தன்னை மறைத்தது தன் கரணங்கள்.....!
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.
விளக்கம்:-
பொன்னால் உருவான அணிகலனைக் காணும் போது பொன் காட்சி தராது. பொன்னின் தன்மை காட்சி தரும் போது அணிகலன் காட்சி தராது. அது போன்றே அந்தக்கரணங்கள் வெளி உலகை நாடும் போது ஆன்மா புலப்படாது. ஆன்மா புலப்படும் போது அந்தக்கரணங்கள் வெளியுலகை விடுத்து ஆன்மாவில் ஒடுங்கி மறைந்து விடும்.
#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்
எம்பெருமானின் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏 🙏 🙏
#🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #✡️கார்த்திகை மாத விரதம்🙏