ஃபாலோவ்
Thyagarajan Velmurugan
@2290917095
407
போஸ்ட்
940
பின்தொடர்பவர்கள்
Thyagarajan Velmurugan
707 காட்சிகள்
"கவியரசரின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்த காஞ்சி மகான்" கவியரசர் கண்ணதாசன் ஆத்திகத்தின் பக்கம் திரும்பத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. நாத்திகத்தை நாடி நின்றபோது காஞ்சி மடத்தின் பக்கம்கூட வந்திராத அவர் பக்திப் பாதைக்குத் திரும்பியதும் மகானின் தரிசனத்தை நாடி பலமுறை ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார். அப்படி ஒரு முறை அவர் காஞ்சி மடத்துக்கு வந்திருந்த சமயத்தில் மகானுக்கும் அவருக்கும் இடையேயான உரையாடல் ரொம்ப நேரம் நீண்டது. இந்து மதத்தின் தத்துவங்கள் பலவற்றில் தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார், கண்ணதாசன் இந்து மதம் சார்ந்த தத்துவங்களின் நம்பிக்கைகளின் இன்னொரு கோணத்தை அவருக்கு விவரித்துச் சொல்லிப் புரிய வைத்துக் கொண்டிருந்தார் மகாபெரியவர். அந்த சமயத்தில் சுவாமீ எனக்கு ஒரு சந்தேகம் பால் என்றாலே அது வெள்ளை நிறத்தில்தானே இருக்கும். ஆனால் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடல் நீல நிறத்தில் காட்சி தருவதாக அல்லவா குறிப்பிட்டிருக்கிறார்கள். புராணங்களும் அப்படித்தானே சொல்கின்றன அது எப்படி பாற்கடல் நீலமாகத் தெரியும் என்று கேட்டார் கவியரசர். அவருக்கு உடனடியாக பதில் சொல்லாத மகான் கொஞ்ச நேரம் இரு ஒருத்தர் இங்கே வரப்போகிறார் அவர் வந்ததும் உனக்கு விளக்கமா சொல்றேன் என்றார். பெரியவர் சொன்னபடியே காத்திருந்தார் கண்ணதாசன் சுமார் அரைமணி நேரம் கழித்து பெரிய நகைக்கடை ஒன்றின் உரிமையாளர் மகானை தரிசிக்க வந்தார். மகாபெரியவரின் பரமபக்தரான அவர் விலை உயர்ந்த மரகதக்கல் ஒன்றை எடுத்து வந்திருந்தார். கனிகள் புஷ்பங்களுடன் அந்தக் கல்லையும் வைத்து பெரியவர் முன் சமர்ப்பித்தார். தனக்கு முன்னால் வைக்கப்பட்டவற்றைப் பார்த்ததும் மகான் தன்னருகே இருந்த அணுக்கத் தொண்டர் ஒருவரை அழைத்தார். கோசாலையிலிருந்து ஒரு பாத்திரத்துல கறந்த பால் கொஞ்சம் வாங்கிண்டு வா சொன்னார் பிறகு கண்ணதாசனை தம்மருகே அழைத்தார். சில நிமிடத்தில் கறந்த பசும்பாலுடன் வந்தார் அணுக்கத் தொண்டர். அந்தப் பாலை இதோ இங்கே வை இந்த மரகதக் கல்லை எடுத்து அதுல போடு உத்தரவு பிறந்தது மகானிடமிருந்து. இந்த சமயத்தில் நகைக்கடை அதிபருக்குள்ளும் கவியரசருக்குள்ளும் இருவேறு விதமான எண்ணங்கள் ஓடின. சுத்தமான மரகதத்தைப் பரிசோதிக்கும் முறை, அதைப் பாலில் போட்டுப் பார்ப்பதுதான். எனவே, 'தான் கொண்டுவந்த கல்லின் தரத்தை சந்தேகப்பட்டு மகான் அப்படிச் செய்கிறாரோ?' என்ற எண்ணம் நகைக்கடைக்காரருக்குள் எழுந்து அவரைப் பதற்றப்படுத்தியது. கவியரசருக்கு உள்ளே கொஞ்ச நேரம் முன்னால் நாம் கேட்ட கேள்விக்கு யாரோ வந்ததும் பதில் சொல்வதாகச் சொன்னாரே அது இதுவாக இருக்குமோ என்ற எண்ணம் இழையோடியது. மகான் உத்தரவுப்படி பாலில் மரகதக் கல்லை இட்டதும் பால் முழுக்க இளம் பச்சை நிறமாகத் தெரிந்தது. என்ன பாலின் நிறம் மாறி இருக்கா இல்லை உள்ளே பச்சைக்கல் இருக்கறதால இப்படித் தெரிகிறதா தெரியாதவர் போல் கேள்விகேட்டு கவியரசர் முகத்தைப் பார்த்தார் மகான். புரிந்து கொண்ட தன் அடையாளமாக மெய்சிலிர்த்து வாய் பொத்தி நின்றார் கவிஞர். திருப்பாற்கடல் வெள்ளைதான் அதில் மேகவண்ணப் பெருமாள் சயனித்துஇருப்பதால் அந்த