அவற்றை தினம் 3 முறை சொல்லி வந்தாலும் நினைத்தாலும் மனம் சுத்தமாகும் . - Savittri Raju #ஆன்மீகம்
Sri madura Helth & Skin Care
623 காட்சிகள்
“சண்முக நவக்கிரக பாமாலை” சண்முக நவக்கிரக பாமாலை என்பது, கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் உயர்வு பெறவும் முருகப்பெருமானின் ஆறுமுகனைப் போற்றிப் பாடும் ஒரு சக்திவாய்ந்த பக்திப் பாடலாகும். இதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு, கேது) தனித்தனியாக முருகனின் வெவ்வேறு திருநாமங்கள் மற்றும் பெருமைகளைப் போற்றி, அவற்றின் பாதிப்புகளை நீக்கி, அருளைப் பெறுவதற்குப் பாடப்படுகிறது. இது ஒரு மந்திரம் போன்றது; தினமும் காலையில் முருகனை நினைத்து மனமுருகப் பாடினால், வாழ்வில் ஏற்றம், புகழ், செல்வம் பெருகி, அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. முக்கிய அம்சங்கள்: நோக்கம்: நவக்கிரகங்களின் கெட்ட பலன்களை நீக்கி, நல்ல பலன்களைப் பெறுதல், வாழ்வில் உயர்வை அடைதல், புகழ் மற்றும் செல்வத்தைப் பெறுதல். பாடும் முறை: தினமும் காலையில் அல்லது விரும்பும் நேரங்களில் முருகனின் புகழைப் பாடுவது. பயன்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் நம்மைப் பாதுகாக்கும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்துக்காட்டாக: சூரிய திசை: முருகப்பெருமானின் ஆறு கரங்களால் அருள்புரிந்து, சீரிய வாழ்வு தரும் செந்தில் வேலனைப் போற்றுவது. ஒன்பது கிரகங்கள்: முருகனைப் போற்றுவதன் மூலம், ஒன்பது கிரகங்களும் ஓடிவந்து காக்கும். சீரிய வாழ்வுக்கு கிரகங்களின் பாதிப்பு நீங்க ஆறுமுகன் புகழை அன்றாடம் போற்றிடவே ஏறுமுகம் கிடைக்கும்! சேரும் புகழ் ஏராளம்! ஒன்பான் கிரமுமே ஓடிவந்து காப்பாற்றும்! கண்ணான வேழமுகம் காப்பு செப்பும் சிலம்புரியின் சிங்காரம் தந்த கவி சுப்பிரமணியனுக்குத் தூதாகும்! அப்புறமாய் ஒன்பான் கரிமுகமே ஓங்காரம் கேட்டவுடன் இன்பமெல்லாம் கூட்டும் இனி! சூரியதிசை: ஆறிரு கரங்கள் கொண்டு அடியார்க்கு அருள் வழங்கி சீரிய வாழ்வு நல்கும் செந்திலே பழநி வேலா! சூரிய திசையிலே உன்னை துதிட்டேன் காக்க வாராய்! காரியம் யாவினுக்கும் கை கொடுத்து உதவுவாயே! சந்திர திசை: இந்திரன் முதலானோர்கள் இளமையாய் விளங்கும் உந்தன் மந்திரம் சொல்லி நல்ல மகத்துவம் பெற்றது உண்டு! சந்திர திசையில் உன்னை சந்தித்துப் போற்றுகின்றேன்! வந்திடும் செல்வமெல்லாம் வரத்தினால் வழங்குவாயே! செவ்வாய் திசை: ஒளவைக்கு நெல்லி தந்தாய்! அருணகிரி நாதருக்கும் திவ்வியக் காட்டி தந்தாய் திருவருள் கொடுப்பதற்கே செவ்வாயின் திசையில் உன்னை சேவித்துப் போற்றுகின்றேன்! வையகம் புகழும் நல்ல வாழ்க்கையை வழங்கு வாயே! புதன் திசை: கதம்பமும் முல்லை மல்லி கனிவுடன் சூடும் கந்தா சதமென ஆயுள் நல்கி சகலமும் அருளுவாயே! புதன் திசை நடக்கும் நேரம் போற்றி நான் வணங்குகின்றேன்! இதம் தரும் வாழ்வை