ஃபாலோவ்
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
19,830
போஸ்ட்
93,289
பின்தொடர்பவர்கள்
ல.செந்தில் ராஜ்
2.2K காட்சிகள்
15 மணி நேரத்துக்கு முன்
சிவசிவ🙏🏻 🌻கருவாய்க் கிடக்கும் நாள் முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோயில்கள் 1. கரு உருவாக ---🔱கரூர் பசுபதீஸ்வரர் கோயில் 2. சுகப் பிரசவத்திற்கு --– 🔱திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் 3. நோயற்ற வாழ்விற்கு --- 🔱வைதீஸ்வரன் கோயில் வைதிய லிங்கக் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் 4. தீரா நோய் தீர ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோயில் 5. நவ கிரக தோஷங்கள் நீங்க -- 🔱திருக்குவளை (திருக் கோளிலி) கோளிலிப் பெருமான் கோயில் உள்ளிட்ட ஏழு சப்த விடங்கத் தலங்களான தியாக ராஜர் கோயில்கள் 6. நாக தோஷம் நீங்க --- 🔱புதுக் கோட்டை அருகே பேரையூர் நாக நாதர் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், திருநாகேஸ்வரம் நாக நாதர் கோயில், திருப் பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் மற்றும் எல்லா நாக நாதர் நாகேஸ்வரர் கோயில்கள். 7. பித்ரு சாபம் தோஷம் நீங்க --- 🔱திருத்திலதைப் பதி மதி முத்தர் கோயில் 8. சிறந்த ஞானத்திற்கு ----🔱-திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் கோயில், ஞானஸ்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 9. நல்ல கல்விக்கு -- திரு இன்னம்பர் எழுந்தறி நாதர் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில் 10. கலைகளுக்கு ------🔱 சிதம்பரம் நடராஜர் கோயில் 11. காரிய வெற்றி பெற ---- 🔱எட்டு வீரட்டேஸ்வரர் கோயில்கள் 12. எண்ணம் ஈடேற ---– 🔱திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில் 13. செல்வம் சேர --- 🔱நாகைக் காரோணம் காரோணேஸ்வரர் கோயில், திருப்புகலூர் கோணப்பிரான் கோயில், திருவீழிமிழலை வீழியழகர் கோயில், திருவாவடுதுறை கோமுத்தீஸ்வர் கோயில், விருத்தாச்சலம் விருத்த கிரீஸ்வரர் கோயில், திருக்கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், அசிரில் கரை அழகார் புத்தூர் படிக்காசுப் பரமர் கோயில் மற்றும் பல கோயில்கள். 14. காணாமல் போனவை கிடைக்க ---- 🔱திருவானைக்கா ஜம்புகேவஸ்வரர் கோயில், திருமுருகன் பூண்டி முருக நாதர் கோயில் 15. பதவி, அரச பதவி, உயர் பிறவி பெற ---- 🔱காஞ்சிபுரம் தேவ சேனாபதீஸ்வர் கோயில், முருகன் சிவ பூஜை செய்து தேவ சேனாதிபதியாகப் பதவி பெற்ற தலம் (குமரக் கோட்டம்) முருகன் கோயில் என்று தவறாக வழங்கப்படுகிறது, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில் (எலி சிலந்தி குரங்கு மனிதனாகப் பிறந்து உலகம் ஆள அருள் செய்த ஈஸ்வரன் கோயில்கள்) 16. திருமணத் தடை நீங்க --- 🔱திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில் 17. பிரிந்த தம்பதியர் ஒன்று சேர -🔱--- செய்யாத்த மங்கை அயவந்தி நாதர் கோயில் 18. மலட்டுத் தன்மை நீங்கிக் குழந்தை உண்டாக 🔱செய்யாறு திருவோத்தூர் வேத புரீஸ்வரர் கோயில், திருவெண்காடு வெண்காட்டீசர் கோயில் 19. கடன் தீர ---- 🔱திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருச்சேறை சார பரமேஸ்வரர் கோயில். இவை சீனிவாசப் பெருமாள் வழிபட்டுக் கடன் தொல்லை நீங்கிய தலம் (கடன் வாங்காமல் வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை) 20. பில்லி சூனியம் ஏவல் சாபம் பேய் பித்தம் விலக ----- 🔱திருக்குற்றாலம் குறும்பலா நாதர் கோயில். திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில் 21. தாவரம் பூ கருகாமல் செழிப்புடன் வளர --– 🔱திருக் கருகாவூர் முல்லை வன நாதர் கோயில் (தலவரலாறு தேவாரத்தில் உள்ளது. *கோயிலோடு கருவுக்கும் அம்மனுக்கும் சம்பந்தம் இல்லை. கர்ப ரட்சாம்பிகை பிற்காலக் கற்பனை அம்மன்*. 22. மழை பொழிய, பயிர் வளர ----- 🔱மீயச்சூர் மேக நாதர் கோயில். இந்தக் கோயிலுக்கும் லலிதாம்பிகைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆகம விதிக்கு மாறுபட்டு அமைந்துள்ள இந்த அம்மன் சந்நிதி தற்காலச் சந்நிதி. 23. 