எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு ஆதரவாய் நிற்கும் சட்டம், பாலியல் வழக்குகள் என்று வந்துவிட்டால் மட்டும், கைவிரித்துவிடுகிறது.
பாதிக்கப்பட்டவர்,
ஏழைப்பெண்ணாக இருந்தாலும் சரி,
பிரபல நடிகையாக இருந்தாலும் சரி.
குற்றம்சாட்டப்பட்டவர்
சாதாரண நபராக இருந்தாலும் சரி,
பெரும் பிரபலமாக இருந்தாலும் சரி.
2017-இல் நடந்த சம்பவம்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி காட்டுப்பகுதியில், படப்பிடிப்பு முடிந்து காரில் பயணம் செய்த நடிகையை கடத்தி மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. வாகனத்தைத் தடுத்து உள்ளே புகுந்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது பெரும் விவகாரமானது.
பின்னனியில் சம்பந்தப்பட்டது ஒரு சூப்பர்ஸ்டார் (திலீப் ) என்பதால், ஒருவரும் வாய் திறக்கவில்லை. குறிப்பாக சினிமாக்காரர்கள்.
இருந்தாலும் நம்மூர் நடிகைகள் மாதிரி வாய்மூடி மௌனியாக இல்லாமல், கொஞ்சம் சோஷியல் விஷயங்களை அவ்வப்போது அலசும் மஞ்சுவாரியர், பார்வதி திருவோத், ரீமா கல்லிங்கல் எல்லாரும் இறங்கி நின்று போராடினர். பார்வதி எப்பொழுதுமே இப்படித்தான் என்பது வேறு விஷயம்.
9 ஆண்டுகளாக வழக்கு நடந்து கொண்டிருந்தது.
வழக்கின் ஆரம்பத்தில்,
திலீப், அவரது சொல்படி நடந்த பல்சர் சுனி உள்பட 9 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
251 சாட்சிகள் இருந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, இப்போது ஐம்பதுக்கும் குறைவு.
அதிலும், 28 பேர் பிறழ்சாட்சியாகி விட்டனர்.
இது போதுமே.?
9 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த இந்த வழக்கில், திலீப் மீது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப்பை எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
#cini #news #cini pics