ShareChat
click to see wallet page
#🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 துவாய்நாதர் திருக்கோயில், *************************************************** இந்த கோயில் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டது ------------------------------------------------------------------------------- பிரளய காலத்தில் உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச முனிவரிடம், "இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து சிவனை வழிபட்டால் கடல் அமைதியடையும் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார். அதன்படி, துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்றுகூடி குளம் அமைத்து, இறைவனை பூஜை செய்தனர்.' முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன், பொங்கிவந்த கடலை, அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்து கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு துர்வாச நாயனார் என்ற பெயரும் உண்டு. பருத்தி போல மென்மையான பாதங்களைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இங்குள்ள விநாயகர் சந்நதிக்கு அருகில் துர்வாச துறவியின் மூர்த்தியும் உள்ளது. இந்த கோயில் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம் ‘‘நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்'' என்று உறுதிமொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். இப்படி பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதிமொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாகச் சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன் இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும் என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலதுகண் பார்வை பெற்றார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். சனிபகவான் தெற்கு பார்த்து அனுக்கிரக மூர்த்தியாக தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 89வது சிவத்தலமாகும். சுந்தரரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இந்த தெய்வத்திற்கு சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி, கேது இந்த கிரகம் நாமாகரணம் செய்துள்ளது. பௌர்ணமிக்கு முதல்நாள் திருக்கோயிலில் ஆகாச தீர்த்தத்தில் குளித்து சாமி தரிசனம் செய்து பசுவுக்கு உணவுத் தானம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட கண் பிரச்னை இருந்தாலும் தீரும். அஷ்டமி நாளன்று மாட்டுப் பாலில் இனிப்பு சர்க்கரை சேர்த்து தல விருட்சமான பல மரத்திற்கு ஊற்றி வெள்ளை சோளத்தில் நெய்வேத்தியம் செய்து சாமிக்கு படைத்து வழிபட்டு வந்தால் ஆட்டிசம் பிரச்னை சரியாகும். அனுஷம் நட்சத்திரத்தன்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் கடன் பிரச்னை தீரும் ஜாதகத்தில் 10ம் பாவகத்தில் சனி இருந்தால் சனிக்கிழமை விரதம் இருந்து இங்கு சாமி தரிசனம் செய்து கோதுமை மாவில் சப்பாத்தி கடுகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி செய்து நாய்களுக்கும் காகத்திற்கும் தானம் செய்து வந்தால் சனியினால் ஏற்படும் எப்பேர்ப்பட்ட பிரச்னையும் சரியாகும் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். ௐ நமசிவாய சிவாயநம ௐ ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 - நமசிவாய நமசிவாய - ShareChat

More like this