ShareChat
click to see wallet page
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவு நாள் இன்று. *டிசம்பர் 30, 1971* இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை வகுத்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விக்ரம் சாராபாய். 1957ல் ரஷ்யா முதல் செயற்கைக்கோளை ஏவியபோது உடனே இந்தியாவும் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் என்று அறிவித்தார் விக்ரம் சாராபாய். சொன்னபடியே செய்தும் காட்டினார். சாட்டிலைட் இல்லாத வாழ்க்கையை நம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதபடி இத்துறையில் இந்தியா அசாதாரண வளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் அவர்தான். அணுசக்தி அறிவியலின் தந்தையான ஹோமிபாபாவின் மறைவுக்குப் பிறகு அணு ஆராய்ச்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அணு ஆயுதத்தைக் காட்டிலும், அணு மின்சாரம்தான் முக்கியம் என்று புதிய வளர்ச்சிப் பாதையை வகுத்தார் அவர். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி' மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார். அப்துல்கலாம் அவர்களின் கு௫வும் இவர்தான். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - விக்ரம் சாராபாய் FATHER OF INDIA'S SPACE PROCRAM VIKRAM SARABHAI 12 AUCUST 1919 ' ३० DECENBER १९७१ விக்ரம் சாராபாய் FATHER OF INDIA'S SPACE PROCRAM VIKRAM SARABHAI 12 AUCUST 1919 ' ३० DECENBER १९७१ - ShareChat

More like this