ShareChat
click to see wallet page
#இந்தியாவின் #உத்தரப்பிரதேச மாநிலம் #கோரப்பூரில் இளைஞர்கள் சிலர் காற்றோட்டமான இடத்தில் தரையில் துணியை விரித்து படுத்திருந்தபோது, உறங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞரின் சட்டைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை அவதானித்த அவரது நண்பர், பதற்றமடையாமல் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, அந்த இளைஞரை சிறிதும் அசையாமல் இருக்கச் செய்தார். பின்னர், மிகவும் நிதானத்துடனும் கவனத்துடனும் செயல்பட்டு, எவ்விதத் தீங்கும் ஏற்படாதவாறு இளைஞரின் சட்டையைக் கிழித்து, பாம்பை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். நண்பர்களின் இந்தத் துரிதமான, தைரியமான மற்றும் புத்திசாலித்தனமான இச்செயல் இளைஞரின் உயிரைக் காப்பாற்ற உதவியதோடு மட்டுமல்லாமல், தற்போது இந்தச் சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பலரின் பாராட்டையும் பெற்று வருகின்றது. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
01:07

More like this