வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் அதனால் தமிழகத்தில் மழை பொழிவு அதிகரிக்கும் என்றும் மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று மூன்று மாவட்டங்களிலும் நேற்று ஒரு மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மழைக்காலம் என்பதால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ள. அதன்படி பள்ளிகளில் தண்ணீர் தேங்க கூடாது, அப்படி தேங்கினால் உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள கிணறுகளை மூட வேண்டும். மின் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம் மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். #🔴இன்றைய முக்கிய செய்திகள் #🔴எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு🌧️

