ஃபாலோவ்
mariappan kumaravel
@mariappan0462
4,315
போஸ்ட்
16,700
பின்தொடர்பவர்கள்
mariappan kumaravel
168 காட்சிகள்
41 நிமிடங்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 கல்வி வழங்கும் சரஸ்வதி தேவி சாம்பவி தேவி ரூபமே போற்றி.. நவராத்திரி ஏழாம்நாள் நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
mariappan kumaravel
394 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 அருள் வழங்கும் காத்யாயினி அன்னையே சண்டிகா தேவி இந்திராணி ரூபமே போற்றி.. நவராத்திரி ஆறாம்நாள் நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
mariappan kumaravel
494 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 அருள் வழங்கும் அன்னையே வைஷ்ணவி தாயே போற்றி.. நவராத்திரி ஐந்தாம்நாள் நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
mariappan kumaravel
421 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 எளியோரை நேசித்து ஏழ்மையுடன்வாழ்ந்த ஷீரடி சாயியே போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
mariappan kumaravel
1.1K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 அருள் வழங்கும் அன்னையே வாராஹி ரூபமே போற்றி.. நவராத்திரி மூன்றாம் நாள் நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
mariappan kumaravel
573 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#சுதந்திரப் போராட்ட வீரர்கள் இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - போரில் குயிலி என்ன ஆனார்? வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஹைதர் அலி இருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளன. 1773 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது கணவர் முத்து வடுகநாத பெரியஉடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் மற்றும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார் .ஹைதர் அலி மற்றும் வேலு நாச்சியாரின் சந்திப்பு பரஸ்பர மரியாதை நிரம்பிய காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதை அடுத்த தலைமுறையில் திப்பு சுல்தானும் பின்பற்றினார். வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியின் உதவி கிடைத்தபோது, என்றென்றும் மறக்க முடியாததாக மாறிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது. இந்த மதிப்பு மரியாதை என்ன என்ற கேள்வியை விட்டுவிட்டு, வேலு நாச்சியார் யார், என்னென்ன சவால்களை எதிர்கொண்டார் என்ற தகவலை நாம் முதலில் பெறுவோம். இளவரசியில் இருந்து மகாராணியாக ஆன கதை; வேலு நாச்சியாரின் பெற்றோர், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள். 1730 இல் பிறந்த தங்கள் ஒரே குழந்தையான வேலுவுக்கு அவர்கள் குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட பல மொழிகளில் அவருக்கு ஞானம் இருந்தது. வேலுநாச்சியாருக்கு 16 வயதான போது சிவகங்கை இளவரசருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர். கணவரின் கொலை மற்றும் ஹைதர் அலியுடன் சந்திப்பு; 1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார். தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. ஹைதர் அ லியுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க வேலு நாச்சியார் தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார். "ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்," என்று ஷூபேந்திரா எழுதுகிறார். "ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்." என்கிறார் அவர். "விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.” என்று அவர் குறிப்பிடுகிறார். ராணி வேலுவின் முகத்தில் புன்னகை பரவியது. "குயிலி, நீ எப்பொழுதும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து விடுகிறாய். நீ உடையாளுக்கு பெருமை சேர்த்திருக்கிறாய் என்று வேலு நாச்சியார் கூறினார். போரில் குயிலி என்ன ஆனார்? விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர். சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார். 'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர். வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள். திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர். "ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள். "அது சரி, என் மகள் குயிலி எங்கே?" என்று வேலு நாச்சியார் கேட்டார். 'உடையாள்' பெண்கள் கண்களைத் தாழ்த்தினர். "எங்கள் தளபதி பிரிட்டிஷ் வெடிமருந்துகளை அழிக்க உயிர் தியாகம் செய்துவிட்டார்," என்று அவர்கள் பதில் அளித்தனர். குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார். அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார். ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. 1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார். முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார். "”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார். திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார். தமிழ் கலாசாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார். 2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் வீரத்தை போற்றும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது.
mariappan kumaravel
887 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 அருள் வழங்கும் அன்னையே போற்றி.. போற்றி.... நவராத்திரி முதலாம் நாள் பூஜை ஆரம்பம் நற்காலை வணக்கம் 🌹🍀🌺🌸🙏🙏
mariappan kumaravel
941 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இன்று புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நற்காலை வணக்கம்💐🌷🌹🍀🌺🌸🙏🙏🙏🌑🌑🌑🌑🌘🌘🌑🌑🌑
See other profiles for amazing content