ShareChat
click to see wallet page
சுக்கிர பலம் . ‌. . 🤍🤍 _________________💛__________________ செல்வம் சேர்ப்பதை விட அதி முக்கியத்துவம் வாய்ந்தது யாதெனில்.. சேர்த்த செல்வத்தை நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் அதை அத்தனையும் ஆற அமர அனுபவிக்க வேண்டும்..!! பணம் சேர்ப்பதின் நோக்கம் என்பது அதை மன மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்..!! 🧡 நம்மில் பலரும் பணம் சம்பாதிப்பது என்பதை ஒரு முழு நேர பணியாக மேற்கொண்டு கட்டுக் கட்டாக பணம் சேர்த்து அடுக்கி வைத்து அழகு பார்த்து.. அந்த பணத்தை அனுபவிக்கும் நோக்கம் இன்றி வயோதிக வயதும் தொட்டு.. ஆனாலும் அப்போதும் பணம் சேர்க்கும் வெறி அடங்காமல் இறுதி வரை தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் பணம் சார்ந்த உதவிகள் ஏதும் செய்யாமல் வாழ்வை வீணடித்து மண்ணோடு மண்ணாக மடிகிறார்கள்..!! 💛 நீங்கள் சொகுசாக.. சவுகரியமாக மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து.. பிறருக்கும் உங்களால் இயன்ற பண உதவிகள் செய்து.. அவர்கள் வாழ்வை உயர்த்த ஒரு உற்ற துணையாக இருந்து.. தானும் மகிழ்ந்து.. மற்றவர்களையும் மகிழ்விக்கும் ஓர் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து விட்டு செல்ல தான் பெரும் பணமும் செல்வ வளமும் தேவை என்பதை உணருங்கள்..!! ❤️ சுக போக வாழ்வுக்கு உங்கள் ஜாதகத்தில் சுக்கிர பலமே ஆதார அவசிய தேவை..!! சுக்கிரன் பலம் பெற வாழ்வியல் பரிகாரங்கள் பல உண்டு..!! நீங்கள் எந்த சூழலில் வாழ்ந்து கொண்டு இருப்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம்..!! நான் கூறவிருக்கும் இந்த அன்றாட வாழ்க்கை பரிகாரங்கள் உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தியே தீரும்..!! 🧡 பழையன கழிதல் பணத்தை ஈர்க்கும் என்பது சுக்கிரன் உணர்த்தும் ஒரு வாழ்க்கை பாடம்..!! உங்கள் வீட்டில் தேவையற்ற உபயோகமற்ற.. இனி இதை மாற்றியமைத்தோ.. சீறமைத்தோ மறு உபயோகம் செய்ய கூடிய வாய்ப்பும் இல்லாத "பொருட்களை" ஒரு போதும் குப்பைக் கிடங்கை போல சேர்த்து வைக்காதீர்கள்..!! ஞாபகார்த்தமாக பழைய பொருட்களை பாதுகாக்க வேண்டுமாயின் அதையும் அழகுற அதற்கென்று பிரத்யேக இடம் வடிவமைத்து வைத்திருங்கள்..!! 🧡 மனதிலோ.. வாழும் வீட்டிலோ.. தேவையற்ற.. அவசியமற்ற குப்பைகளை தேக்கி வைக்காதீர்கள்..!! பழையன கழிய.. பணம் வந்து சேரும்..!! 💚 நேர்த்தியான உடை அணிதல் நிச்சயமாக உங்களை சிறந்த செல்வ நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் என்றால் அது மிகையில்லை..!! வீட்டில் இருக்கும் போதுமே கூட நல்ல வாசனை திரவியத்துடன் உங்கள் உடல் அமைப்புக்கு தகுந்த மிடுக்கான உடைகளை மட்டுமே எப்போதும் அணியுங்கள்..!! உடுத்தும் உடையின் விலை எதுவாயினும்.. அதை நீங்கள் உடுத்தும் முறையில் ஒரு அழகும் ஒழுங்கும் இருக்குமேயானால்.. அங்கே சுக்கிரன் பலம் பெற தொடங்குவார்..!! ❤️ சுக்கிரனுக்கு உரிய நாளானது வெள்ளிக்கிழமை ஆகும்..!! ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளில் வரும் சுக்கிர ஹோரைகளில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதளவில் தீங்கு விளைவிக்காத வகையில் சிறிதளவேனும் இனிப்பு உணவுகளை எடுக்க தொடங்குங்கள்..!! போலவே . . ‌. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வீற்றிருக்கும் நட்சத்திரம் எதுவென்று பாருங்கள்..!! அந்த நட்சத்திரத்திற்கு உரிய அதி தேவதைக்கு வெள்ளிக்கிழமைகளில் உங்களால் இயன்ற இனிப்பு படைத்து வணங்கிட உங்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக தொடங்கும் என்பதை நீங்கள் கண்கூடாக தரிசிப்பீர்கள்..!! 🧡 இதை எல்லாம் விட சுக்கிரன் பலம் பெற்று செல்வ வளம் சேர ஒரு சூட்சும ரகசியம் உண்டு..!! பெண்ணே சுக்கிரன்..!! உங்கள் வீட்டு பெண்கள்.. தாயார் தொடங்கி மனைவி.. மகள் சகோதரி.. பாட்டி என இவர்களை எல்லாம் உங்களால் இயன்ற அளவு அன்பு செலுத்தி மகிழ்ச்சியுடன் அந்த உறவை பேணி பராமறியுங்கள்.. செல்வம் கொழிக்கும்..!!~🤍💛 #తెలుసుకుందాం #🙏🕉️శ్రీ మహా లక్ష్మీదేవి🕉️🙏 #🔱 శ్రీ మహాలక్ష్మి దేవి అమ్మవారు #లక్ష్మీదేవి
తెలుసుకుందాం - 0> స 0> స - ShareChat

More like this