நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் (ஸஃப்பில்) நிற்பதிலும் உள்ள நன்மைதனை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்வதற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுபுஹு தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் தரையில் தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புகாரி - 615, 654, 721, 2689, முஸ்லிம் : 746, 748 ) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