நல்கி இன்பத்தை வழங்குவாயே! வியாழதிசை: ஆறுமுகம் கொண்ட செல்வா! அழகிய வள்ளி நேசா! பெருமைகள் வழங்கி நாளும் பிறர் போற்றும் வாழ்க்கை ஏற்க குருதிசை நடக்கும் நேரம் குமரனை வணங்குகின்றேன்! திருவருள் தருவதோடு செல்வாக்கும் அருளுவாயே! சுக்ரதிசை: தக்கதோர் வாகனங்கள் தனி இல்லம் மனைவி மக்கள் அக்கறை கொண்டு நாளும் அசுரகுரு வழங்கு மென்பார் சுக்கிரதிசையில் நாளும் சுப்பிரமணியன் உன்னை சிக்கெனப் பிடித்த தாலே சிறப்பெலாம் வழங்குவாயே! சனிதிசை: பிணியெலாம் அகலவேண்டிய பெரும் பொருள் கிடைக்க வேண்டி அணிதிகழ் வாழ்வு வேண்டி அல்லல்கள் அகல வேண்டி சனிசென்னும் திசையில் நாளும் சண்முகா உனைத் துதித்தேன்! கனிவுடைத் தெய்வம் நீயே காட்சி தந்தருளுவாயே! இராகுதிசை: நாகமாய் வடிவில் நின்று நடந்திடும் தோஷம் நீக்கி போகத்தை வழங்குதற்கே பூமியில் அருள் கொடுக்கும் இராகு எனும் திசையில் உன்னை இருகரம் கூப்பி வணங்குகிறேன்! பாகென இனிக்கும் கந்தா பதினாறு பேறும் தாராய்! கேதுதிசை: ஆதரவு வழங்குதற்கும் அண்டிய வழக்கு எல்லாம் தீதின்றி மாறுதற்கும் திறமைகள் தெரிவதற்கும் கேது திசையில் உன்னை கீர்த்தியாய் வணங்குகின்றேன் சாதனை செய்த வேலா சண்முகா அருளுவாயே! சண்முக நவக்கிரக பாமாலை பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் எழுதப்பட்டது நன்றி வாழ்க நலமுடன் வளமுடன். #ஆன்மீகம்
Sri madura Helth & Skin Care
1.7K காட்சிகள்
துளசி பிறந்த கதை :🌿 துளசி திருக்கல்யாணம் செய்யும் முறை: முதலில் துளசி பிறந்த கதை பார்ப்போம். சமயத்திரு நூல்களில், துளசியை வ்ரிந்தா என்று அழைக்கின்றனர். தர்மத்துவஜன் என்ற அரசன் அவரது மனைவி மாதவி இவர்களுக்கு கார்த்திகை மாதம் பெளர்ணமி திதியில் சுக்கிரவாரம் கூடிய சுப தினத்தில் மஹாலஷ்மியே பெண்ணாக பிறந்தாள். துளசி தனக்கு நாராயணனே மணாளனாக கிடைக்க வேண்டும் என்று பத்ரி வனம் சென்று உக்கிரமான தவம் செய்தாள் ஒற்றை காலில் நின்றபடி மழை வெயில் என்று பாராமல் 20000 வருடம் தவம் இருந்தாள். பழம் நீர் முதலியவற்றை ஆகாரமாக 30000 வருடம் எடுத்து கொண்டார். அடுத்து இலைகளை மட்டும் புசித்து 40000 வருடம் தவம் புரிந்தாள். பிறகு காற்றை மட்டுமே கிரஹித்து 16 வருடம் தவம் செய்தாள். பிரம்மா அவள் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். துளசி அதற்கு பிரபோ நீங்கள் எல்லாம் அறிந்தவர் நான் பூலோகத்தில் கோபியராய் கிருஷ்ணனுக்கு ப்ரிய மனைவியாய் இருந்தேன். ஆனால் ராதைக்கு என் மீது கோபம் வந்து பூலோகத்தில் நீ மானிடராய் பிறப்பாய் என சாபம் அளித்தாள். நானும் நாராயணனையே பர்த்தாவக அடைய வேண்டும் என வேண்ட அவரும் அவள் மீது கருணை கொண்டு முதலில் ஜலந்திரனை திருமணம் செய்து நாராயணனை அடைவாய் என்றார். சிவபெருமானின் சக்தி வாய்ந்த பகுதியாக விளங்கிய ஜலந்தரை மணந்தால சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து