🔱பகையை வழக்குகளை வெல்ல –-- மதுரை சொக்க நாதர் கோயில் 24. சகல பாவமும் தீர ----🔱 பாப நாசம் பாப நாசர் கோயில் 25. கண் பார்வைக்கு --- 🔱காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் , திருவாரூர் தியாக ராஜர் கோயில் திருவீழிமிழலை வீழிநாதர் கோயில் திருக்காளத்தி காளத்தி கிரீசர் கோயில் திரு மயிலை வெள்ளீஸ்வரர் கோயில் 26. பாதுகாப்பான பயணத்திற்கு ---– 🔱விரிஞ்சிபுரம் வழித் துணையப்பர் கோயில் 27. அச்சம் குழப்பம் கவலை மரண பயம் நீங்கி மன நிம்மதிக்கு ---- 🔱திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில், திரு வலிவலம் மனத் துணையப்பர் கோயில், திருக் கடையூர் கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில், தருமபுரம் யாழ் மூரி நாதர் கோயில், திருவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோயில், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் தண்டீஸ்வரர் கோயில் மற்றும் யமன் சிவ பூஜை செய்த அத்தனைக் கோயில்களும். 28. விபத்து நீங்க, உயிர் பிழைக்க ---- 🔱ஆலங்குடி, ஆடுதுறை, திருப் பழனம் ஆபத் சகாயேஸ்வரர் கோயில்கள் 29. நீண்ட ஆயுள் உண்டாக -- 🔱இறந்தவர் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்த திருக் கடையூர் கால சம் ஹார வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கொற்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில், திருமருகல் மாணிக்க வண்ணர் கோயில், திருச் செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் கோயில், திருமயிலை கபாலீஸ்வரர் கோயில், கரூர் பசுபதீஸ்வரர் கோயில், திருபுன்கூர் சிவலோக நாதர் கோயில். 30. சிறந்த பிரம்மச்சர்ய சந்நியாச வாழ்க்கைக்கு ---- 🔱திருக் குறுக்கை காம தகன வீரட்டேஸ்வரர் கோயில், திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில் 31. இனிய முறையில் உயிர் பிரிய ----- 🔱திருப் புகலூர் கோணப்பிரான் கோயில், திருவஞ்சைக் களம் அஞ்சைக் களத்தப்பர் கோயில் 32. மீண்டும் பிறவாத முக்திக்கு ----- 🔱திருப்பெருந்துறை ஆளுடையார் கோயில், மதுரை சொக்க நாதர் கோயில், ஆச்சாள் புரம் சிவலோகத் தியாகேசர் கோயில், திருவதிகை புரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோயில், திருக்கோவிலூர் அந்தகாசுர வத வீரட்டேஸ்வரர் கோயில். எந்த வாசல் வழியாக நுழைந்தாலும் வலமாகச் சென்று மூலஸ்தானருக்கு நேர் எதிரே உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். உதாரணமாக மதுரை சுந்தரேசர் கோயிலில் கொக்க லிங்கப் பரம்பொருளுக்கு நேர் எதிரே பிரகாரத்தில் நந்தி மண்டபத்தில் உள்ள நந்தியை வணங்கி அனுமதி பெற வேண்டும். இது கல் மாடு தானே இதற்கு என்ன தெரியப் போகிறது என்று செயல்பட்டால் ஈஸ்வரனும் கல்லாகத் தான் இருப்பார். கடவுளாக அருள் பொழிய மாட்டார். ஒரு பலனும் உண்டாகாது. சிவ நினைவோடு சிவ பரம்பொருளை மட்டுமே வழிபட்டால்தான் பலன் உண்டாகும். சிவாய நம🙏🏻 திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #சிவன் #சிவ #சிவ சிவ
ல.செந்தில் ராஜ்
4.1K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
முத்தா! உந்தன் முகம் ஒளிநோக்கி! முறுவல் நகைக்கான! அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!🤭😞😪💓💔🔥🙏 மகாதேவ் வெகு பணிவுடன் சிவ வணக்கம் 💓💔🔥🙏மகாதேவா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #s #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏
ல.செந்தில் ராஜ்
2.2K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
நாளை 12.11.2025 தேய்பிறை அஷ்டமி ********************************************* கால பைரவர் விரதம் ************************* பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழி பாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். ◆சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றா ன தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். ◆இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ◆ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர். ◆முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்தி ரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். ◆மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர். ◆எல்லா வற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவ மூர்த் தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித் தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவி ல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். பைரவர் என்றால் ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள்.