நிறத்தை உள்வாங்கி பாற்கடலும் மேகவண்ணமாய்க் காட்சி தருது எல்லோருக்கும் புரியும்படி சொன்னார் மகான். அதைக் கேட்டதும் நகைக்கடை அதிபருக்கும் சந்தேகம் தீர்ந்தது மகான் தான் சமர்ப்பித்த கல்லை சந்தேகப்படவில்லை. கவிஞருக்கு இருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்க அதைப் படுத்தியிருக்கிறார் புரிந்து கொண்ட அவர் மகானைப் பணிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். சற்று நேரத்துக்குப் பிறகு மகானிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்ட கவியரசர் அந்த அனுபவத்தையே பாடமாகக் கொண்டு ஒரு பாடலை இயற்றினார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமந் நாராயணா என்று இப்போதும் எங்காவது எதிரொலித்து எம்பெருமான் புகழ்பாடும் அந்தப் பாடல் பிறந்த வரலாற்றின் பின்னணியாக இருப்பது மகாபெரியவரின் இந்த மகத்தான அனுகிரஹம் தான் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
Thyagarajan Velmurugan
5.6K காட்சிகள்
"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை பாமர ஆசாமியிடம் பரமாசார்யா" துவாதசி பாரணையும் நெல்லிக்காயும் மகா பெரியவா எந்த விரதமானாலும் சரி துளிக்கூட நியம நிஷ்டை தவறாம அனுஷ்டிப்பார். சில விரதங்கள் இருக்கிற சமயத்துல கூடவே மௌன விரதத்தையும் சேர்ந்து அனுஷ்டிப்பார் ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்துட்டு மறுநாள் துவாதசி அன்னிக்கு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் பரமாசார்யா. வழக்கமா துவாதசி அன்னிக்கு மகா பெரியவாளைப் பார்க்க வர்றவா பலரும் நிறைய கனி வர்க்கங்களைத்தான் வாங்கிண்டு வருவா ஏன்னா முதல்நாள் உபவாசமிருந்த பெரியவா மறுநாள் பாரணை பண்றச்சே அந்தப்பழங்கள்ல ஒரு விள்ளலையாவது எடுத்துண்டா பெரும் புண்ணியம் கிடைக்குமேன்னுதான். அதே மாதிரி அந்த துவாதசியிலயும் நிறையபேர் வகை வகையான பழங்களை எடுத்துண்டு வந்து பெரியவாளுக்கு சமர்ப்பிச்சிருந்தா. அந்த சமயத்துல சாதாரணமா இருந்த பக்தர் ஒருத்தர் பெரியவா முன்னால் வந்து நின்னு நமஸ்காரம் பண்ணினார் அவர் கையில் மஞ்சள் பை ஒண்ணு இருந்தது. நமஸ்காரம் செஞ்சவருக்கு குங்குமமும் கல்கண்டும் குடுத்தார் மகாபெரியவா அதை வாங்கிண்டு நகர ஆரம்பிச்சார். அப்போ மகாபெரியவா கொஞ்சம் நில்லு அப்படின்னு உரத்த குரல்ல சொல்ல அந்த ஆசாமி சட்டென்னு நின்னு திரும்பிப் பார்த்தார். என்ன நீ இப்படிப் பண்றே எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே குடு அதை அப்படின்னார் பெரியவா. தன் கையில் இருந்த மஞ்சள் பையைக் கொஞ்சம் தயக்கத்தோட பார்த்த அந்த ஆசாமி இல்ல சாமீ அது வந்து வார்த்தைகளை முடிக்காம இழுத்தார். என்ன இங்கே ஆப்பிள் ஆரஞ்சுன்னு குவிஞ்சு இருக்கே இதுல நாம எடுத்துண்டு வந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கப்போறதுன்னு நினைக்கறியா. இதெல்லாத்தையும் விட அதுதான் ஒசந்தது அதுவும் துவாதசி அன்னிக்குக் கொண்டு வந்திருக்கே குடு அதை என்று சொன்னார் பரமாசார்யா. தன்கையில இருந்த பையை பவ்யமா பெரியவா கிட்டே நீட்டினார் அந்த ஆசாமி பக்கத்துல இருந்த சீடரைப் பார்த்தார் மகாபெரியவா. அதைப் புரிஞ்சுண்ட சீடர் மூங்கில் தட்டு ஒண்ணை எடுத்து அந்த ஆசாமி பக்கமா நீட்டி அதுல அந்தப் பையில இருந்த வஸ்துவை கொட்டச் சொன்னார். மஞ்சள் பையை மூங்கில் தட்டுல கவிழ்த்துக் கொட்டினார் அந்த