*வரலாற்றில் இன்று*
*30 டிசம்பர் 2025-செவ்வாய்*
*===========================*
1066 : ஸ்பெயின், கிரனாடாவில் அரச மாளிகையை தாக்கிய முஸ்லீம் கும்பல் ஜோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர்.
1460 : ரோசாப்பூ போர்கள் :- இங்கிலாந்தில் யார்க்கின் மூன்றாவது இளவரசர் ரிச்சர்டை லங்காஷயர் மக்கள் கொலை செய்தனர்.
1770 : டோக்கியோவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 37,000 பேர் உயிரிழந்தனர்.
1853 : அமெரிக்கா ரயில் போக்குவரத்து பாதை அமைப்பதற்காக மெக்சிகோவிடம் இருந்து 76.770 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
1903 : சிகாகோவில் நாடக அரங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 605 பேர் உயிரிழந்தனர்.
1906 : அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
1916 : ஹங்கேரியின் கடைசி மன்னராக முதலாம் சார்லஸ் முடிசூடினார்.
ரஷ்ய ஆன்மீகவாதியும், ரஷ்யப் பேரரசின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் பெலிக்ஸ் யூசுபோவின் ஆதரவு படைகளினால் கொல்லப்பட்டார்.
இவரது உடல் மூன்று நாட்களுக்கு பின்னர் மாஸ்கோ ஆறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
1918 : ஜெர்மனியில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது.
1919 : லண்டனில் உள்ள லிங்கன் இன் சட்டக்கல்லூரியில் முதன் முதலாக ஒரு பெண் சட்டம் பயில அனுமதிக்கப்பட்டார்.
1922 : சோவியத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
1924 : யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1929 : இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.
1931 : ஹாலந்தில் நாஜிக் கட்சி அமைக்கப்பட்டது.
1941 : மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
1943 : சுபாஷ் சந்திரபோஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
1947 : பனிப் போர் :- ருமேனியாவின் மன்னர் முதலாம் மைக்கேல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1949 : இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
1953 : உலகின் முதல் என்டிஎஸ்சி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு வந்தது.
1965 : பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
1972 : வியட்நாம் போர் :- அமெரிக்கா, வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடை நிறுத்தியது.
1982 : முழு சந்திர கிரகணம் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஏற்பட்டது.
1996 : அசாம் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் போடோ போராளிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.
1997 : அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் நடைபெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
2000 : பிலிப்பைன்ஸ், மணிலாவில் நடைபெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2004 : அர்ஜென்டினாவின் புவனெஸ் ஐரிஸ் நகரில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் 194 பேர் உயிரிழந்தனர்.
2006 : முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
850 பயணிகளுடன் சென்ற இந்தோனேஷியக் கப்பல் நடுக்கடலில் ஏற்பட்ட புயலால் மூழ்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
#🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
ஸ்பெயினில் மாட்ரிட்- பராஹாஸ் விமான நிலையம் மீது எட்டா போராளிகள் குண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2013 : காங்கோ தலைநகர் கின்சாசாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்து 100 பேர் வரை கொல்லப்பட்டனர். #😎வரலாற்றில் இன்று📰 #தெரிந்து கொள்வோம்