அதாவது தன்னை அண்டியவர்களி ன் குறைகளைக் களைய அவர்களின் எதிரிக ளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்கு பவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக் குபவர்’ என்றும் பொருள் உண்டு. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்க ளில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்கா க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்த ல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பை ரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’. காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிக ளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக்காற்றில் இருந்து தான் திருவா க்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங் கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற் றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம். கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்க ளை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண காலபைரவரின் அருள் மிக அவசியம் ஆகும். உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியை தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம், புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்ற தோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெரு வாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத் தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம். ஓம் நமசிவாய.. ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி...🙏🙏🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #கால பைரவர்
ல.செந்தில் ராஜ்
1.4K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *11.11.2025* 🌹 🌻 *வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததைக் கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை* 🌻 🌻 *வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள்* 🌻 🌻 *இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்* 🌻 🌻 *ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்* 🌻 🌻 *எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே பணிந்து வந்து கூடப் பழிகள் சொல்லாதே* 🌻 🌻 *நடக்கின்ற தூரம் வெகுதூரம் உன் கால்களைக் கட்டாதே* 🌻 🌻 *கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும் நீ கண்ணீர் சிந்தாதே* 🌻 🌻 *வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும் நீ வலிகளைத் தாங்கி ஓடு ஓடு* 🌻 🌻 *காலங்கள் இங்கே காணாமல் போகும்* 🌻 🌻 *அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே* 🌻 🌻 *எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 🙏 👍👍👍* 🌻 🤲 முருகா இன்றைய 11-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 12-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #ஓம் முரு
ல.செந்தில் ராஜ்
5.4K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
🌹சித்தர்கள்* *சொல்லிய* *சமாதி* *நிலை* நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில் இருக்கும்பொழுது சுவாசிப்பதில்லை. கண்களை திறந்து எதையும் பார்ப்பதில்லை. உடலில் விந்து உற்பத்தியில்லை. இதனால் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மனம் இயங்குவதில்லை குழந்தை பிறந்து சுவாசிக்கத்தொடங்கியவுடன் மனம் இயங்க ஆரம்பிக்கிறது. குழந்தை கண் திறந்து பார்க்கத்தொடங்கியவுடன் மனம் இன்னும் வேகமாக இயங்குகிறது. குழந்தையின் பதினான்கு வயதில் உடலில் விந்து உற்பத்தி தொடங்கியவுடன் மனம் இன்னும் அதிவேகமாக இயங்குகிறது. அதாவது மனம் சுவாசம் கண் பார்வை விந்து இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவைகளில் ஒன்றை கட்டுப்படுத்தினால் மற்றவை தானே அடங்கிவிடும். மனிதன் குழந்தையாக தன் தாய் வியிற்றில் இருக்கும்பொழுது மனம் இயக்கமில்லாமல் மிக ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கிறான். இந்த நிலை பேரானந்த நிலை என கூறப்படுகிறது. இதுதான் மனிதனின் ஆதி நிலையாகும். இதுதான் பிறவா நிலை எனப்படுகிறது. அந்த நிலைக்கு திரும்பி போவதைத்தான் சமாதி என குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை துரியாதீதம் என்பர். துரியம் = தூக்கம் அதீதம் = ஆழ்ந்தது துரியாதீதம் = ஆழ்ந்த தூக்கம் சமம் + ஆதி = சமாதி ஆதி நிலைக்கு சமமாதல் சமாதியாகும். ஆதி நிலை என்பது மனமற்ற நிலையாகும். மனமற்ற நிலையே சமாதி நிலையாகும் மனமற்ற நிலைக்கு எப்படி செல்வது. விந்துவை கட்டுபடுத்தினால் மனம் அடங்கும். புருவ மத்தியில் கண் பார்வையை வைத்து பழகிவந்தால் மனம் அடங்கும். சுவாசத்தின் மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும். கண் கருவிழி மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும். விசய ஞானத்தை தெரிந்துகொள்வதால் மட்டும் சமாதி நிலயை எட்ட முடியாது. மேற்கூறிய முறைகளில் ஒன்றை கடைபிடித்து தியானம் பழகி வந்தால் மட்டுமே காலப்போக்கில் ஒரு நாள் சமாதி நிலைக்குள் போக முடியும். சித்தர்கள் சொன்ன சூட்சும ரகசியங்கள் இவை சித்தர்களை வணங்குவோம் சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்வோம் நம் கர்மவினையின் வீரியத்தை குறைத்து கொள்வோம்..... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ
ல.செந்தில் ராஜ்
1.1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
🌹சிவபெருமானை ஏன் ‘சுடுகாட்டு சாமி’ என்று கூறுகின்றனர் ஆதிப்பரம்பொருள் ஈசன் சிவபெருமான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார், கயிலாயத்தில் இருப்பிடம் கொண்டிருக்கிறார்; வெள்ளியங்கிரியில் தங்கி இருக்கிறார்; அனைத்து சிவாலயங்களிலும் வாசம் செய்கிறார்; இவ்வளவு ஏன் நாம் ஒருபிடி மண்ணை பக்தியுடன் லிங்க வடிவில் பிடித்து வைத்தால் அங்கும் வந்து விடுகிறார். இவ்வளவு இருக்க அவருக்கு பிடித்த இடம் எது தெரியுமா? சுடுகாடு தானாம்! சிவபெருமானுக்கும் சுடுகாட்டிற்கும் என்ன சம்மந்தம். அதற்கு சில காரணங்களை அவரே கூறியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த காரணங்களை கேட்டால் மெய் சிலிர்க்கிறது. அது என்ன என்று பார்ப்போமா? 🌹சிவபெருமானிடம் கேள்வி கேட்ட பார்வதி தேவி. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் 'பூமியில் உங்களுக்காக பிரத்யேகமான எவ்வளவோ ஆலயங்களும், மடங்களும், மலைகளும் இருக்கின்றதே, ஆனால் நீங்கள் ஏன் எப்பொழுதும் சுடுகாட்டில் தங்கிக் கொண்டிருக்கிறீர்கள் சுவாமி? என்று கேட்கிறார். அதற்கு சிவபெருமான், எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வருகிற ஒரே இடம் சுடுகாடு மட்டும் தான். அவர்கள் உயிரோ டு இருக்கும் போது யாருமே தூய அன்புட னோ பக்தியுடனோ என்னிடம் வருவது இல்லை. எனக்கு பொன் பொருளை கொடு, வீடு வாசலை கொடு, என செல்வங்களுக்காக மட்டுமே வேண்டுகின்றனர். 🌹முக்தியை நினைத்து கலங்கும் ஆத்மா: அவர்கள் இறந்த பிறகு உறவினர்கள் இறந்தவரை நினைத்து ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே கவலைப் படுகின்றனர். பின்னர் இறந்தவர் சேர்த்து வைத்து சொத்து, தங்கம், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். யாருடைய நினைவிலும் வாழக்கையிலும் இல்லாத அந்த இறந்தவரின் ஆத்மா அந்த நேரத்தில் தான் கலங்கி நிற்கிறது. நாம் வாழ்நாள் முழுவதுமே பொன் பொரு ளுக்காக மட்டுமே ஓடியிருக்கிறோம், மோட்சம் முக்தியை நினைத்து வாழவில்லை. அதனால் தான் இன்று தனித்து இருக்கிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்குமாம். 🌹உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன்: யாருமே துணை இன்றி பயந்து, கலங்கி, தன்னந்தனியாக தவிக்கும் ஆன்மாவிற்கு, நீ தனியாக இல்லை; உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி, சமாதானம் செய்து, தன் நிலையை நினைத்து தவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு முக்தி அளிப்பதற்காகவே நான் சுடுகாட்டில் வாசம் செய்கிறேன் தேவி, என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியுள்ளதாக இந்து புராணங்கள் தெரிவிக்கின்றன. 