ஆசாமி அதுலேர்ந்து குண்டு குண்டான நெல்லிக் காய்கள் அழகா கொட்டி தட்டை நிரப்பித்து. இன்னிக்கு பிக்ஷைல இதை அவசியம் சேர்க்கணும்னு சொல்லிடு சீடரிடம் சொன்னார் பெரியவா. எத்தனையோ பணக்காரா எடுத்துண்டு வந்து குவிச்சிருந்த ரகம் ரகமான கனி வர்க்கம் எல்லாம் நெல்லிக்காய்க்குக் கிடைச்ச பாக்யம் தங்களுக்குக் கிடைச்சுலையேன்னு தோணித்து அங்கே இருந்தவா எல்லாருக்குமே. அற்பமா தான் நினைச்சதை ஏத்துண்டு அற்புதமா ஆக்கிட்ட ஆசார்யாளை மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுட்டுப் புறப்பட்டார் அந்த ஆசாமி. துவாதசி அன்னிக்கு நெல்லிக்காய் கொண்டு வந்து குடுக்கணும்னு அந்தப் பாமர ஆசாமிக்கு எப்படித் தோணித்து அவர் நெல்லிக்காய் கொண்டு வந்துட்டு தராமாப் போறார்னு பரமாசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுது எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
Thyagarajan Velmurugan
629 காட்சிகள்
திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா கிண்டலா என்று சீடர்களுக்குப் புரியவில்லை ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை. ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம் பெரியவா தங்கியிருந்த அறையை ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம். அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி புடவைகள் சால்வைகள் வெள்ளிக்காசு தங்கக்காசு போன்ற சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன. ஓர் இரவு பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள் உட்காரக்கூட நேரம் கிடைக்காமல் உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டேயிருக்க வேண்டியியிருந்தது மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம் நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான். கனமாக இருந்ததால் சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா திருடன் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால் உடனே திருடன் திருடன் என்று கூப்பாடு போடவில்லை எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு சிஷ்யர்களை எழுப்பினார்கள். பக்கத்து ரூம்லே மரப்பெட்டியைத் தூக்க முடியாமே ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான் நீங்க போய் ஒத்தாசை பண்ணுங்கோ. பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு, உடனே விஷயம் விளங்கி விட்டது அவரும் சத்தம் போடாமல் மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார் ஒரே வெளிச்சம். திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான் அடாடா சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போயிட்டானே. பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச் சொல்லியிருக்கலாமே என்றார்கள் பெரியவா. இது என்ன கருணையா, கிண்டலா என்று சீடர்களுக்குப் புரியவில்லை. ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #periyava mahaperiyava #jai mahaperiyava
Thyagarajan Velmurugan
1.2K காட்சிகள்