வந்த தீயில் இருந்து பிறந்தவன் என்பதால் ஜலந்தருக்கு அதிக சக்தி இருந்தது. பத்தினியாகவும், ஈடுபாடுள்ள பெண்ணாகவும் இருந்ததால், வ்ரிந்தா இளவரசி மீது காதலில் விழுந்தார் ஜலந்தர். விஷ்ணு பகவானின் தீவிர பக்தையாக விளங்கினார் வ்ரிந்தா. ஆனால் ஜலந்தருக்கோ கடவுள்கள் என்றாலே வெறுப்பு தான். இருப்பினும் விதி அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தது. வ்ரிந்தாவை மணந்த பின், அனைவராலும் வெல்ல முடியாதவனாக மாறினான் ஜலந்தர். வ்ரிந்தாவின் தூய்மையும், கடவுள் பக்தியும் அதற்கு காரணமாக விளங்கின. அவனின் சக்தியை பல மடங்கு அதிகரித்தது. சிவபெருமானாலேயே ஜலந்தரை வெல்ல முடியவில்லை. அவனின் ஆணவம் அதிகரித்தது. சிவபெருமானை வீழ்த்தி, அண்டசராசரத்திலேயே சக்தி வாய்ந்த கடவுளாக திகழ வேண்டும் என்பதே அவனின் லட்சியமாக இருந்தது. ஜலந்தரின் சக்தி அதிகரித்து கொண்டிருந்தது. இது அனைத்து கடவுள்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அனைத்து தேவர்களும் உதவியை நாடி விஷ்ணு பகவானிடம் சென்றனர். வ்ரித்தா அவரின் தீவிர பக்தை என்பதால் விஷ்ணு பகவானுக்கு குழப்பம் உண்டாயிற்று. அவளுக்கு அநீதி வழங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் ஜலந்தரால் அனைத்து கடவுள்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததால், விஷ்ணு பகவான் ஒரு விளையாட்டை அரங்கேற்றிட நினைத்தார். அதன்படி, சிவபெருமானுடன் ஜலந்தர் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஜலந்தர் போல் வேடமிட்டு வ்ரிந்தாவிடம் வந்தார் விஷ்ணு பகவான். முதலில் அவரை அடையாளம் காண முடியாமல், ஜலந்தர் தான் வந்து விட்டான் என்று நினைத்து அவரை வரவேற்க சென்றாள் வ்ரித்தா. ஆனால் விஷ்ணு பகவானை அவள் தொட்ட மறு வினாடியே, அது அவளின் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய தூய்மை கெட்டுப்போனதால், ஜலந்தர் தாக்குதலுக்கு உள்ளானார். தவறை உணர்ந்த அவள், தனது சுய ரூபத்தை காட்டுமாறு விஷ்ணு பகவானிடம் கேட்டுக் கொண்டாள். தன் கடவுளே தன்னிடம் விளையாடியுள்ளார் என்பதை அறிந்த அவள் உடைந்து போனாள். தன்னுடைய தூய்மையை கெடுக்க தன் கணவன் போல் விஷ்ணு பகவான் வேடமிட்டு வந்ததை அறிந்த வ்ரித்தா அவரை சபித்தார். விஷ்ணு பகவான் ஒரு கல்லாக மாற வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபத்தை ஏற்றுக்கொண்ட விஷ்ணு பகவான், கண்டக்கா நதி அருகே ஷாலிகிராம கல்லாக மாறினார். அதன்பின்னர், தனது மனைவியின் தூய்மை என்ற பாதுகாப்பு ஜலந்தரை விட்டு போனதால், சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான். மனம் உடைந்த வ்ரிந்தா, தன் வாழ்க்கையை முடிக்க முடிவெடுத்தாள். அவள் இறக்கும் முன்பு, இனி அவள் துளசியாக அறியப்படுவாள் என விஷ்ணு பகவான் அவருக்கு வரம் அளித்தார். அதன்படி, இனி விஷ்ணு பகவானை வழிபடும் போது