#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள்
வாழ்க்கையில் நடைப்போட துணை வேண்டும்.
ஆனால்
அவைகள் இறுதி வரை வர போவதில்லை
இந்த உலகிற்கு எப்படி வந்தாயோ அதை போலவே தான் அவர்களும்.
இந்த பிறவி எடுத்ததே ஒரு பொக்கிஷம். அதை நேசிப்பவருக்கு மத்தியில் பகிர்ந்துக் கொள்.
சில உறவுகள் சந்தோஷம் நிம்மதியையும் கொடுக்கும்.
சில உறவுகள் மனவலி நம்பிக்கை துரோகம் என வாழ்க்கையில் பொக்கிஷமான பாடங்களை உனக்கு புகட்டும்.
வாழ்வை புரிந்துக் கொள். எதற்கும் அஞ்சாதே. மனம் எப்போதும் சந்தோசத்தில் இருக்கட்டும்.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 08, 1825*
முதலாவது நீராவிக் கப்பல் (என்டர்பிரைஸ்) இந்தியாவில் சாகர் துறைமுகத்தை வந்தடைந்த நாள்.
இது நீராவி இயந்திரங்களைப் பயன்படுத்தி முதல் இங்கிலாந்து-இந்தியா பயணத்தை நிறைவு செய்தது.
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 08, 1991*
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு மாற்றாக திகழ்ந்து வந்த சோவியத் ஒன்றியத்தை முற்றாக கலைத்து விடுவதென முடிவெடுத்து அறிவிக்கப்பட்ட நாள்.
ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பெலாரஸ் தலைநகரில் கூடி விவாதித்து சோவியத் யூனியனை முற்றாக கலைத்து விடுவதென்றும் அதற்குப் பதில் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளைக் கொண்ட காமன் வெல்த் கூட்டமைப்பை உருவாக்குவதென்றும் முடிவெடுத்து ஒரு உடன்பாட்டு அறிக்கையை உருவாக்கி கையெழுத்திட்டனர்.
#குட்டி தம்பிக்கு இன்று பிறந்தநாள்
#குட்டி தம்பிக்கு இன்று பிறந்தநாள்
#சித்தப்பாவின் பிறந்தநாள் கவிதை
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அபுதல்ஹாவுக்கு
ஷப்பீர் சித்தப்பாவின்.....அன்பு கவிதை
இந்த புதிய நாளில்
மீண்டும் ஒரு முறை பிறந்தாயென கவலைகளை மறந்து உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாட மனமார
வாழ்த்துகிறேன்.
AbuThalha.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
born again on this new day..! I sincerely wish you to forget your worries and celebrate your birthday with enthusiasm...
Happy Birthday...,......அபூதல்ஹா..
#சிந்தனை செய் மனமே
🤔 *சிந்தனை துளிகள்* Thought Drops 🤔
தேடாத ஒன்று தேடி வரும்போது,
*தேவை இருக்காது.
தேவையில்லாத போது தேடும் எதுவும்,
*தேவையாக இருக்காது.
தேவை என்ற போது கிடைத்து விட்டால்,
*தேடலும் இருக்காது..
இருக்கும்போது தேடாவிட்டால்,
*தேடியதே இருக்காது..!!*
When something unfound comes searching,
there will be no need. Anything searched for when not needed,
will not be a necessity. If obtained when needed, *there will be no search.. If you don't search when it's there,
there will be nothing to search for..!!
#முயற்ச்சியின் பலன்கள்
நீங்கள் கடும் முயற்சி செய்தும் ஒரு செயலில் தோற்றுவிடுகிறீர்கள் எனில்...
நீங்கள் வெற்றிக்கு தகுதியற்றவர் என்பதல்ல...
அந்த செயலை வேறு விதமாக முயற்சி செய்து மிக எளிமையாக வெற்றி பெறலாம் என்பதே உண்மை...
ஏனெனில்
வெற்றியை பெறுவதென்பது எளிதான ஒன்றே...