"எத்தனை முறை படித்தாலும் என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன்" இப்படி ஒரு தபஸ்வியை ஸன்யாஸியை குருவை, ஆச்சார்யாளை மடாதிபதியை இனி இந்த ஜன்மம் இல்லை எந்த ஜன்மத்திலும் பார்க்க முடியாது. பிறர்க்குரிமையாக்கும் பெம்மானே போற்றி தங்களை எல்லாம் அழப் பண்ணுவதில் தான் எனக்கு என்ன அப்படி ஓர் ஆனந்தமோ ஆனால் இது ஆனந்தக் கண்ணீர். இந்த கண்ணீர் நம் பாவங்களை எல்லாம் துடைத்து நம்மையெல்லாம் புனிதப் படுத்தும் மேலே படியுங்கள். ஸ்ரீ ரா கணபதி அண்ணா அவர்கள் மைத்ரீம் பஜத புத்தகத்தில் பலமுறை நடந்த நிகழ்ச்சி ஸ்ரீ சரணாள் கடும் அலுவல்கள் முடித்து அப்போது தான் விஸ்ராந்தி செய்து கொள்ளப் போயிருப்பார். அப்போது வரும் பக்தர்களிடம் கிங்கரர்கள் பெரியவாளைத் தொந்தரவு செய்வதற்கில்லை என்று கூறி விடுவர். பக்தர்களும் மனிமில்லாமல் திரும்ப இருப்பர் சரியாக அச்சமயம் பார்த்து உள்ளேயிருந்து பெரியவாள் வெளியே வந்து விடுவார் அல்லது உள்ளேயே இருந்து கொண்டு குரல் கொடுப்பார். யாராவது வந்திருக்காளா யாரோ வந்தாப்பல இருக்கே நெழல் ஆடித்தேயார் வந்தா கூப்டுங்கோ அவாளை இப்படி ஏதேனும் சொல்லி தமது ஸ்ரமத்திற்கு மெய்யான பரிஹாரமாக அவர் கருதிய குறை தீர்க்கும் படலத்தைத் தொடங்கி விடுவார். கிங்கரர்களிடம் என் சிரமத்தை நினைக்கிறீர்களே வருகிறவர்களின் சிரமத்தையும் தான் நினைத்துப் பாருங்களேன். எங்கெங்கே இருந்து எல்லாமோ வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு காசையும் பொழுதையும் செலவழித்துக் கொண்டு பஸ்ஸில் ரயிலில் இடிபட்டுக் கொண்டு தானே வருகிறார்கள் அவர்களில் பல பேருக்கு அவசர ஜோலி இருந்து உடனே திரும்பும்படி இருக்கலாம். எனக்கு சிரம பரிஹாரம் என்று சொல்லிச்ரமப்பட்டு வந்திருக்கிற அவர்கள் மனசை உடைத்து இன்னும் ச்ரமப் படுத்தி அனுப்பலாமா என்பார். கோவில் வாயிலில் அமர்ந்த கோ மகனே கோவிந்தா உம்மை நமஸ்கரிக்கின்றேன். புன்னகை சிரிப்புடன் பூத்த மலராய் புவியை காக்க வந்த கலியுக வரதன் கச்சி மாமுனி காலடி பணிகின்றேன். ஆசை துறந்து என் ஆனவம் அழித்து ஆன்மீக சிந்தனை அடியேனுக்கும் அளித்த ஆதி சங்கரா உன்னை துதிக்கிறேன் உளமாற பாடுகிறேன். உன் அருளை நித்தம் பெற வேண்டுகிறேன் அப்பா. மோனமாய் தண்டம் தாங்கி, நெற்றியில் நீறு பூசி, ஞானமாம் ஒளியை வீசிக், கண்களால் ஆசி நல்கி, வானதி தலையில் சூடி, வானதாய்ப் பரந்த ஈசன் தானதாய் அமர்ந்த தேவே! உன்பதம் சரண் எமக்கே! சங்கரன் நாமம் எங்கள் சங்கடங்களைப் போக்கும். சங்கரன் தரிசனம் எங்கள் வாழ்வில் சரித்திரம் படைக்கும். ஹரி ஓம் பிறர்க்குரியாளர் என்று ஒரு சொற்றொடர் அடிக்கடி கேட்கிறோமே அதன் வார்ப்பு வடிவம் பெரியவா தான். "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
Thyagarajan Velmurugan
873 காட்சிகள்
பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார் அன்று ஏகாதசி தண்ணீர் கூட சாப்பிடமாட்டார். அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார் மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா, இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்து கொண்டிருக்கிறார் சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள் என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் இன்று ஏகாதசி நான் சாப்பிட மாட்டேன் என்றார். அவர் மராட்டிக்காரர் மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஆச்சர்யப்பட்ட பெரியவா சரி சாப்பிட வேண்டாம் டீயாவது குடித்து விட்டு வரச் சொல்லுங்கள் என்றார். அவரோ நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன் நீங்க