ShareChat
click to see wallet page
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 ##ஆன்மீக தகவல்கள் 🕉️ #🙏🔱ஓம் ந ம சி வா ய🔱🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 தர்மகர்த்தாவான பண்ணையாரும், அர்ச்சகரும் நெருங்கிய நண்பர்கள் அர்ச்சகர் திருமணம் கூட செய்யாமல் தன் வாழ்நாளை இறைவனுக்காக அர்ப்பணித்து விட்டதை எண்ணி, பண்ணையார் ஆச்சரியப்படுவார். இந்நிலையில் கோயில் மிகவும் பழுதடைந்து விட்டது. தனது காலத்திற்குள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தி விட வேண்டும் என்பது அர்ச்சகரின் விருப்பம். இது பற்றி பண்ணையாரிடம் பேசினார். பண்ணையாரோ கோயிலுக்கு பணம் செலவழிக்க ரொம்பவே யோசித்தார். நாட்களை தள்ளிக் கொண்டே வந்தார். ஒரு நாள் திடீரென பண்ணையார் நோய் வாய்பட்டார். மருத்துவச் செலவுக்கு ஏராளமாக பணம் செலவாயிற்று. அவரை குணப்படுத்த 20 லட்சத்திற்கும் மேலாகும். ஆனாலும் பிழைப்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர் இந்த பணத்தை கோயிலுக்கு செலவழித்து இருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்குமே இப்போது வீணாக போகிறதே என நினைத்து பண்ணையார் வருந்தினார். நல்லதைச் செய்ய நினைப்பவர்கள் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டும். தகுந்த காலத்தில் விதை ஊன்றி, அந்தந்த நேரத்தில் பராமரித்தும் வந்தால் தான், பயிர் அமோகமாக விளையும். அதுபோல பணக்காரரோ, ஏழையோ நல்லதை செய்ய தாமதிக்கக் கூடாது. தங்களுக்கு கிடைக்கின்ற நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - @qal இன்றைறஆன்மீக தேதிதவி சிந்தனைஜஜன 13 நல்லலாய்ப்பை ತ@ಖಖlLnಕi கோவில்திருப்பணிக்கு  நிதிஉதவி தேவை  திசெல்லப்பா @qal இன்றைறஆன்மீக தேதிதவி சிந்தனைஜஜன 13 நல்லலாய்ப்பை ತ@ಖಖlLnಕi கோவில்திருப்பணிக்கு  நிதிஉதவி தேவை  திசெல்லப்பா - ShareChat

More like this