துளசியும் வழிபடப்படும். துளசி இலை இல்லாமல் விஷ்ணு பகவானுக்கு செய்யப்படும் பூஜை முழுமை பெறாது. அதனால் தான் இந்து சடங்குகளின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது துளசி. நல்ல ஆரோக்கியத்துடன் அனைவரையும் ஆசீர்வதிக்க அனைத்து மக்களின் வீட்டில் வளரும் ஒரு செடியாக அருள் பாலிக்கிறாள். . மாடி வீடாக இருந்தாலும் ஒரு சிறிய மாடத்தில் துளசி செடி வைத்து மஞ்சள் கலந்த நீர் ஊற்றி சந்தனம் குங்குமம் இட்டு, ஊதுபத்தி ஏற்றி, ஒரு சிறு பலகையில் கோலமிட்டு தினமும் ஒர் அகல் விளக்கு ஏற்றி 3 முறை சுற்றி வந்தால் சகல செளபாக்யம் அருளுவதோடு சுமங்கலிகளின் பொட்டுக்கும் பூவுக்கும் எந்தவித பங்கமும் ஏற்பாடாமல் பார்த்துக் கொள்வாள். அதோடு நாம் வெளியில எங்கு செல்ல நேர்ந்தாலும் அவளிடம் சொல்லி கொண்டு செல்ல நமக்கு பாதுகாப்பாய் துணைவருவாள். எங்கெல்லாம் விஷ்ணு பகவான் நாராயணன் ராமர் நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் மன மகிழ்ச்சியோடு வாசம் புரிவாள். துளசியை வளர்த்து போற்றி கொண்டாடும் வீடுகளில் துர் மரணம் நேராது. தீய சக்திகள் நெருங்காது. யார் வந்தாலும் அவளின் உத்தரவு மீறி வர முடியாது. பெண்கள் விலக்கு ஆன நாட்கள் மட்டும் அவள் அறுகில் செல்ல கூடாது. துளசியை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பறிக்க கூடாது. 🌿🌿🌿🌿 நாம் துளசிக்கு திருமணம் செய்வது எப்படி. இதனால் என்ன பலன் என்பதையும் பார்ப்போம்🌿 இம்முறை நவம்பர் 2025 2ம் தேதி துளசி திருமணம் ஆரம்பம். முதல் நாள் இரவே துளசிக்கு மஞ்சள் பூசி இழைக்கோலம் போட்டு வைத்து விட வேண்டும். திருமணத்தை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது மிகவும் நற்பலன் உண்டாக்கும். அதிகாலை 3.30 ல் இருந்து 6 மணிக்குள் நடத்தலாம். அப்படி இல்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் நடத்தலாம். ஒரு தாம்பாளத்தில் பிள்ளையார் மஞ்சளால் பிடித்து சந்தனம் குங்குமம் வைக்கவும். பூக்களால் இந்த அர்ச்சனை செய்யவும். ஓம் ஸுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் விகடாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாதிபாய நம ஓம் தூம கேதுவே நம ஓம் கணாத்யஷாய நம ஓம் பால சந்ராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ர துண்டாய நம ஓம் ஸூர்ப்பகர்ணாய நம ஓம் ஹேரம்பாய நம ஓம்ஸ்கந்த பூர்வஜாய நம ஓம் மகா கணபதி நாநாவித பரிமள புஷ்ப்பம் சமர்ப்பயாமி : என்று அர்ச்சனை செய்து விநாயகர்களு தூபம் காட்ட வேண்டும் ஒரு தாம்பாலத்தில் பூ பழம் வெற்றிலை, தேங்காய் புடவை அல்லது ரவிக்கை பிட் கூட வைக்கலாம். பெருமாள் படம் அல்லது கிருஷ்ணர் சிலை அல்லது சாலகிரஹம் வைக்கவும். நெல்லி செடியின் ஒரு சிறு கிளை துளசி செடியில் நடவும். துளசிக்கு ஒரு சொம்பில் நீர் ஊற்றி அதில் மஞ்சள் குங்குமம் கலந்து செடிக்கு ஊற்றவும். மாலை சாற்றவும். பிரசாதமாக பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் வைக்கவும். அந்த தாம்பாளத்தில் தேங்காய் பழத்துடன் திருமாங்கல்ய சரடில் மஞ்சள் கட்டி வைக்கவும். 