வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
624 Posts • 142K views
-
476 views 1 days ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் ஷாஜகான் ஷாஜகான் என்னும் பெயர் பெர்ஷிய மொழியில் "உலகத்தின் அரசன்" என்னும் பொருளிலிருந்து வருகிறது. பாபர், ஹுமாயுன், அக்பர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருக்குப் பின்னர் இவர் தான் ஐந்தாவது முகலாய மன்னராக இருந்தார். ... அவருடைய அரசாட்சி காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலமாக இருந்தது. ஷஹாபுதீன் முகம்மது ஷாஜகான் பிறந்த தேதி: 5 ஜனவரி, 1592 பிறந்த இடம்: லாகூர், பாக்கிஸ்தான் இறந்த தேதி: 22 ஜனவரி, 1666 இறந்த இடம்: ஆக்ரா போர்ட், ஆக்ரா அடக்கம் செய்த இடம்: தாஜ் மகால், ஆக்ரா
12 likes
13 shares
-
538 views 2 days ago
ஜனவரி 21, எம். எஸ். உதயமூர்த்தி நினைவு தினம் இன்று. (தோற்றம்: 08.04.1928 மறைவு: 21.01.2011) மயிலாடுதுறை சி. உதயமூர்த்தி தமிழக எழுத்தாளரும், தொழிலதிபரும், மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனரும் ஆவார். . 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர் ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’ என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர். ‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ உட்படப் பல நூல்களை எழுதியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. #வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
8 likes
16 shares
-
513 views 5 days ago
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் முதன்முதலாக பறக்கும் தட்டை (unidentified flying object (UFO) அமெரிக்கா Boston பகுதியைச் சேர்ந்த சிலர் இன்றைய தினம் பார்த்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த அமெரிக்கா Massachusetts Bay Colony ன் கவர்னர் John Winthrop தனது டைரிக்குறிப்பில் பதிவு செய்த தினம் இன்று. ( *18 ஜனவரி 1644*)
16 likes
10 shares