#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
பழம்பெரும் இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி பிறந்த நாள் சிறப்பு*
வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்) 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கர்நாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ் , மலையாளம் ,
தெலுங்கு , கன்னடம் , இந்தி ஆகிய
மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
திரைப்பட இசையமைப்பாளர்
1948ல் வெளிவந்த ' நல்லதங்காள் ' திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது. "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை இசை உலகில் மிகவும் பிரபலமான தட்சிணாமூர்த்தி ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
நல்லதங்காள், நந்தா என் நிலா , ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி , ஜெகத்குரு ஆதி சங்கரர், அருமை மகள் அபிராமி , உலகம் சிரிக்கிறது, எழுதாத கதை போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர்
இளையராஜா , பி.சுசீலா , யேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 4 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.
நான்கு தலைமுறை பாடகர்கள்
மலையாளத் திரைப்பட பாடகர் அகஸ்டின் ஜோசப், அவரது மகன் கே. ஜே. யேசுதாஸ் , யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் , மற்றும் விஜய் யேசுதாஸ் மகள் அமேயா ஆகியோர் தட்சிணாமூர்த்தியின் கீழ் பாடியுள்ளனர்
சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது;
சுவர்ணமால்யா யேசுதாசு விருது;
கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது;
மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்.
இசையமைப்பாளர் V.தட்சணாமூர்த்தி ஸ்வாமிகள் திரையிசைப் பயணம்
இசையமைப்பாளர் வெ.தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்றென்றும் கேரள தேசத்தின் தூய இசையின் பேரரசராக விளங்குகிறார்.
ஆன்மிகம் நிறைந்த சுவாமியின் முழு உடலும் வாழ்க்கையும் இசை என்று சொல்லலாம்.
ஒரு பக்கம் கான கந்தர்வன் கே.ஜே.ஜேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜேசுதாஸில் இருந்து, ஜேசுதாஸ், மகன் விஜய் ஜேசுதாஸ், மகள் அமேயா ஆகியோருக்கும்,
இன்னொரு பக்கம் இசைஞானி இளையராஜா தொட்டு பவதாரணி வரையும் ஒரு இசை ஞான குருவாக ஸ்வாமிகள் விளங்கி நிற்கின்றார்.
பழம் பெரும் முன்னணிப் பாடகி பி.லீலாவிலிருந்து, N.C.வசந்தகோகிலம், கல்யாணி மேனன் உள்ளடங்கலாக அவர் குருவாக விளங்கியது இன்னொரு மேன்மை.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் அவர்கள் மேடை இசைக் கலைஞராக இருந்த போது அவரைத் திரையிசையின் பக்கம் திருப்பியவரும் ஸ்வாமிகளே. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஸ்வாமிகளின் பந்தம் தொடர்ந்தது.
இதனால் பெரிய பக்தர் தலைமுறைகளின் சுவாமி மற்றும் குரு ஆனார்.
ஸ்ரீகுமரன் தம்பியின் பல மெல்லிசைப் பாடல்களை மலையாளிகளின் எப்போதும் பிடித்தமானதாக ஆக்கியது சுவாமியின் மாயம்தான்.
சிறந்த இசை இயக்குனருக்கான மாநில அரசின் திரைப்பட விருது, ஜேசி டேனியல் விருது, சங்கீத சரஸ்வதி விருது மற்றும் சுவாதி திருநாள் விருது உட்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக, சுவாமி இசைப் பிரியர்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பெற்றார்.
தொண்ணூற்றி மூன்று வயதில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில், சுவாமி இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வரை தூய இசையின் பக்தராக இருந்தார்.
இன்று கேரள மண் ஸ்வாமிகளுக்கான ஒரு நினைவு மண்டபம் அமைத்து அவரின் சேகரங்கள் அனைத்தையும் சேமித்துப் பாதுகாக்கின்றது.
இசை மேதையின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்