1-1-2026
Dearest members in CHRIST,
🙇🏻✝️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒருவராய் பெரிய அதிசயங் களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4).
நற்செய்தி:
இழந்து போன தேவசாயலை நாம் மறுபடியும் பெற்றுக் கொள்வதற்காக தம்மையே நமக்களித்த ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில், அன்பின் புதுவருட வாழ்த்துக்கள்! இப்புதிய ஆண்டிலே, ஒழுக்கமும் கட்டுப்பாடுமுள்ள வாழ்வு வாழவும், கிறிஸ்துவின் சாயலைத் தரித்துக் கொள்ளவும், கர்த்தர்தாமே நம் யாவருக்கும் நாள் தோறும் புதிய கிருபையும் பெலனும் தந்து வழிநடத்துவாராக.
இயேசுவை ஏற்றுக்கொண்ட நமது வாழ்விலும் தேவன் பெரிய நோக்கங்களை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ் விலே அவர் மகிமைப்படுவது மாத்திரமல்ல, கிறிஸ்துவைப் போல நாம் மாறவேண்டும் என்பதே அந்த மகா மேன்மையான சித்தம் என வேதம் நமக்கு விளக்குகிறது. நாம் கிறிஸ்தவராக அல்ல; கிறிஸ்துவைப் போல் ஆகிறது. அதாவது இழந்து போன தேவசாயலை கிறிஸ்துவில் நாம் தரித்துக்கொள்வது; தேவனோடு நித்தியமாய் வாழும் ஒப்பற்ற சிலாக்கியத்தைப் பெற்றுக் கொள்வது. கிறிஸ்துவின் குணாதிசயம், அவருடைய சிந்தை இவற்றை நமதாக்கிக்கொள்வது. தினமும் மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்திலே என்றும் மாறாத கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுக்கொள்வதைத் தவிர நமக்கு பரிபூரண சமாதானத்தைத் தருவது எதுவும் இருக்கமுடியாது. அந்த மகிமையின் சாயலைப் பெற்று, பூரண சமாதானத்துடன் கிறிஸ்துவை இவ்வுலகில் பிரகடனப்படுத்த வேண்டிய நாம் இந்தப் புதிய ஆண்டில் நமது இரட்சகரை துதித்து மகிழ்ந்து அவரையே வணங்கி அவரை மற்றவர்களுக்கு
பறைச்சாற்றுவோம். ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
PRAISE 🙏 GOD 🙏
Be blessed friends 🙏
Happy Thursday
Blessed New year 2026 #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
