*இன்று*(26-9-25)
*நவராத்திரி*
*ஐந்தாவது நாள்*:
*பூஜையின் சிறப்பம்சம்*!
சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது
நவராத்திரி விரதம்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது.
நவராத்திரி விழாவில் ஒவ்வொரு தினத்தில் செய்ய வேண்டிய பூஜை மற்றும் பிரசாதங்களின் விபரம்:
அந்தவகையில் நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று(26-9-25)
என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம்!!
நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.
ஐந்தாவது நாளுக்கு
இவளை வழிபடும் உரிய. குமாரி – சண்டிகா தேவி;
மந்திரம் – ஓம் சண்டிகாயை நம; சுவாசிநியின் பெயர் – ஸ்கந்தமாதா;
மந்திரம் – ஓம் ஸ்கந்த மாதாயை நம:
மலர் – சந்தன இலை;
நைவேத்தியம் – தயிர்சாதம்; வாத்தியம் – ஜல்லரி; ராகம் – பந்துவராளி;
இன்றைய தினம் கடலைமாவினால் பறவைக் கோலங்களில் ஏதேனும் ஒன்றை போடலாம்.
இன்றைய தினம் ஆறு வயது சிறுமிகளை நம்மால் முடிந்த அளவு ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்குஅழைத்து,
அவர்களை ‘சண்டிகா’ என்ற திருப்பெயருடன் வழிபடவேண்டும்.
அம்பிகைக்கு தயிர் சாதமும், ஏதேனும் ஒரு நவதானியம் கொண்டு சுண்டலும் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்ததை அனைவருக்கும் அம்பிகையின் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.
இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளாம் பஞ்சமி அன்று 'ஸ்கந்த மாதா' என்று துர்க்கையை வழிபடுகின்றனர்.
ஸ்கந்த என்ற சொல் முருகனை குறிக்கும்.
மாதா என்றால் அன்னை. முருகனின் தாயாக இருப்பதால் ஸ்கந்த மாதா என்று இவளை கூறுவர். தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பகையாக விளங்கிய தாரகாசுரனை (சூரபத்மனை) கொன்றவர் தேவசேனாபதியாகிய முருகன். அத்தகைய முருகனின் தாயான இவள் மிகவும் மதிக்கப் படுகிறாள்.
இவள் நான்கு கரங்களை கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரை மலரை கொண்டவள். ஒரு கரம் பக்தருக்கு ஆசி வழங்கும். இவளின் மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவாக ஆறுமுகத்தோடு காட்சி தருவான். அன்னையை சிங்கம் தாங்கி நிற்கும். இவள் சில நேரங்களில் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக காட்சி தருவாள். அதனால் இவளை 'பத்மாசினி' என்றும் கூறுவர்.
இவளின் வடிவம் பக்தரை மெய்மறக்க செய்யும். இவள் தூய்மையின் வடிவானவள். இவளை வணங்குவோர் மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தன்னுடைய துக்கங்களை மறப்பர். வாழ்வில் இறை இன்பத்தை அனுபவிப்பர். இவளின் ஆசிகள் உண்மையான வேண்டுதல்களை நிறைவேற்றும். தன்னை நம்புவோரை இவள் என்றும் கைவிட மாட்டாள். இவளின் அருள் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்புகின்றனர்.
இந்நாளில் யோகிகள் 'விசுத்தி' சக்கரத்தை அடைவர். விசுத்தி என்றால் கலப்படம் இல்லாதது, தூய்மையானது என பொருள் வரும். இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவோரின் மனம் தூய்மையான கருத்துக்களால் நிறையும். இவளை சரண் அடைந்தோரின் மனதில் இருந்து தூய்மையில்லாத கருத்துக்கள் வெளியேறி விடும்.
மற்ற எந்த தேவிகளுக்கும் இல்லாத சிறப்பு இவளுக்கு உண்டு. இவளை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகிறோம். இவளின் தியான மந்திரம்
“சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி
"தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான்
வணங்குகின்றேன்" .
ஸ்கந்த மாதா தேவியின் தியான மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏻 #🙏அம்மன் துணை🔱 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🎵 நவராத்திரி பஜனை ✨

01:59