ஃபாலோவ்
Islamic Way ❤️ Of Life
@islamicwayoflifeofficial1
1,011
போஸ்ட்
2,709
பின்தொடர்பவர்கள்
Islamic Way ❤️ Of Life
600 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
"ஷாம்' தேசத்திற்கு நற்செய்தி உண்டு!! ❤‍🩹📌✨ இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை, ஒரு காலமும் இது பொய்யாகாது!! ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு!! இப்போது வேண்டுமானால் ஷாம் அலக்கழிக்கப்படலாம்!! ஆனால்... ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக!! இன்ஷா அல்லாஹ்!!! ஷாம் தேசம் என்பது சிரியா, பலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்!! ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்!! முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்!! அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்!! நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்!! நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்!! அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்!! உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூத் செய்ததும் ஷாமில் தான்!! வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்!! வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்!! முஹம்மத் (ஸல்) அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்!! பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்!! எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்!! உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்!! கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்!! முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்!! அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்!! மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்!! ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்!! யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்!! ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்!! தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்!! மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்!! கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்!! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது!! ஷாம் அழிக்கப்படுகிறது என்று யாரும் கவலைப்பட வேண்டாம்!! இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது!! இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம்மண்ணுக்கு அதிகம் பிராத்திப்பதே ஆகும்!! "உங்களுடைய பிரார்த்தனைகளில் ஒருபோதும் அந்த ஈமானிய உறவுகளை மறந்து விட வேண்டாம் இன் ஷா அல்லாஹ்!! 🇵🇸📌✨ #gaza🇸🇩 #freegaza #prayforgaza🇸🇩 #don'tforgetgaza #Palestine
Islamic Way ❤️ Of Life
534 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
🌒 *கிரகணத் தொழுகை* சூரிய, சந்திர கிரகணங்களின் போது தொழுவது கட்டாய சுன்னாவாகும். இமாம் இப்னுல் கையூம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்), ஷேய்க் பின் பாஸ் (ரஹ்) போன்ற அறிஞர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பதாலும், அவர்கள் அதனை செய்திருப்பதாலும், கட்டாயமாகத் தொழுதாக வேண்டும் என்று கூறுகின்றனர். 📌 *தொழுகைக்குரிய நேரம்:* சூரிய, சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிவதற்கிடைப்பட்ட நேரம் தொழுகைக்குரிய நேரமாகும். கிரகணம் முற்றாக நீங்கிவிட்டால், தொழுகையின் நேரம் முடிந்து விடும். கொஞ்சம் நீங்கி கொஞ்சம் இருந்தாலும் அது தொழுகைக்குரிய நேரமாகும். பார்க்க: புஹாரி (1060) மற்றும் முஸ்லிம் (904) கிரகணத்தைக் கண்டால், *‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’* எனப் பள்ளிவாசலுக்குத் கிரகணத் தொழுகைக்காக வரும்படி அழைப்பு விடுக்க வேண்டும். பார்க்க: புஹாரி (1045) கிரகணத் தொழுகை பள்ளிவாசலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், பெண்களும் குறித்த தொழுகையில் கலந்துகொள்ளலாம். பார்க்க: முஸ்லிம் (1645) மற்றும் புஹாரி (1053) கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். ஆனால், தொழும் முறையில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராயப் பேதம் உள்ளது என்றாலும், ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள், *இரண்டு ருக்கூஃகள்*, இரண்டு சுஜூதுகள் என்ற கருத்தில் இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர் உள்ளனர் என்பதுடன் அக்கருத்தே மிகச் சரியானதாகும். பார்க்க: புஹாரி: (1047) மற்றும் முஸ்லிம்: (901). எனவே அதன்படி தொழுகை முறை எவ்வாறு அமையும் என்பதைப் பார்ப்போம். 📌 *தொழும் முறை:* 1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதியதும், நீண்ட ஒரு சூறாவை ஓதுதல். 2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல். 3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல். 4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹாவையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூராவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல். 