* *🌺 இது உங்கள் வாழ்வுக்கான நல் வார்த்தை 09/10/2025:*
*தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்’’ (மீகா 2:13).*
**பிரியமானவர்களே!* *நான் எதை செய்தாலும் எல்லாம் தடையாக இருக்கிறதே, எதுவுமே எனக்கு வாய்க்கவில்லையே என்று கவலையுடனும் வேதனையுடனும் இருக்கிறீர்களா? கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று இந்த தடைகளை உடைக்கப்போகிறார் கவலைப்படாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடை செய்யும்படியும், ஆவிக்குறிய வாழ்க்கையில் தடைகளை உண்டுபண்ணும்படியும் அநேக விதங்களில் எதிராளியாகிய சாத்தான் தந்திரமான வழிகளில் வருவான். ஆனாலும் கர்த்தர் நமக்கு முன்பாக செல்லுகிறபடியால் அவர் எல்லா தடைகளையும் நீக்கி நம்முடைய காரியங்கள் வாய்க்கும்படி செய்வார். வேலையில் பிரச்சனை, திருமணத்தில் பிரச்சனை, வீடுகட்டுவதில் பிரச்சனை, எதை எடுத்தாலும் எல்லாம் பாதியில் நின்று விடுகிறதே ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று விரக்தியுடன் இருக்கிறீர்களா? விசுவாசத்தை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு முன்பாக தடைகளை நீக்குகிறவர் போகிறார். எல்லா தடைகளும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு ஒன்றுமில்லாமல் போகப் போகிறது. விசுவாசத்துடன் ஜெபித்து நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். .ஆமென்*
*🛐உங்களுக்காக ஜெபிக்கிறேன்*✍️
**PR PAUL HAGIN.*
*NEW COVENANT STONE MINISTRIES*
📞
*+918838540945* #👏இயேசு #✝️கிறிஸ்தவ பாடல்கள்🎶 #✝️பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪வேளாங்கண்ணி சர்ச் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #✝️இயேசுவே ஜீவன் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #📺வைரல் தகவல்🤩