காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவில் வசித்து வருகிறார் தமிழரசி.. இவரது கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன்.. இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் (13) மற்றும் ஹரிசக்தி (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் எங்கே
கோபாலகிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன், முருகானந்தம் என்ற தம்பிகள் உண்டு.. இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்..
இதனிடையே, கருத்து முரண்பாடுகள் அதிகரித்து விட்டதால், தமிழரசியை விட்டு கடந்த 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார் கோபாலகிருஷ்ணன்.. கடலூரிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
எனினும், தன்னுடைய 2 பிள்ளைகளுடன் தமிழரசி, கணவரின் தம்பிகள் பாலகிருஷ்ணன் மற்றும் முருகானந்தம் ஆகியோருடன் அதே வீட்டில்தான் வாழ்ந்து வந்தார்..
தமிழரசியும், 2 குழந்தைகளும்
இப்படிப்பட்ட சூழலில், கணவரின் தம்பிகள் இருவரும் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்ததாக சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதில் முருகானந்தம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணன், முன் ஜாமீன் பெற்று ஒரு வாரத்திற்கு முன்புதான் வெளியே வந்தார்.. அதேசமயம், முருகானந்தமும் ஜாமீனில் வெளியே வந்தார்..
தங்களை இப்படி போலீசில் சிக்க வைத்துவிட்டாரே என்று இருவரும் தமிழரசி மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தனர்..
அண்ணி - கொழுந்தன்
இந்நிலையில், நேற்று சாயங்காலம் பாலகிருஷ்ணன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது தமிழரசியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. இதனால் வாக்குவாதம் பலமாக வெடித்தது..
ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தமிழரசியின் கழுத்தை அறுத்துவிட்டார்.. பிறகு தலையையும் துண்டித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.. இப்படியொரு கொலை நடக்கும்போது முருகானந்தம் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
கடலூர் சம்பவம்
தமிழரசியின் அலறலை கேட்டு, பக்கத்து வீட்டினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு உடனடியாக சிதம்பரம் தாலுகா போலீஸூக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து, தமிழரசியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பிறகு இந்த கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, முருகானந்தத்தை கைது செய்தனர்.
மேலும், தமிழரசியை கொலை செய்து தப்பியோடிய பாலகிருஷ்ணனை கைது செய்ய தனி படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்..
இந்த கொடூர கொலையானது, சிதம்பரம் மற்றும் காட்டுக்கூடலூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மது போதை மண்டைக்கேறினால், விலைமதிக்க முடியாத மனித உயிர்களும் காவு வாங்கப்பட்டுவிடும் என்பதற்கு இந்த கடலூர் சம்பவம் மேலும் ஒரு உதாரணமாகும். #📺டிசம்பர் 2 முக்கிய தகவல் 📢

