ஃபாலோவ்
Barakath Ali
@653257576
1,993
போஸ்ட்
9,441
பின்தொடர்பவர்கள்
Barakath Ali
546 காட்சிகள்
இந்துத்துவா தீவிரவாதியால் மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று! ஆட்டன் பரோவுக்கு ஆஸ்கர் வாங்கி கொடுத்தார்! சத்திய சோதனை மலிவு பதிப்பில் விற்பனை! சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே உருவானான்! காந்தி ஜெயந்திக்கு ஒரு நாள் அரசு விடுமுறை! தள்ளுபடியில் கதர் துணிகள்! மதவெறிக்காக உன்னைக் கொன்றார்கள். இன்னும் ரத்த பசி அடங்கவில்லை! நாளை ரூபாய் நோட்டுகளில் சாவர்க்கர் சிரிப்பார்! #😎வரலாற்றில் இன்று📰 #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🤭அரசியல் மீம்ஸ் #அரசியல்
Barakath Ali
538 காட்சிகள்
"செஞ்சோற்றுக் கடன் தீர்க்கச் சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா" #jayakumar #ADMK #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️
Barakath Ali
12.7K காட்சிகள்
இதே நாளில்தான்...! 2024 ஜனவரி 29-ஆம் தேதி இப்படி சொன்ன ஜெயக்குமார்தான், இந்த ஆண்டு ஜனவரியில் மதுராந்தகம் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை வரவேற்கப் போனார். #😎வரலாற்றில் இன்று📰 #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴
Barakath Ali
582 காட்சிகள்
பழைய பேப்பர்! எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ன செய்து கொண்டிருந்தது? என்பதற்கு இந்த பழைய பேப்பர் ஒரு சாட்சி. முதன்முறையாக ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற அன்று எடுக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் வண்ணத்தில் தொகுத்து துண்டுத் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டிருக்கிறது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ். அதன் அலுவலகம் லாயிட்ஸ் ரோட்டில் இருந்திருக்கிறது. #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
Barakath Ali
732 காட்சிகள்
*NDA ஆட்சி என்ற மோடி ஆட்சி!* அதிமுக ஆட்சி அல்ல. NDA ஆட்சி என்ற மோடி ஆட்சிதான் நடக்கும் என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது பிரதமர் மோடி பங்கேற்ற மதுராந்தகம் கூட்டம். ’ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது’’ என சொன்ன மோடி ஜெயலலிதாவை பாராட்டி பேசியது ஏன்? அன்புமணி, வாசன் ஆகியோரை பக்கத்தில் வைத்து கொண்டு வாரிசு அரசியல் பற்றி வகுப்பு எடுத்தது, திருப்பரங்குன்றத்தின் மீது மோடியின் திடீர் கரிசனம், பாஜக வாசிங் மிஷினில் தூய்மை ஆக்கப்பட்ட தினகரன் வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசியது என மதுராந்தகம் கூட்டத்தில் நடந்த குளறுபடிகளை அலசுகிறது வீடியோ! https://youtu.be/5E3Uu93HBS8?si=NPpwLr9ZbLr7Ho8R #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
Barakath Ali
1K காட்சிகள்
பழைய பேப்பர்! ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் சிக்கலுக்காக ஜனநாயகனுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் குரல் கொடுப்பது விவாதப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலை கதைக் கருவாக வைத்துத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை திரைப்படத்திற்குக் காங்கிரஸ் தடை கேட்ட வரலாறும் அன்றைக்குப் பேசு பொருளாக இருந்தது! #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #அரசியல்
Barakath Ali
622 காட்சிகள்
எலக்‌ஷன் என்சைக்ளோபீடியா! திருச்சி திமுக வெள்ளி விழா வெற்றி! திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை , மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி , துறையூர் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மாவட்டத்தின் மொத்தத் தொகுதிகளையும் 2021 தேர்தலில் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஓர் இடத்தில் கூட அதிமுக கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை . அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினார்கள். 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 9 தொகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது தி ருச்சி-1 (இப்போது திருச்சி கிழக்கு) தொகுதியில் பரணிகுமார், திருச்சி-2 (இப்போது திருச்சி மேற்கு), அன்பில் பொய்யா மொழி , ஸ்ரீரங்கத்தில் தி.ப.மாயவன், லால்குடியில் கே.என்.நேரு, திருவெறும்பூரில் துரை, மருங்காபுரியில் (இப்போது மணப்பாறை) புலவர் செங்குட்டுவன், தொட்டியம் தொகுதியில் கண்ணையன், முசிறியில் ஜோதி கண்ணன், உப்பிலியபுரம் (இப்போது துறையூர்) தொகுதியில் கருப்பசாமி யும் வெற்றி பெற்றிருந்தனர். 25 ஆண்டுகள் கழித்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக. திருச்சி மாவட்டத்தில் மீண்டும் 100 சதவிகித வெற்றியைப் பெற்றது. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவால் எப்படி ஓர் இடத்தைக்கூடப் பெற முடியவில்லையோ, அதே போன்ற வரலாறு 2021-ல் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பியது. 2021 தேர்தல் திருச்சியில் வென்றவர்கள்: 1. திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் (திமுக) 2. திருச்சி மேற்கு - கே.என்.நேரு (தி.முக) 3. ஸ்ரீரங்கம் - பழனியாண்டி (திமுக) 4. திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யா மொழி (திமுக) 5. லால்குடி - சவுந்திரபாண்டியன் (திமுக) 6. மணப்பாறை - அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) 7. முசிறி - காடுவெட்டி தியாகராஜன் (திமுக) 8. மண்ணச்சநல்லூர் - கதிரவன் (திமுக) 9. துறையூர் - ஸ்டாலி ன் குமார் (திமுக) 2026 தேர்தலில் அதே சாதனையை திமுக நிகழ்த்துமா? திருச்சி மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளை கட்சிகள் கைப்பற்றும்? #🚨கற்றது அரசியல் ✌️ #🤭அரசியல் மீம்ஸ் #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #அரசியல்
Barakath Ali
543 காட்சிகள்
பழைய பேப்பர்! ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் சிக்கலுக்காக ஜனநாயகனுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் குரல் கொடுப்பது விவாதப் பொருளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி படுகொலை கதைக் கருவாக வைத்துத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை திரைப்படத்திற்குக் காங்கிரஸ் தடை கேட்ட வரலாறும் அன்றைக்குப் பேசு பொருளாக இருந்தது! #அரசியல் #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️
See other profiles for amazing content