-
ShareChat
click to see wallet page
@shabbir0360
shabbir0360
-
@shabbir0360
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#லதா மங்கேசுக்கர் பிறந்தநாள் இன்று லதா மங்கேசுக்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929* – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது. குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார். 1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது, இது எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி ஆவார். 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது. லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன. 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. 1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக, மும்பை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த லதா மங்கேஷ்கர், 2022 பெப்ரவரி 6 அன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
லதா மங்கேசுக்கர் பிறந்தநாள் இன்று - ShareChat
வரலாற்றில் இன்று செப்டம்பர் 28 1889 - ஃபிரான்சில் நடைபெற்ற, எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பொது மாநாட்டில், மீட்டர், கிலோகிராம் ஆகியவற்றின் அளவுகளும், இவற்றை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட்ட சமன்பாடுகளுக்காக, ஹைட்ரஜன் வெப்பமானி செண்ட்டிகிரேட் அளவையும் உருவாக்கப்பட்ட நாள் இவற்றிற்கான மூல முன்மாதிரிகள் (ப்ரோட்டோடைப்), பிளாட்டினம்-இரிடியத்தால் உருவாக்கப்பட்டதுடன், அவற்றின் நகல்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1668இலேயே ஜான் வில்க்கின்ஸ் என்ற ஆங்கிலேயே மெய்யிலாளர், பதின்ம அடிப்படையிலான நீள அளவையை முன்மொழிந்திருந்தார். ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின், அறிவியல் முன்னேற்றங்களின் கணக்கீடுகளுக்கு உதவியாக இல்லாத பழைய அளவீடுகளை மாறற விரும்பிய ஃப்ரெஞ்சு அறிவியல் கழகம் ஓர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையமே 1791இல் பதின்ம அடிப்படையிலான நீள அளவையையும், மீட்டர் என்ற சொல்லையும் கொண்டுவந்தது. கிரேக்க மொழியில் அளவிடுதல், எண்ணுதல், ஒப்பிடுதல் என்ற பொருள்தரும் வினைச் சொல்லான மீட்ரியோ, அளவீடு என்ற பொருள்தரும் பெயர்ச்சொல்லான மீட்ரான் ஆகியவற்றிலிருந்து இந்த மீட்டர் வந்தது. இதற்கான அளவு பலவாறு நிர்ணயிக்கப்பட்டு, பொதுத்தன்மை இல்லாமலிருந்த நிலையில்தான், 1875 மே 20 அன்று 17 நாடுகள் கையெழுத்திட்ட மீட்டர் ஒப்பந்தத்தின்படி, இந்த முதல் மாநாடு இவற்றுக்கான பொது அளவை நிர்ணயித்தது. இந்த மாநாடு நான்காண்டுகளுக்கு ஒருமுறை கூடி பல்வேறு அளவைகளையும் நிர்ணயம் செய்கிறது. எடைகளுக்கும், அளவீடுகளுக்குமான பன்னாட்டு அமைப்பு, இதற்கான குழுவின்மூலம் இதனை நடைமுறைப்படுத்துகிறது. மூன்றாவது (1901) மாநாட்டில் லிட்டர், நான்காவது (1907) மாநாட்டில் காரட், ஒன்பதாவது (1948) மாநாட்டில் ஆம்பியர், வாட் முதலான அளவைகள் வரையறுக்கப்பட்டன. 1948 மாநாட்டில்தான் வெப்ப அளவைக்கு பாகை செல்சியஸ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீட்டர், கிலோகிராம், நொடி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட இது எம்கேஎஸ் முறை