#🤵விஜய் சேதுபதி மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள் உட்பட பல முன்னணி நடிகர்கள் என் முன்னாடி இருக்குற இந்த வீட்டுக்கு ஷூட்டிங்க்கு வந்திருக்காங்க.
நான்தான் அவங்களை ஏரியைக் கடந்து செல்ல ஒரு படகில் அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போவேன்.
அவங்க எல்லாரும் திரும்பி போறப்போ எனக்கு ஏதாவது தருவேன்னு சொல்லுவாங்க
அதேபோல எதாவது தந்தவங்களும் இருக்காங்க
கண்டுக்காமலே போனவங்களும் இருக்காங்க
தமிழ் நடிகர் விஜய் சேதுபதி ஒரு தடவை ஷூட்டிங்க்கு வந்திருந்தாங்க.
ஷூட் முடிஞ்சு, நான் அவரை ஒரு படகில் அக்கரைக்கு கூட்டிட்டுப் போயிட்டுருக்கிறப்போ,
இந்தப் படகு உங்களுடையதான்னு கேட்டார்...
இல்ல இது வாடகைக்கு ,
ஒரு நாளைக்கு இவ்வளவு வாடகை கொடுக்கணும்னு சொன்னப்போ,
அவர் என்னைக் கேட்டார். இதை சொந்தமா வாங்க எவ்வளவு செலவாகும்?
நான் சொன்னேன், அதுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகுமுன்னு சொன்னேன்
அப்போ அங்க, படகில வச்சே 50,000 ரூபாய்க்கு ஒரு காசோலை எழுதி என்கிட்ட கொடுத்தார்.
இனி சொந்த படகை ஓட்டுங்கன்னு சொன்னாரு ❤️
கஷ்டப்பட்டு ஜெயிச்சவங்களுக்கு தான் வாழ்க்கையின் வலி தெரியும்..🙏