சிவ சிவ
#மாணிக்கவாசகரின்
பாடல்
***********
இருள்திணிந்து எழுந்திட்டு அதுஓர்
வல்வினைச் சிறுகுடில் இதுஇத்தைப்
பொருள்எனக் களித்து அருநரகத்து
இடைவிழப் புகுகின் றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை
இடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி
நீக்கிய அதிசயம் கண்டாமே.
{அதிசயப் பத்து, பாடல் – 10 (437)}
இருள் – ஆணவம், அறியாமை |
தெருளும் – அறிவின் தெளிவு |
மும்மதில் – மூன்று மதில்கள்
(மதில்களோடு கூடிய முப்புரம்
(மும்மலம்)) | நொடிவரை இடிதர –
நொடியில் இடிந்து போகுமாறு |
மெய்ந்நெறி – மெய்ப்பொருளாகிய
இறைவனைச் சேர்வதற்குண்டான
வழிமுறைகள் | பொய்ந்நெறி –
பேரின்பமாகிய இறைவனிடத்தில்
சேரவொட்டாமல் அலைகழிக்கும்
சிற்றின்ப வேட்கை
பாடலின் விளக்கம்
*************************
ஆணவமெனும் அறியாமையிருள் செறிந்து, எமது முன்னைய வல் வினைகளினால் இவ்வுலகினில் உண்டானச் சிறு குடிசையிந்த உடல்.
இதைப்போய் நிலைத்த மெய்பொருளென்று மயங்கி, இதன் சிற்றின்ப நாட்டங்களின்கண் ஆட்பட்டு, பிறவிச் சுழலெனும் மீளா நரகத்தினுள்ளே விழவிருந்த எம்மை,
மெய்ப்பொருளாகிய இறைவன், தம் தூய அறிவெனும் சினத்தில் எழும் அதன் தெளிவாகிய செந்தழலால், எமது மயக்கத்திற்குக் காரணமாய் அமைந்த மலமாகிய மும்மதில்களையும் நொடியில் எரித்துத் தகர்த்தழித்து, எமை ஆட்கொண்டு அருளிய மெய்நெறியினால், இதுவரை பயின்றுவந்த எமது சிற்றின்பப் பொய்நெறி நீங்கிய அதிசயத்தை யாம் கண்டு அனுபவித்தோம்!
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
00:07