கவலைப்படவேண்டாம் என்றார் அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார். அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு இப்படி ஏகாதசி தண்ணீர் கூட இல்லாமல் கழிந்தது மறுநாள் துவாதசி. ஏகாதசியில் பட்டினி கிடக்காவிட்டால் கூட நாமெல்லாம் துவாதசியில் பாரணை என்று சொல்லிக்கொண்டு சீக்கிரமாகச் சாப்பிட உட்கார்ந்துவிடுவோம். சாஸ்திரப்படி துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர். அப்படிப்பட்ட துவாதசியாக அமைந்து விட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்த நாள் பிரதோஷம் அதில் பகலெல்லாம் விரதமிருந்து இரவு சிவ பூஜை பண்ணி சிவ தரிசனமான பின் தான் உண்பது வழக்கம். அதிலும் பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் மகாசிவராத்திரி அன்றும் உபவாசம் தீர்த்தமாட மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார். அவ்வளவு கடுமையாக கடுமையாக உபவாசங்களைத் தொடர்ந்து அனுஷ்டித்தவர் அவர். அப்படிப்பட்டவர்தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை எனக்கு இன்னும் வரவில்லை என்கிறார். பின் குறிப்பு : இன்று கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
Thyagarajan Velmurugan
967 காட்சிகள்
"நடையா இது பெரியவாளின் நடை வேகம்" ஆசார்யாளோட நடைக்கு மற்றவர்களின் ஓட்டம் ஈடு குடுக்க முடியலை அவ்வளவு வேகமா நடந்தார் ஒரு பக்தருக்கு கொடுத்த் வாக்கை காப்பாற்றவதற்கு. ஒரு நாள் உச்சிவெயில் நேரத்துக்கு கொஞ்சம் நேரம் முன்னால் வரைக்கும் பக்தர்களுக்கு தரிசனம் தந்துண்டு இருந்த ஆசார்யா வரிசைல கடைசி பக்தருக்கு பிரசாதம் குடுத்து முடிச்சுட்டு சட்டுன்னு எழுந்துண்டுட்டார். தண்டத்தை எடுத்துண்டு, பாதரட்சையை மாட்டிண்டு முகாமைவிட்டு வெளியில வந்து மளமளன்னு தெருவில நடக்க ஆரம்பிச்சுட்டார். அவர் இப்படி திடுதிப்புன்னு புறப்பட்டதும் சில நிமிஷத்துக்கு யாருக்கும் எதுவும் புரியலை. பதைபதைக்கிற வெயில்ல எதுக்காக பரமாசார்யா அப்படிப் போறார்னே தெரியலே கொஞ்ச நேரம் பிரமை பிடிச்ச மாதிரி யோசிச்சுட்டு அதுக்கப்புறம்தான் சுதாரிச்சுண்டாங்க மடத்து சிப்பந்திகள். சுவாமிகள் நகர்வலம் வர்றச்சே கூடவே போற நாதஸ்வரம் தவில் வித்வான்கள் அவசர அவசரமா ஓடினாங்க. பட்டுக்குடை பிடிக்கிறவர் அதை எடுத்துண்டு ஓடினார் ஆனா ஆசார்யாளோட நடைக்கு அவாளோட ஓட்டம் ஈடுகுடுக்க முடியலை அவ்வளவு வேகமா நடந்தார். ஒரு வழியா ஆசார்யாளை நெருங்கினாங்க எல்லாரும் மணி பன்னிரண்டு ஆகவும் பரமாசார்யா ஒரு பக்தரோட வீட்டுக்குள்ளே நுழையவும் ரொம்பச் சரியாக இருந்தது. அப்போதான் எல்லாருக்கும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது ஒருசமயம் காஞ்சி மடத்துக்கு வந்திருந்த பக்தர் ஒருத்தர் பெரியவா திருச்சி பக்கம் வந்தா தன்னோட பிட்சையை ஏத்துக்கணும்னு வேண்டிக் கேட்டுண்டார். அப்போ லால்குடி முகாம் பத்தியெல்லாம் எதுவும் தீர்மானிக்கப் படவே இல்லை ஆனா குறிப்பட்ட நாள்ல சரியா பகல் பன்னண்டு மணிக்கு அவரோட கிருஹத்துக்கு பிட்சைக்கு வர்றதா வாக்கு தந்திருந்தார் மகாபெரியவா அந்ததினம் தான் அது. பல மாசத்துக்கு முன்னால நடந்த சம்பவம்கறதால ஆசார்யா அன்னிக்கு அங்கே பிட்சைக்கு போகணும்கறதயே மடத்து சிப்பந்திகள் எல்லாரும் மறந்து எந்த ஏற்பாடும் செய்யாம இருந்துட்டாங்க. அன்னிக்குன்னு பார்த்து பக்தர்களோட கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆசார்யா தரிசனம் தந்து முடிக்கவே