||श्री:||ஸ்ரீ (969)🏹🚩
#ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
திருவாழியாழ்வானைத் தம் வலது திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற எம்பெருமான் திருமால் முரன் என்னும் அசுரனின் ஆயுளையும் வலிமையும் அழித்தொழித்த மிடுக்கினையுடையவனாகத் திகழ்கிறான்.
இத்தகைய எம்பெருமானே நம்மைப் பாதுகாத்தருள்பவன் என்பதால் நம்முடைய அறிவு, ஆசாரம், பிறப்பு ஆகியவைகளினால் உண்டாகக்கூடிய தாழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை.
இவைகளைப் பற்றி எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் அவனே எல்லா காலத்திலும் நம்மைப் பாதுகாத்தருள் புரிகின்றான்.
என் மனமே ! இந்த எம்பெருமான் மாயவனையே நாம் நன்கு உய்வு பெறுவதற்கான நல்லதோர் உபாயமாகக் கொண்டு அவன் திருநாமங்களை எடுத்து ஓதிக் கொண்டிருந்தவாறு, அவனேயே பற்றிக் கொண்டிருப்பாயாக !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