5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல். 6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல். 7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல். 8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல். தொழுகையின் பின்னர் குத்பா: கிரகணத் தொழுகையின் பின்னர் குத்பா உரை இடம்பெற வேண்டும். கிரகணத் தொழுகையில் குத்பாவும் ஒரு அங்கம் என்பது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்தாகும். ✍️ ஆக்கம்: எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலஃபி 🗣️ இன்று சந்திர கிரகணம் ஏற்படும் நேரத்தை நினைவில் நிறுத்தி, குறித்த நேரத்தில் கிரகணத் தொழுகையைத் தொழுவதுடன், அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்தல் மற்றும் பாவமன்னிப்புக் கோருவதனூடாக நபிகளார் வலியுறுத்திய இந்தக் கட்டாய சுன்னாஹ்வை நிறைவேற்ற முன்வருவோமாக! 📍 உங்களுடைய ஊர் பள்ளிவாசல்களில் கிரகணத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், நீங்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ள முடியும். #Moonesclipse #சந்திரகிரகணம் #HalalPost #islam #Miracle
Islamic Way ❤️ Of Life
531 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
🌕🌘சந்திர கிரகணம்🌒🌕 ✨எழுந்து விரைந்து தொழுங்கள் கிரகணம் விலகும் வரை. ✨அல்லாஹ்வை புகழுங்கள் (தக்பீர் கூறுங்கள்) ✨ஸதகா செய்யுங்கள். ✨அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். ✨இரண்டு ருகூ இரண்டு ஸஜ்தாக்கள் ஒரு ரக்ஆத்திற்கு (மொத்தம் நான்கு) நீண்ட நேரங்கள் செய்யுங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. ஸஹீஹ் புகாரி : 1045 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1042. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'. என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 1048. #islam #சந்திரகிரகணம் #Miracle #HalalPost #Moonesclipse
Islamic Way ❤️ Of Life
629 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
அஅ•காஸா பாதிக்கபட்ட மக்களுக்காக இந்த துஆவைக் கேளுங்கள்!! •اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ [في عزة] •Allahumma Anjil-Mustad'afeena Minal-Mu'mineena (Fee Gazza) •அல்லாஹும்ம அன்ஜில் முஸ்தள்'அஃபீன மினல் முஃமினீன ஃபீ காஸ்ஸா. •இறைவா காஸ்ஸா இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக!! *புகாரி:4598&6393* •இறைவா யஹுதிகளின் மீது உன் பிடியை இறுக்கி கடுமைப்படுத்துவாயாக!! •ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பனா 🤲🏻❤‍🩹✨ #islamicposts #gaza #muslimummah #islam
Islamic Way ❤️ Of Life
590 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
"தியாகம் ❤️📌✨ "லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை கூறிவிட்டால் சோதிக்கப்படாமல் மனிதன் விடப்படுவானா என்ற ரப்புல் ஆலமீனின் வார்த்தைகள் இஸ்லாம் என்றாலே தியாகம் தியாகம் என்றாலே இஸ்லாம் அல்லாஹு அக்பர் சோதனைகள் இல்லாமல் சுவனம் இல்லை அல்லாஹ் அவனின் நேசத்திற்குரிய அவனது தூதரையும் சோதித்தான் அவர்களின் ஈமான் அந்த சோதனையில் வெற்றியடைந்தது ஸுப்ஹானல்லாஹ் ❤️✨ முஃமின்கள் இந்த துன்யாவில் சோதிக்கப்படலாம் ஆனால் மறுமையில் மிக உயர்ந்த இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் இது வாழ்வதற்காக வந்த இடமில்லை இது மறுமைக்கான தேர்விற்கான இடம் நம்முடைய வாழ்வை இந்த துன்யாவில் இறையச்சமுள்ள தேர்வாக எழுதினால் இன் ஷா அல்லாஹ் நாளை மறுமையிலே மிக சிறப்பான உயர்ந்த தரஜாவை அடையலாம் இன் ஷா அல்லாஹ் நபி ஸல் அவர்கள் கேட்டால் ரப்புல் ஆலமீன் உஹது மலையை தங்கமாக மாற்றிக் கொடுப்பான் ஆனால் அவர்கள் இந்த துன்யாவின் மதிப்பை அறிந்தார்கள் அவர்கள் இந்த துன்யாவை விரும்பவில்லை நிரந்தரமான மறுமையைத் தேர்வு செய்து வெற்றியடைந்தார்கள் அல்லாஹு அக்பர் ஆம் இந்த துன்யா கொசுவின் இறக்கை அளவிற்குக் கூட சமமாகாது 📌✨ "உரிமையாளரால் தூக்கி எறியப்பட்ட இறந்த ஓர் ஆட்டை கடந்து செல்லும் போது கூறினார்கள் என்னுடைய உயிர் யார் கையில் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த ஆட்டிற்கு, அதன் உரிமையாளரிடத்தில் எத்தகைய மதிப்பும் இல்லாததுபோல், அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம், இதைவிடவும் மதிப்பற்றதாக இருக்கிறது. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்னத் அஹ்மத் அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: முஸ்னத் அஹ்மத் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். அதற்கு நான், "என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கறுப்பர்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும்,அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்" என்று கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5690. அத்தியாயம் : 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும் #islamicposts #islam #Miracle #HalalPost #Sacrifice
Islamic Way ❤️ Of Life
632 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
