தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். ஒவ்வொருவரும் பாடிய பின் கிருத்துமஸ் தாத்தா பரிசுகளை வழங்குவது போல் இருக்கும். அதில் பாடிய சிறுவன் பட்டு வேட்டி பரிசு கேட்டு அதை தன் தாத்தாவை உடுத்தச் சொல்லி அழகு பார்த்தான்.
பின்னர் சிறுவன் பேசியது நெகிழச்செய்தது. நாங்கள் கிராமத்தில் இருந்து வருகிறோம். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த மேடைக்கு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது கல்வி தான் நம்மை அடிமட்டத்தில் இருந்து மேலே தூக்கி விடும். கல்வி தான் என்னை ஒரு ஆளாக இங்கு வருவதற்கு உதவியது. எனவே உங்களுக்கு என்ன ஆசைகள் இருந்தாலும் கல்வியை கைவிடாதீர்கள் என பேசியதும் அரங்கமே அதிர்ந்தது.
இதுதான் தமிழ்நாடு சாதித்தது. பெரியார் சாதித்தது. ஆம் இட ஒதுக்கீடு தான் நம் கல்வி சாதனைக்கு வழிகோலியது. அதை சட்ட ரீதியாக உறுதி செய்தது பெரியாரின் போர்ப்படை.
சட்டம் போட்டால் என்ன தமிழர்கள் படிக்கக்கூடாது என பார்ப்பன ராஜாஜி 6000 பள்ளிகளை மூடினார். குலக்கல்வி கொண்டு வந்தார். அத்தனையும் முறியடித்து கல்வியை தமிழர்களுக்கு உறுதி செய்தவர் தந்தை பெரியார்.
பார்ப்பனர்களின் தனிச்சொத்தாக இருந்த கல்வியை பொதுவுடைமையாக்கி தமிழ்நாட்டின் கடைக்கோடி மாணவருக்கும் இட ஒதுக்கீடு மூலம் கொண்டு சேர்த்த சாதனைக்கு சொந்தக்காரர் பெரியார்.
எனவே தான் நன்றி மறவாத தமிழர்கள் பெரியார் கைப்பற்றி அவர் வழிநடக்கின்றோம்.
ஆனால் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஆரியம் சப்பி போட்ட பனங்கொட்டை சீமான் சொல்கிறான், கல்வி உரிமை மீட்டு தமிழர்களை மானத்தோடு வாழவைக்கும் பெரியாரின் கோட்டையை பிரா*மண கடப்பாரையில் இடிப்பானாம்.
'நீ துருப்பிடித்த கடப்பாரை எடுத்து வா நாங்கள் திராவிட புல்டோசரை எடுத்து வருகிறோம் ஒருகை பார்த்துடலாம்..
..ஈரோடு இ.தேர்தலில் டெபாசிட் இழக்கச் செய்தோம் வருகின்ற ச.ம தேர்தலில் சீமானின் அரசியலுக்கு முடிவுரை எழுதுவோம் .." என போர் முழக்கம் செய்துள்ளார் மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி.
உண்மைதான்.. இரவலாக பெற்ற துருப்பிடித்த ஆரிய கடப்பாரையை உடைத்து நொறுக்கிட திருமுருகன் போன்று பெரியார் உருவாக்கிய இனமானத்தமிழர்கள் இமயமாக உயர்ந்து நிற்கின்றோம்.
வரிப்புலியா அல்லது கழுதைப்புலியா என ஒரு கை பார்த்திடுவோம் பேமானே.
#டுபாக்கூர் சீமான் #🤭அரசியல் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்