மணி பதினொண்ணே முக்கால் ஆயிடுத்து அதனால தான் ரொம்ப வேகமா புறப்பட்டிருந்தார் பரமாசார்யா. ஒரு சின்ன விஷயத்தை சொன்னா ஆசார்யா எவ்வளவு வேகமா நடந்திருக்கார்ங்கறது புரியும். மணிக்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்துல ஒரு வாகனத்துல போனா மடத்துல இருந்து அந்த பக்தரோட வீட்டுக்கு கால்மணி நேரத்துல போகலாம் அவ்வளவு தொலைவு பத்தே நிமிஷத்துல நடந்தே போயிருக்கார் மகாபெரியவா. அப்படின்னா அவரோட நடை வேகம் எப்படியிருந்திருக்கும்னு நீங்களே நினைச்சுப் பார்த்துக்குங்கோ. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #jai mahaperiyava #periyava mahaperiyava #🙏கோவில் #🙏ஆன்மீகம்
Thyagarajan Velmurugan
768 காட்சிகள்
"என்னையே நினைத்து இரவு முழுவதும் காத்திருந்தாயே உன்னை விட்டுஸவிடுவேனா" எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம் பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம். பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide என்ற நாவலை மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி ஆயிரம் ரூபாய் பரிசளித்தது அவர் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர். அப்போது சுவாமிகள் மஞ்சள் சென்னைக்கு வெளிப்புறத்தில் தங்கியிருந்தார் பெரியவாளுடைய ஜன்ம நட்சத்திரத்து அன்று அவரை தரிசித்து ஒரு மலர் மாலையும் நூறு ரூபாய் பணமும் சமர்ப்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தார் பரணீதரன். முதல் நாளே மடத்துக்குச் சென்று விஸ்வரூப தரிசனமும் செய்து கொள்ளலாமென்று கிளம்பினார். இரவு பூஜையை முடித்துக் கொண்டு 10 மணி சுமாருக்கு பெரியவா தன் அறைக்குள் சென்றுவிட்டிருந்தார். நேரே வெளியே ஒரு பவழ மல்லி மரத்தின் அடியில் பரணீதரன் அமர்ந்தார் இரவெல்லாம் விழித்திருந்து விடியற்காலை தரிசனம் செய்யத் துடித்தார். தான் முதன் முதலாக அவருக்கு மாலை தர வேண்டும் என்று ஒரு ஆசை இது மட்டும் நடந்து விட்டால் எனக்குப் பெரியவாளிடம் உள்ள பக்தி தூய்மையானது. சத்தியமானது என்று அர்த்தம் பெரியவா அருள் எனக்குப் பூரணமாக இருக்கு என்று நினைப்பேன் என்று தனக்குள்ளேயே அவர் ஒரு பரிசோதனைக்கு உட்படத் தயார் செய்து கொண்டார். அப்படி நடக்கவில்லை என்றால் எவ்வளவு பாதிக்குமென்பதை எண்ணிப் பார்க்கவில்லை இரவு முழுவதும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ஒரு சின்ன சப்தம் கேட்டாலும் சுவாமிகள் விழித்துக் கொண்டு விட்டாரோ என்று ஓடி ஓடிப்போய் பார்த்துக் கொண்டிருந்தார். பொழுது புலர்ந்தது வயதான ஒரு அம்மா பெரியவா அறையின் கதவுக்கு முன் போய் நின்று கொண்டாள். அவர் தான் வழக்கமா விஸ்வரூப தரிசனம் பார்த்ததும் கற்பூர ஆரத்தி எடுப்பவர் மெள்ள மெள்ள சில பெண்மணிகள் வந்து சேர்ந்து கதவை மறைத்தபடி நின்று கொண்டு பாட ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னாலேதான் பரணீதரன் நிற்க முடிந்தது பெண்களை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறுவது அவருக்குப் பழக்கமில்லை இரவு கண் விழித்தும் பயனில்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் வந்தது. கதவு திறந்தது ஒளிவீசும் முகத்துடன் பெரியவா காட்சி தந்தார் கற்பூர ஆர்த்தியால் மேலும் ஒளி வீசியது. தான் நினைத்தபடி முதல் மாலையைத் தான் போட முடியாமல் போய்விட்டால் இதே எண்ணம் பரணீதரனை நிலைகுலய வைத்தது. அடுத்த