அதற்கான சிறந்த வழியை கண்டறிவதில் தான் உங்களின் திறமை அடங்கியுள்ளது...
#கனிவாக மகிழ்ச்சியாக இருங்கள்
எப்போதும்
கனிவாக
மகிழ்ச்சியாக
சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்
இதனால்,
எதிர்மறையான விஷயங்கள் உங்களை நெருங்கவே முடியாது..!!
Always be
*Kind - hearted*
Joyful*
Empowered*
Be firm in your resolve in this way.
As a result,
*Negative energies won't be able to reach you..!!*
*சிந்திப்போம் செயல்படுவோம்!*
#மழை வானம்
வானில் இருந்து பெய்யும் மழையானது,
தீவிரப் புயலோடு
பொழிந்துப் பயன் இல்லை,பாதிப்பு தான்...
இடையில் நின்று,
நின்று பொழிந்தாலும் பயன் இல்லை...
தேவை இருப்போருக்கு,
பொழிந்தால் மட்டும் தானே பயன்...
மழைக்குத் தெரியுமா?
ஆதலால், அனைவருக்கும் பெய்கிறது...
செய்கின்ற உதவிகளை,தேவையானவருக்கு
செய்து கொண்டே இரு...
வெற்றி நிச்சயம்!
உற்சாகமான வணக்கம்
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
டிசம்பர் 07, 1930*
உலகின் முதல் தொலைக்காட்சி விளம்பரம், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்த, சோதனை ஒளிபரப்பு நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்ட நாள்.
சிபிஎஸ் வானொலி நிறுவனத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட ஃபாக்ஸ் ட்ராப்பர்ஸ் இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் ஒரு பகுதியை ஒளிபரப்பும் செலவினை ஏற்ற (ஸ்பான்சர்) ஐ.ஜே.ஃபாக்ஸ் ஃபர்ரியர்ஸ் என்ற நிறுவனத்தின் இவ்விளம்பரத்தை, சோதனை ஒளிபரப்பில் ஒளிபரப்பியதற்காகவும், வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பியதற்காகவும் இந்நிலையத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குப் பத்தாண்டுகள் கழித்தே, 1941 ஜூலை 01ல், அரசு அனுமதியுடன் தொலைக்காட்சி விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதால், அது முதல் விளம்பரமாகக் குறிப்பிடப்படுவதுண்டு.
விளம்பரம் என்பது இன்றைக்குச் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. அக்காலத்திலேயே, எகிப்தியர்கள் விற்பனைக்குப் பொருட்களிருப்பதை பேப்பிரஸ் தாளில் எழுதிவைத்தனர். கி.மு.11ம் நூற்றாண்டுக்கும் முன்னரே, சீனாவில் மிட்டாய் விற்க குழலூதியதே உலகின் முதல் ஒலி விளம்பரமாகும்.
#வாழ்க்கை ஒரு அஞ்சல் தலை
நீங்கள் எப்போதும் ஓர் அஞ்சல் தலையைப் போல் இருங்கள
இருங்கள் சென்று சேர வேண்டிய இடத்தை சென்றடையும் வரை
அந்த ஒரு விஷயத்தோடு ஒட்டியே இருங்கள்
அதாவது சில பொழுதாவது சோகப்படுங்கள்
ஆனந்தத்தின் அருமை
புரியும்
யாருக்காவது கண்ணீர் விடுங்கள்
புன்னகையின்
அருமை புரியும்
ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள்
வறுமையின் கொடுமை தெரியும்
மாளிகை விட்டு மண்குடிசைப் பக்கம் போய் வாருங்கள்.
அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்
மொழி புரியாத தேசம் செல்லுங்கள்.
கல்வியின் அவசியம்
தெரியும்
அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகிப் பாருங்கள்
மரணத்தின் வேதனை
புரியும்
குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள்
முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்.
யாருக்கும் ஞானியாக இருக்க வேண்டாம்
மனிதனாக இருக்க முயற்சிப்போம்













