இஸ்லாமிய இறைநம்பிக்கையின்படி, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் உதவுகிறான். அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வத்தைச் செலவு செய்பவர்கள் வெகுமதியைப் பெறுவார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது.
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
[அல்குர்ஆன் 47:7]
யார் தங்கள் பொருள்களை தான தர்மங்களில் இரவிலும் பகலிலும், இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 2:274] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

