நாய்களையும் பன்றிகளையும்
போல இருக்காதீர்கள்...
பகவான் ரிஷபதேவர் தனது மகன்களிடம் கூறினார். எனது அருமை மகன்களே இந்த உலகில் உடலை ஏற்றுள்ள உயிர்களாகிய நாம்... மனித பிறவியின் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...
மலத்தை உண்ணும் பன்னிகளுக்கு கூட ஏன் நாய்களுக்கும் கூட கிடைக்கக்கூடிய புலன் இன்பத்திற்காக அல்லும் பகலும் கடினமாக உழைக்கக்கூடாது...
பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்கு தவங்களை செய்வதில் ஈடுபட வேண்டும்....
இத்தகைய செயல்களில் இதயம் தூய்மை அடைகிறது....
ஒருவர் இந்நிலையை அடையும்போது நித்தியமான ஆனந்தத்தின் வாழ்வினை அடைகிறார்....
அந்த வாழ்க்கை உலக இன்பத்திற்கு அப்பாற்பட்டதும்.. என்றென்றும் நிலைத்து இருப்பது ஆகும் .
இது ஸ்ரீமத் பாகவதம்5:5:1
இந்த சுலோகத்தில் பகவான் ரிஷபதேவர் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தனது மகன்களிடம் எடுத்துரைக்கிறார்..
மனித உடலைப் பெற்ற உயிர்வழி விலங்குகளிடம் இருந்து மாறுபட்ட விதத்தில் செயல்படவேண்டும்...
பன்றிகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகள் மலத்தை உண்டு புலன் இன்பத்தை அனுபவிக்கின்றன..
மனிதர்கள் பகல் முழுவதும் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர்.
பின்னர் இரவு நேரத்தில் உண்ணுதல் குடித்தல் உடலுறவு கொள்ளுதல் என்று இன்பம் அடைய முயற்சிக்கிறார்கள்...
அதே சமயம் தங்களை முறையாக பாதுகாக்கவும் கொள்கிறார்கள் ..
இது மனித நாகரிகம் அல்ல ..
ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான துன்பத்தை தன்னிச்சையாக பயிற்சி செய்வதாகும்.
தபஸ்ய அல்லது தவம் என்றால் ஆன்மீக குரு மற்றும் சாதுக்கள் வழங்கப்படும் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு உங்களின் வாழ்வை வடிவமைப்பதற்கு நீங்களே முன்வந்து ஒப்புக் கொள்வதாகவும்...
ரிஷபதேவர் தனது மகன்களிடம் . எனது அருமை மகன்களே பூனைகள் நாய்கள் மற்றும் பன்றிகள் போல வாழ்ந்து உங்களை வாழ்வை வீணாக்காதீர்கள்..
மதிப்புமிக்க வாழ்வினை தவங்களை ஏற்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றுங்கள் என்று அறிவுறுத்துகிறார்...
நான் ஏன்விலங்குகளைப் போல வாழக்கூடாது...
நான் ஏன்குரு சாது சாஸ்திரம் சட்ட திட்டங்களின் கீழ் ஏன் வாழவேண்டும் ஒரு கேள்வி..
ரிஷபதேவர் பதிலளிக்கிறார்.. தவத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டால் உங்களின் வாழ்வு தூய்மை அடையும்...
தற்பொழுது ஜட இயற்கையின் குணங்களால். .
குறிப்பாக கோப குணமும் மட்டமான குணத்தாலும் ரஜோ தமோ ஆகியவற்றில் களங்கப் பட்டுள்ளோம்..
ஆகையால் சாஸ்திரங்கள் மற்றும் இதர வழிகாட்டுதலின் படி வாழ்ந்தால் உலக இயற்கையின் தாழ்ந்த குணத்தில் இருந்து தூய்மை அடைய முடியும் என்று ரிஷபதேவர் தங்கள் மகனுக்கு அறிவுறுத்துகிறார்...
ஹரே கிருஷ்ண பிரபு பாத் கீஜெய்🙏
#தெரிந்து கொள்வோம் #god

