||श्री:||ஸ்ரீ (969)🏹🚩 #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
இனிய பவளம் போன்று சிவந்த திருவாயினையும், இருட்டு போன்று கருத்த திருமேனியினையுடைய குழந்தையாகத் திகழ்கின்ற எம்பெருமான் ஸ்ரீ கண்ணபிரான் மழலைச் சொற்களை பேசியபடியே பூதனை என்னும் பேயின் நஞ்சு கலந்த முலைப்பாலை உண்டதன் வாயிலாக அவள் உயிரைப் போக்கியருளினான்.
அந்தப் பாலாகிய நஞ்சுக்கு மருந்து அளிப்பது போன்று அப்பூதனை அடைந்த முடிவை அறிந்திருந்தும் அஞ்சாத ஆய்ச்சி யசோதைபிராட்டி, அந்த கண்ணபிரானைத் தன் திருக்கரங்களால் வாரி எடுத்து அணைத்துக் கொண்டு பாலூட்டினாளே ! அந்தக் கண்ணபிரான் மீது அன்னையாகிய அந்த தாயின் அன்பு தான் என்னே !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
