ShareChat
click to see wallet page
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 32 வயதான பிரியங்கா.. இவரது கணவர் பெயர் செல்வந்தர்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.. ஆரம்பத்தில் தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது. தண்ணி அடித்த கள்ளக்காதலர்கள் இதனால் அடிக்கடி தகராறுகள் வலுக்கவும் தம்பதி இருவரும் பிரிந்துவிட்டனர்.. 2 குழந்தைகளுடன் 2 வருடங்களாக தனியாகவே வாழ்ந்து வருகிறார் பிரியங்கா.. இந்த நேரத்தில்தான், நெற்குன்றத்தைச் சேர்ந்த 34 வயதான கோவிந்தராஜ் என்ற நபருடன் பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ள உறவாக வளர்ந்தது.. ஒருகட்டத்தில் கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.. எனினும் சமீப நாட்களாகவே கள்ளக்காதலர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. இதனால் தகராறுகள், சண்டைகள் வந்துள்ளன.. இறுதியில் பிரியங்கா மீது கோவிந்தராஜுக்கு வெறுப்பும், ஆத்திரமும் அதிகமாகி, அவரை கொலை செய்துவிடலாம் என்ற முடிவையும் எடுத்துள்ளார்... அதற்கான நாளையும் குறித்தார் கோவிந்தராஜ். மது பாட்டிலை எடுத்து சம்பவத்தன்று பிரியங்காவிடம் நைசாக பேசி, மணலி பகுதியில் அழைத்து சென்றிருக்கிறார் கோவிந்தராஜ்.. அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்கள்.. அப்போது மறுபடியும் கள்ள ஜோடிக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது. ஏற்கனவே கடுப்பில் இருந்த கோவிந்தராஜ், பிரியங்காவின் பேச்சில் மேலும் ஆத்திரமடைந்து, மது பாட்டிலால் பிரியங்காவின் கழுத்தை அறுத்துள்ளார்.. இதனால் ரத்த வெள்ளத்திலேயே பிரியங்கா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பிரியங்காவுடன் எதற்காக தகராறு இதற்குபிறகு கோவிந்தராஜ் நேரடியாக வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்து விட்டார்.. இதையடுத்து, மணலி போலீசார் இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. கோவிந்தராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லி உள்ளனர்.. உண்மையிலேயே பிரியங்காவுக்கும் கோவிந்தராஜூக்கும் என்ன தகராறு, எதற்காக கொலை வரை சென்றது என்று தெரியவில்லை. கோவிந்தராஜ் வாக்குமூலம் தந்தால்தான் உண்மை வெளியே வரும். விழிப்புணர்வு அவசியம் எனினும், சமூகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும், கள்ளக்காதல் பின்னணியில் நிகழும் வன்முறைகள், மேலும் கவலையை உருவாக்கியுள்ளது... கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீண்டநாள் பிரச்சனைகள், பொறாமை, சந்தேகம் போன்றவை வன்முறைக்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.. பிரச்சனைகள், பிரிவு, புதிய உறவுகள் ஆகியன உருவாக்கும் மன அழுத்தங்களைப் பற்றி பலருக்கும் சரியான ஆலோசனைகள், உதவி சேவைகள் கிடைக்காததே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என்றும் மனநலம் தொடர்பான விழிப்புணர்வு குறைவு மற்றும் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத மனநிலை சமூகத்தில் பெரும் ஆபத்துகளை உருவாக்குவதாகவும் எச்சரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢
📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢 - மணலியில் மது குடித்து கொண்டே "ரொமான்ஸ்" சில நிமிடத்தில் கள்ளக்காதலன் செய்த காரிய. ஆடிப்போன சென்னை மணலியில் மது குடித்து கொண்டே "ரொமான்ஸ்" சில நிமிடத்தில் கள்ளக்காதலன் செய்த காரிய. ஆடிப்போன சென்னை - ShareChat

More like this