என்றழைக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, 1960இல் நடைபெற்ற 11ஆவது மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அலகுகளுக்கான பன்னாட்டு (எஸ்ஐ) முறையை, அமெரிக்கா, லைபீரியா, மியான்மர் தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றன. #வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - weathereye 50 40 30 20 10 0 ৫6 -10 20 ஏ0 30 EosuN C 11|880 0  0 790 100 7 7 9 Il weathereye 50 40 30 20 10 0 ৫6 -10 20 ஏ0 30 EosuN C 11|880 0  0 790 100 7 7 9 Il - ShareChat
#சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று, தேசிய சாக்லேட் பால் தினத்தை நினைவுகூரும் வகையில், மக்கள் உயரமான, பனிக்கட்டி சாக்லேட் பாலை அனுபவிக்கிறார்கள் பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன. இந்த பானத்தை எந்த அமெரிக்க மதிய உணவகத்திலும் காணலாம், இது ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்தது. இந்த சாக்லேட் மகிழ்ச்சி 1400 களில் இருந்து வருகிறது, மேலும் அதன் புகழ் வளர்ந்து வருகிறது. வாழ்க்கையின் சிறிய இன்பங்களை ரசிக்கவும் பாராட்டவும் இது சரியான சந்தர்ப்பம். தேசிய சாக்லேட் பால் தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் நமது குழந்தை பருவ உணர்வுகள் கூச்சலிடுகின்றன. இது அதிகப்படியான காஃபின் இல்லை. சாக்லேட் பாலில் உள்ள காஃபின் உள்ளடக்கம் காஃபின் நீக்கப்பட்ட பானங்களுடன் ஒப்பிடத்தக்கது. 8-அவுன்ஸ் சேவையில் 2 முதல் 7 மில்லிகிராம் காஃபின் உள்ளது. பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன நிச்சயமாக, சாக்லேட் பால் வரலாறு சாக்லேட்டின் கண்டுபிடிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சூடான சாக்லேட் பானங்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்படுகின்றன.
சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 - ShareChat
#உலக சுற்றுலா தினம் இன்று செப்டம்பர்-27 உலக சுற்றுலா தினம் இன்று செப்டம்பர்-27 நமஸ்தே பெங்களூர் உலக சுற்றுலா தினத்தில் இன்று பூங்கா நகர் பெங்களூரில் செம்ம குளிர்...
உலக சுற்றுலா தினம் இன்று செப்டம்பர்-27 - ShareChat
#உறவுகள் இருக்கும் உறவு இறக்கும் வரையில் இருக்கும் பொருள் இழக்கும் வரையில் இரண்டின் அருமையும் இம்மாந்தர் உணர்வதில்லை இழந்த பொருளின் இடத்தை நிறைக்க இன்னொரு பொருள் இலகுவாய் இடலாம் இறந்த உறவின் இடத்தை நிறைக்க இயன்றவரை தேடினினும் இழந்த உறவு ஏனோ இழந்தது தான் இந்த பிறவியில் இப்பிறவியில் நாம் இருக்கும் வரை இருக்கும் உறவுகளுடன் இனிதுடன் இருப்போம் வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது.
உறவுகள் - ShareChat
#உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 நான் நிறைய கிராமங்கள் நகரங்கள் சுற்றி இருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த என் நண்பர் ஊரான ( Best Friend ) குட்டலாடம்பட்டி சேலம் & நாமக்கல் இரு மாவட்டங்கள் இடையே உள்ள கிராமம் இதயத்தை இதமாக்கும்...இன்பச் சுற்றுலா..! உலக சுற்றுலா தினம் செப்டம்பர் -27 அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 - ShareChat