நிமிடம் சுவாமிகள் கை நீண்டுகொண்டே வந்து ஒரு யானையின் துதிக்கை போல் ஆகி எல்லாப் பெண்களையும் தாண்டி அவர் தட்டில் இருந்த மாலையை முதலில் எடுத்துக் கொண்டது. எல்லாரும் ஆச்சர்யத்துடன் யாரந்த அதிர்ஷ்டசாலி என்று திரும்பிப் பார்த்தனர் அப்போது கிடைத்த சிறிய வழியில் பரணீதரன் விடுவிடு என்று பெரியவா அருகிலேயே போய் அவர் பாதங்களில் கொண்டு வந்திருந்த 101 ரூபாய் நாணாயங்களை அர்ப்பணித்துவிட்டு மெய்சிலிர்த்து நின்றார். பெரியவா அவர் தந்த மாலையைத் தலைமேல் சாத்திக்கொண்டு அனுக்கிரகம் செய்யவே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினார். என்னையே நினைத்து இரவு முழுவதும் காத்திருந்தாயே உன்னை விட்டுவிடுவேனா என்று ஒரு அருட்பார்வை பார்த்தார் பெரியவா. எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம் என்று பரணீதரன் உள்ளம் துதி பாடியது. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #🙏ஆன்மீகம் #🙏கோவில் #jai mahaperiyava #periyava mahaperiyava
Thyagarajan Velmurugan
1.4K காட்சிகள்
"சுவாமி நீங்க இந்த வயலினை தொட்டுக் கொடுக்கணும் ஒரு முஸ்லிம் அன்பர் மதம் கடந்த கருணை" மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு பெரியவாளை அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஏராளம். 1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி ஒரு முஸ்லீம் அன்பர தன்னுடைய மகனை குலாம் தஸ்தகீர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு. சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை நமஸ்கரித்தார்கள் என்னோட மகன் வயலின் வாசிக்கிறான். ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான் பெரியவங்க ஆசி வேணும் சாமிக்கு முன்னாலே வயலின் வாசிக்கணும் அனுமதி கிடைத்ததும் பார்வையில்லாத குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான். பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள் பின்னர் அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து பையனுக்கு யாரிடம் சிட்சை என்றும் கேட்டறிந்தார்கள். தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சி பூர்வமான தவிப்பு சுவாமி நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும் என்று சொல்லியே விட்டார். தொண்டர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது இது என்ன பிரார்த்தனை ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ. முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது பெரியவா ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி அந்த வயலினை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள். பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய் உருகிப் போனார்கள். இரண்டு வேஷ்டிகளும் மாம்பழங்களும் பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள் பெரியவா. மதம் கடந்த கருணை பெரியவாளுக்கு. "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" #periyava #mahaperiyava #truestory #kanchimahaperiyava #kanchimahan #kanchipuram #kanchikamakshiamman #kamakshiamman #mahaperiyavamagimaigal #sageofkanchi #devotional #viralvideo #hindutamil #periyava mahaperiyava #jai mahaperiyava #🙏ஆன்மீகம் #🙏கோவில்
See other profiles for amazing content