🌹அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் எம்பெருமான்: இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் நாம் தானே 'ஜகத பிதர வந்தே பார்வதி பரமேஸ்வரா', தாய் தந்தையாக இருந்து அவர்கள் வாழ்க்கையின் போதும், வாழக்கைக்கு பிறகும் நாம் தானே அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அது நம் கடமை தானே தேவி என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கேட்டுள்ளாராம். நீங்கள் சொல்வது சரி தான் சுவாமி, நான் இந்த ஒரு விஷயத்தை என்றுமே யோசித்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்புக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்காக தான் நீங்கள் சுடுகாட்டில் வாசம் செய்கிறீர்கள் என எனக்கு தெரியாமல் போயிற்று, என்று வருந்தினாராம். நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ
ல.செந்தில் ராஜ்
2.4K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *10.11.2025* 🌹 🌻 *மனிதனாகப் பிறந்துவிட்டால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி, என்று கூறுவார்கள்* 🌻 🌻 *ஆனால், ஒரு நல்ல மனிதனால் கட்டாயம் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும்* 🌻 🌻 *நமக்கு வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நேர்கிறது என்றால், அந்த கஷ்டம் அடுத்தவர்களால் உண்டாக்க படுவது அல்ல* 🌻 🌻 *‘நேற்று நாம் செய்த தவறு, இன்று நமக்கு கஷ்டமாக வருகிறது. அவ்வளவு தான்’. முதலில் இதை நாம் உணர வேண்டும்* 🌻 🌻 *அதாவது தரையில் இருக்கும் முல்லை நாம்தான் மிதித்து, காலில் குத்து கொண்டிருப்போம். இது நம்முடைய தவறு தான்* 🌻 🌻 *ஆனால் நம்முடைய மனமும், வாயும் என்ன சொல்லும்? அந்த ‘முள் குத்திவிட்டது’. முள் வந்து உங்களை குத்துச்சா* 🌻 🌻 *எந்த இடத்தில், எந்த கஷ்டம், நிகழ்ந்தாலும், அதற்கு நாம் காரணம் இல்லை, என்று நினைப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்* 🌻 🌻 *நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு, நாம் தான் காரணமாக இருக்க முடியும்* 🌻 🌻 *ஆகையால் மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக நாம் தவறாக எண்ணுகிறோம்* 🌻 🌻 *அது நம் மனதில் தான் இருக்கிறது 🙏 👍👍👍* 🌻 🤲 முருகா இன்றைய 10-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 11-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #thiruchentur murug an #முருகன் #🕉️ஓம் முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏
ல.செந்தில் ராஜ்
1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
நான் இறந்த பின் கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்.... அம்மா அப்பா என்னை கடைசியாக மடியில் வைத்துக்கொள்ள நினைக்கலாம்..!!! அக்கா தங்கை என் கை பிடித்து அழ நினைக்கலாம்..!! என் அண்ணன் என் முகம் பார்த்து கண்ணீர் விட நினைக்கலாம் கடைசியாய் ஒரு நொடி என் நெற்றியில் முத்தமிட நினைக்கலாம்...!!!! கணவர் கடைசி நிமிடத்திலாவது அருகில் இருக்க நினைக்கலாம்..!! என்மகன் என்னை தட்டி எழப்பி கட்டி அழ நினைக்கலாம்..!! தொலைந்த தோழியொருத்தி கடைசியாய் என் கரம் கோர்க்க வரலாம்..!! கூட பழகிய தோழிகள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கடைசியாய் கட்டித்தழுவி கதறி அழுதிட விரும்பலாம்..!! நான் அன்பைக் காட்டுவது தெரியா உறவு கடைசியாய் என் தலைக் கோத ஆசைப்படலாம்..!! உறவற்ற பெயரற்ற செய் நன்றி மறவா யாரோ கடைசியாய் என் பாதம் தொட விரும்பலாம்..!! என்னை விரும்பி வெறுத்த ஒருத்தர் என் முகம் காண வந்து நின்று அழுது கொண்டிருக்கலாம் ஒருமுறையாவது என் முகத்தைப் பார்த்து விட்டு செல்லட்டும்...!!! நீ இறந்து போனால் முதல் மாலை என்னுடையது தான் என்று ரோஜா மாலையை கையில் வைத்துக்கொண்டு உங்களை தேவைக்காகவோ உண்மையாகவோ நேசித்த உறவு வந்திருக்கலாம்...!!! மாலையை போட்டு விட்டு கண்ணீர் விட்டு செல்லட்டும் வழி விட்டு விடுங்கள் பெட்டியில் அடைக்காதீர்கள்...!!! உயிரற்று போனால்தானென்ன... கடைசியாய் எனக்கும் தேவையாய் சில வருடல்கள் இறந்த பின் என்னை கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்...!! எல்லாம் அந்த ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே..!! கண்ணீருடன்.... #மரணம் #கொரனோ மரணம்
See other profiles for amazing content