ShareChat
click to see wallet page
ஆண்டாள் பெருமை 1 ) பன்னிரண்டு ஆழ்வார்களில் இவள் ஒருத்தி மட்டுமே பெண்ணாவாள். 2 ) இவள் பூமாதேவியின் அவதாரம். 3 ) ஜனகருக்கு சீதாதேவியை மகளாக அருளியது போல, பெரியாழ்வாருக்கும் மகளாக இவள் அருளப்பட்டாள். 4 ) முக்தி தரும் வேதங்களை எளிய தமிழில் வடித்தாள். 5 ) கண்ணனைத் தவிர வேறு எந்த மானிடரையும் மணம் முடியேன் என்று வைராக்கியத்துடன் இருந்தவள். 6 ) கண்ணனைத் தன் அன்பால் கட்டியவள் 7 ) மற்ற ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களை விட இவளால் பாடப்பட்ட திருப்பாவையை அதிக பக்தர்கள் இன்றும் மனப்பாடமாக ஓதுகின்றனர். 8 ) மார்கழி என்றாலே அது ஆண்டாளுக்கு உரிய மாதமாகும். மற்ற மாதங்களில் செய்யாவிட்டாலும் மார்கழி மாதம் பலர் திருப்பாவையை ஓதி அவளது அருளை பெறுகின்றனர். 9 ) இன்றும் ஸ்ரீவல்லிய்ப்புத்தூரில் ஆண்டாளுக்கு சூடிய மாலையைத் தான் பெருமாளுக்கு சூட்டுகிறார்கள். 10 ) கண்ணன் மீது எவ்வாறு பக்தி செலுத்துவது என்பதை மானிடர்களுக்கு சொல்லிக்காட்டவே அவதரித்தவள். 11 ) கண்ணன் மீது காதல் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவதரித்தவள். 12 ) திருப்பாவை என்ற எளிய இலக்கியத்தின் மூலம் நாம் அனைவரும் வீடு பேறு அடைய வேண்டும் என்று அவதரித்தவள். 13 ) கிட்டத்தட்ட எல்லா முக்கிய விஷ்ணு ஆலயங்களிலும் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆராதனைகளும் உண்டு. 14 ) ஸ்ரீ ராமானுஜரை தனது அண்ணனாக எற்றுக்கொண்டாள். அவளது பெருமைகளை சொல்லி முடிக்க எனக்கு காலம் போதாது. எனது அறிவும் போதாது. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவளது காலடி தூசியை என் தலையில் சுமப்பதை விட வேறு எதுவும் தேவை இல்லை. அவளது காலடி தூசிக்கு கோடானுகோடி மரியாதைகளையும் வணக்கங்களையும் செலுத்தி எனது பாவங்களை நான் கழிக்க விரும்புகிறேன். அவளது நாமத்தையும் அவள் அருளிய திருப்பாவையையும் துணையாக கொண்டு அவளது அடிமையாகவே எப்போதும் இருக்கும் நிலை வேண்டும்.🌹 #god #தெரிந்து கொள்வோம்
god - vaibhav Sa vaibhav Sa - ShareChat

More like this