5 நெல்லிக்கனி ஒரு தட்டில் வைக்கவும் குத்துவிளக்கு ஏற்றி குங்குமத்தால் துளசி போற்றி அல்லது துளசி காயத்ரி சொல்லி துளசியில் நட்ட நெல்லி கிளைக்கும் துளசிக்கும் சேர்த்து மாங்கல்யம் கட்டவும். வெற்றிலை பாக்கு பழம் பிரசாதம் நைவேத்யம் செய்யவும். நாதஸ்வர கச்சேரி வீட்டில் தொலைகாட்சியில் ஓட விடலாம்.தீப தூப ஆராதனை காட்டி நமஸ்கரிக்ககவும். துளசி திருமணம் நடத்துவதால் ஏற்படும் பலன் : வீட்டில் யாருக்கேனும் திருமண தடை இருந்தால் திருமணம் நடைபெறும். கார்ய சித்தி, கணவர் மனைவி ஒற்றுமை, துளசி மகலஷ்மி ஸ்வரூபம் என்பதால் செல்வ செழிப்பும் உண்டாகும். வீட்டில் தீய சக்தி விலகும். எதிர் மறை ஆற்றல் மறையும் சுப காரியம் ஏற்படும். பலவித பலன்கள் உண்டாகும். துளசி அர்ச்சனை ஒம் துளசி தேவ்யை நம: ஓம் ப்ருந்தாவன ஸ்தாயை நம: ஓம் பத்ம பத்ர நிபேஷனாயை நம: ஓம் பத்ம கோடி ஸமப் பிரபாயை நம: ஓம் ஹரிப் பிரியாயை நம: ஓம் குங்கு மங்கித காத்ராயை நம: ஓம் ஸூர வந்திதாயை நம: ஓம் லோகனுக்கிரஹ காரின்யை நம: ஓம் த்ரைலோக்ய ஜனன்யை நம ஓம் | பத்ம ப்ரியாயை நம: ஓம் இந்திராக்யாயை நம் : ஓம் கம்பு கண்ட்யை நம: ஓம் கல் மஷக்ந்யை நம: ஓம் வரப்பிரதாயை நம: ஓம் ஆஸ்ரித ரஷகாயை நம: ஓம் ஓம் அபீஷ்டதாயை நம் ஓம் விஷ்ணு ப்ரியே நம . ஓம் ஸ்ரீ மஹா விஷ்ணு துளசி தேவ்யை நம நாநாவித பரிமள புஷ்ப சமர்ப்ப யாமி என்று சொல்லி புஷ்பத்தை போட வேண்டும். பிறகு துளசி மாடத்தை 3 முறை வலம் வந்து நமஸ்கரித்து நமது பிராத்தனை எதுவானாலும் வேண்ட வேண்டும். எப்போதும் தெய்வங்களின் திருமணம் நடக்கும் போது நமது நியாயமான கோரிக்கை எதுவானாலும் நடக்கும் . திருமண வயதில் இருக்கும் கன்னி பெண்கள் செய்தால் நல்ல கணவனை கொடுப்பாள். சுமங்கலிகள் பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அளித்து மஹா பிராமணர்களுக்கு தானம் செய்த பலன் அளிப்பாள். இப்படியே அன்புடன் பூஜை செய்தால் அற்புதமாய் வாழ்த்திடுவீர் ஶ்ரீ தேவி தன் அருளால். 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ...... Savittri Raju #துளசி
Sri madura Helth & Skin Care
1.1K காட்சிகள்
கணவன் மனைவி ஒற்றுமை வேண்டி ஜானகி தேவி காயத்ரி🌺 ஓம் ஜகையாயை வித்மஹே ராம ப்ரியாய தீமஹி தந்நோ சீதா ப்ரசோதயாத் ஓம் அயோ நிஜாயை வித்மஹே ராம பத்ன்யைச தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத் ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே ராம பத்தின்யை ச தீமஹி தந்நோ சீதா ப்ரசோதயாத். ஜெய் சீதா ராம் - Savittri Raju🌺 #ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்!! ஸ்ரீராம ஜெயம் ! எல்லாம் ஜெயமே...
See other profiles for amazing content