#மறைந்த பாடகர் ஜுபீன் கார்க், ஒரு பாடகனின் மரணத்துக்காக அசாம் அழுது புரள்கிறது. மூன்று நாள்களாக அந்த மாநிலத்தில் வாழ்க்கை நிலைகுத்திக் கிடக்கிறது. கடைகள் திறக்கவில்லை. வீதிகளில் அவரது பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஜுபீன் கார்க், பிறப்பால் பார்ப்பனர். ஆனால், தனக்கு சாதியில்லை, மதமில்லை, கடவுள் இல்லை என்று அறிவித்துக்கொண்டவர். பூணூலை அகற்றிக்கொண்டவர். எளிய மக்களோடு தன்னை இணைத்துக் கொண்ட கலைஞர். அதிகாரத்துக்கு எதிராகப் பேசத் தயங்காதவர். நடிகர், இசையமைப்பாளர், கொடையாளர் என்று பல தளங்களிலும் செயல்பட்டவர். பல்வேறு விதமான கருவிகளை இசைக்கத் தெரிந்தவர். கோவிட் பெருந்தொற்றின்போது குவஹாத்தியில் உள்ள தனது இரண்டடுக்கு வீட்டை, மருத்துவ மையமாக்கத் திறந்துவிட்டவர். 40 மொழிகளில் 38 ஆயிரம் பாடல்கள் பாடியவர். தமிழிலும்கூட 'கண்கள் என் கண்களோ' என்ற இசைத் தொகுப்புப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பாலிவுட்டிலும் சிறிதுகாலம் செயல்பட்டாலும், மீண்டும் அசாமி மொழிக்கே திரும்பிவந்தவர். அப்போது அவர் கூறியது: பாலிவுட்டில் காட்டும் ஆட்டிடியூட் ரொம்ப அதிகம். அசாமில் நான் அரசனைப் போல வாழ்வேன். என்பாடல் வேண்டுமென்றால், அசாமுக்கு வாருங்கள். உல்ஃபாக்கள் செல்வாக்கு மிகுந்திருந்த காலத்தில் இந்தி, வங்க மொழிகளில் பாடுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இந்த உத்தரவுகளை அவர் துணிந்து எதிர்த்தார். பண்பாட்டுப் பயணமாக சிங்கப்பூர் சென்றிருந்தவர், கடலில் ஸ்கூபா முக்குளிப்பு செய்தபோது சிக்கல் ஏற்பட்டு இறந்துவிட்டார். 52 வயதில் இந்த எதிர்பாராத மரணம் நேர்ந்திருக்கக்கூடாது. ஆனால், அவர் தன்வாழ்வை வாழ்ந்திருக்கிறார். இத்தகைய சுதந்திர சிந்தனையாளர்களுக்கே உரியமுறையில் பல சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எடைபோடும் அளவுக்கு நமக்கு விவரம் தெரியாது. ஆனால், ஒரு கலைஞனுக்காக ஒரு மாநிலமே அழுகிறது எனில் இந்தக் குறள்தான் நினைவுக்கு வருகிறது: உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். அவரது மரணம் பற்றிய ஒரு செய்தியை இந்துஸ்தான் டைம்ஸ் இப்படி முடித்திருக்கிறது: "அவர் வெறும் சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல, அசாமின் ஆன்மாவும், குரலும் மனச்சான்றும் ஆவார்".
மறைந்த பாடகர் ஜுபீன் கார்க், - Rest in Peace Zubeen Garg Heartbeat of Assam Rest in Peace Zubeen Garg Heartbeat of Assam - ShareChat
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் சி. பா. ஆதித்தனார் ( *27 செப்டம்பர் 1905 24 மே 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat
#வானொலி வானொலியின் காலம் என ஒன்று இருந்தது. 90-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் 90-க்கு முன் பிறந்தவர்களுக்கு வானொலி என்பது ஒவ்வொரு வீட்டின் பொக்கிசம் என தெரியும். டெல்டாகாரர்களுக்கு பரீட்சயமான ஒலிபரப்புகள்,திருச்சி வானொலி,விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம். அப்போ எல்லாம் வீட்டில் இருந்த ரேடியோ,கலைஞர் டிவி சைசுக்கும் சற்று சின்னதாக கொஞ்சம் நீளமாக இருக்கும். இரண்டு திருகுகள்.