*" சோதனைகள்!!❤‍🩹* முஃமின்களுக்கு ஏற்படும் சோதனைகள் தண்டனை அல்ல அது ஆலமீன் நிஃமத் அருட்கொடை அதை அவன் நாடியவர்களுக்கு அதிகமதிகம் வழங்கி அவர்களின் ரப்புல் ஆலமீனின் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்வான் அந்த சோதனைகள் மூலம் அவன் அவர்களோடு உரையாடுவான் ஸுப்ஹானல்லாஹ்❤‍🩹🪄✨!! "இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான்.4 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5645. அறிஞர் ஃபுதைல் பின் இயாழ் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : அல்லாஹ் ஒருவரின் மீது நேசம் பாராட்டினால் அவருக்கு அதிக சோகத்தை தருவான். ஆனால், ஒருவரை வெறுத்தால் அவருக்கு உலக வாழ்க்கையை விசாலம் ஆக்கிவிடுவான். *நூல் : ஸியரு அஃலாமின் நுபலா 338/4* இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3 இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸஹீஹ் புகாரி : 5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 5641 5642. #Miracle #HalalPost #islam #Islamic Way Of Life Official #islamicposts
Islamic Way ❤️ Of Life
586 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.' அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். *ஸஹீஹ் புகாரி : 1294.* *🗓️ முஹர்ரம் 10 (ஆஷூரா தினம்) 🗓️* "இந்த தினத்தில் கொண்டாட்டங்களுக்கோ அல்லது துக்கம் என்ற பெயரில் தன்னைத் தானே வேதனை செய்து கொள்வதற்கோ இஸ்லாத்தில் எந்த அனுமதியும் இந்த தினத்தில் நபி ﷺ நோன்பு நோற்றார்கள் நம்மையும் நோன்பு நோற்கும் படி ஏவினார்களே தவிர வேறு எந்த சிறப்பும் இந்த நாளுக்கு இல்லை‼️ "இஸ்லாத்தில் கொண்டாட்டத்திற்குரிய இரண்டு நாட்கள் நோன்புப் பெருநாள் ✨💐 மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே ‼️ "அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ இந்த சமூகத்தை வழிகேட்டிலிருந்து பாதுகாப்பானாக எப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவி செய்தானோ அதேபோல் துன்பத்தில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு முஃமின்களுக்கும் உதவி செய்வானாக 😥 அல்லாஹ்வின் மீது வலுவான உறுதியான நம்பிக்கை கொண்ட கூட்டமாகவும் வெற்றி பெறக் கூடிய கூட்டமாகவும் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ உங்களையும் என்னையும் உண்மை முஃமின்களையும் ஆக்கி அருள் புரிவானாக... இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் ❤️ யா ரப்புல் ஆலமீன் ❤️✨💐🤲🏻... #ஆஷூரா #முஹர்ரம் #HalalPost #islam #Islamic Way Of Life Official
Islamic Way ❤️ Of Life
979 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
"ஏன்ூரா தினத்தில் நோன்பு வைக்க வேண்டும்⁉️ "இந்த ஆஷூரா தினம் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு படிப்பினை தரும் தினம் அல்லாஹ் ஒருவன் தான் வணங்கத் தகுதியானவன் என்ற கட்டளையை மக்களிடம் எடுத்து கூறியதன் காரணமாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் பலவிதமான துன்பங்களை சந்தித்தார்கள் 😥 அப்போது இறுதியாக ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும் மூஸா நபியை துரத்திக்கொண்டு பின்னால் வரும்போது மூஸா நபியுடன் சென்ற மக்கள் அவ்வளவு தான் அவர்கள் நம்மை நெருங்கி விட்டார்கள் என்று கூறினார்கள் அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களுடன் சென்றவர்கள் இடையில் நடந்த உரையாடலை அல்லாஹ் தெளிவாக தன் புத்தகம் அல்குர்ஆனிலே கூறுகிறான்: (அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ❤️ தன் மீது நம்பிக்கை கொண்டவர்களை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதற்கு அழகிய உதாரணம் ✨❤️ சுப்ஹானல்லாஹ்) சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர் அவ்னின் கூட்டத்தாராகிய) அவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது “நிச்சயமாக நாம் (அவர்களால்) பிடிபட்டுவிடுபவர்கள்தாம்” என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள். (அதற்கு) “ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என்னுடன், என்னுடைய இரட்சகன் இருக்கின்றான், (இதிலிருந்து ஈடேறும்) வழியை நிச்சயமாக எனக்கு அவன் காட்டுவான்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார். (அப்போது) “நீர் உம்முடைய (கைத்) தடியினால் கடலை அடிப்பீராக” என மூஸாவின்பால் வஹீ அறிவித்தோம், (அவர் அடிக்கவே) அது பிளந்துவிட்டது, ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. (பின் தொடாந்த) மற்றவர்களையும் அந்த இடத்தை நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடனிருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். பின்னர், (அவர்களைப் பின்தொடர்ந்த) மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை. ❤️ (அல்குர்ஆன் : 26:60-67) ❤️ "அல்லாஹ்வின் மீதே முழுமையான நம்பிக்கை வைப்போம் இன் ஷா அல்லாஹ் ❤️ அவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பாதுகாத்தது போன்று நம்மையும் பாதுகாப்பான் அவன் முஃமின்களை ஒருபோதும் கைவிட மாட்டான் அவன் இதுவரை முஃமின்களை கைவிட்டாதாக எந்த வரலாறும் இல்லை இனிமேலும் அவன் கைவிடப்போவதும் இல்லை இன் ஷா அல்லாஹ் ‼️ #முஹர்ரம் #islam #HalalPost #Miracle #ஆஷூரா
See other profiles for amazing content