சவுண்ட் வைக்க ஒன்று மற்றொன்று ஸ்டேசன் மாற்ற! மாலை நேரங்களில் ரேடியோ அப்பாவின் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். "மண்ணையெல்லாம் பொன்பொழிக்க செய்திடுவோம்,அதை பன் மடங்கு உற்பத்தியை பெருக்கிடுவோம்"என இரவு ஏழு மணிக்கே திருச்சி வானொலியில் உழவர் உலகம் நிகழ்ச்சி ஆரம்பித்து விடும். "தற்போது சம்பா சாகுபடியில் குருத்து பூச்சிகள் தென்படுகிறது விவசாயிகள் ஒரு டேங்குக்கு ஐம்பது மில்லி வீதம் மொத்தம் பதினைந்து லிட்டர் தண்ணீரில்..,"என விவசாய ஆலோசனைகளை சொல்லி கொண்டு இருப்பார்கள். "இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா தம்பி நம்மதான் வயல பார்த்து அதற்கு தகுந்த மாதிரி மருந்து அடிக்கனும்"என்பார் அப்பா! அதுவும் வெள்ளிக்கிழமை இரவு விஞ்ஞானம் வீராச்சாமி என்ற நிகழ்ச்சி போடுவார்கள் அதை கேட்கும் போதே மனதில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். "விஞ்ஞானம் வீராச்சாமி நானும் வந்தேனே"பாடலுடன் ஆரம்பிக்கும் நிகழ்ச்சி! இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு காரணம் மறுநாள் சனி,ஞாயிறு பள்ளி விடுமுறை! சரியாக காலை,மாலை ஆறரை மணிக்கு சென்னை அஞ்சலில்,"செய்திகள் வாசிப்பது செல்வராஜ் "என செய்திகள், காலை,இரவு 7-15 க்கு டெல்லி அஞ்சலில்,"செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சாமி"என ஆண்மை கலந்த குரல் வழி செய்திகள் நம்மை பரபரப்புக்குள்ளாகும். தேன் கிண்ணம்,இலங்கை வானொலி பாடல்கள் என எப்போதும் வானொலிகள் சுவராசியத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். பிடித்த பாடலை நினைத்த நேரத்தில் கேட்பதை விட,அடுத்த பாடல் என்னவென்று தெரியாமல் திடீரென நமக்கு பிடித்த பாடல் வரும் போது வருமே ஒரு உற்சாகம் அதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும். வாழ்வின் சுவாரசியம் என்பது திடீர் திடீர் என நம்மை ஏதோ ஒன்று மகிழ்ச்சி படுத்திக்கொண்டே இருப்பது ஆகும். அதை இன்றைய நவீன வாழ்வில் எதனாலும் கொடுக்க முடியவில்லை! ஆனால் ஒரு காலத்தில் அதை வானொலிகள் கொடுத்தன.
வானொலி - و و - ShareChat
#சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று, தேசிய சாக்லேட் பால் தினத்தை நினைவுகூரும் வகையில், மக்கள் உயரமான, பனிக்கட்டி சாக்லேட் பாலை அனுபவிக்கிறார்கள் பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன. இந்த பானத்தை எந்த அமெரிக்க மதிய உணவகத்திலும் காணலாம், இது ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்தது. இந்த சாக்லேட் மகிழ்ச்சி 1400 களில் இருந்து வருகிறது, மேலும் அதன் புகழ் வளர்ந்து வருகிறது. வாழ்க்கையின் சிறிய இன்பங்களை ரசிக்கவும் பாராட்டவும் இது சரியான சந்தர்ப்பம். தேசிய சாக்லேட் பால் தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது, மேலும் நமது குழந்தை பருவ உணர்வுகள் கூச்சலிடுகின்றன. இது அதிகப்படியான காஃபின் இல்லை. சாக்லேட் பாலில் உள்ள காஃபின் உள்ளடக்கம் காஃபின் நீக்கப்பட்ட பானங்களுடன் ஒப்பிடத்தக்கது. 8-அவுன்ஸ் சேவையில் 2 முதல் 7 மில்லிகிராம் காஃபின் உள்ளது. பல ஆய்வுகள் சாக்லேட் பால் ஒரு பிந்தைய வொர்க்அவுட்டை மீட்டெடுக்கும் பானமாகப் பாராட்டியுள்ளன நிச்சயமாக, சாக்லேட் பால் வரலாறு சாக்லேட்டின் கண்டுபிடிப்புடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சூடான சாக்லேட் பானங்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்படுகின்றன.
சாக்லேட் பால் தினம் செப்டம்பர்-27 - ShareChat