ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
ShareChat
click to see wallet page
@2085919184
2085919184
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
@2085919184
🇮🇳வாட்ஸ்அப் 9344138689
சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பிலும் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், "என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்." என பேசியுள்ளார். இந்த சுற்றுப்பயணங்களில் எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களின் பாதுகாப்பு மட்டும்தான் தன் மனதில் ஆழமாக இருக்கும் என்றும், அதனால்தான் அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இடங்களை காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் விஜய் கூறியுள்ளார். "ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். நான் திரும்பி போக வேண்டியிருந்தால் வேறு சில பதற்றங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை." என விஜய் கூறியுள்ளார். இறந்தவர்களுக்கு வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜய், என்ன சொன்னாலும் குடும்பத்தினரின் இன்னல்களுக்கு ஈடாகாது என குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ளவர்கள் நலம் பெற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விரைவில் அவர்களை சந்திப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். Getty Images 'என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்' "எங்களின் வலிகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்." என விஜய் கூறியுள்ளார். தங்களுக்கு தரப்பட்ட இடத்தில் பரப்புரை நடத்தினோமே தவிர வேறு ஏதும் செய்யவில்லை என கூறியுள்ள விஜய், எனினும் தவெகவினர் மீது வழக்குகள் போடப்பட்டிருப்பதாக கூறினார். சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். "முதலமைச்சரே, உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என நினைத்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்களை எதுவும் செய்யாதீர்கள். நான் வீட்டில் இருப்பேன், இல்லையெனில் அலுவலகத்தில் இருப்பேன், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாகியிருக்கிறது, இன்னும் தைரியமாக தொடரும்." என அவர் தெரிவித்தார். Getty Images அரசுத் தரப்பில் கூறுவது என்ன? இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள், படங்களை காட்டி அமுதா ஐஏஎஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தவெக கேட்ட இடத்திற்கு மாறாக வேலுசாமிபுரத்தில் அனுமதி தரப்பட்டதா? ''கூட்டத்திற்கு 26-ஆம் தேதி அனுமதி கேட்ட கடிதத்தில் வேலுசாமிபுரத்தில் அனுமதி கேட்டிருந்தனர். 25-ஆம் தேதிதான் வேறொரு கட்சி அங்கு கூட்டம் நடத்தியது. அதில், 10,000-15,000 பேர் கலந்துகொண்டிருந்தனர்.'' கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் ஏன் இடம் கொடுக்கப்படவில்லை? ''கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், வடிகால் கால்வாயும் இருந்தது. அதனால் தான் அந்த இடத்தை போலீஸார் தேர்ந்தெடுத்து தரவில்லை. உழவர் சந்தையில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இடம். எனவே தான், இறுதியில் வேலுச்சாமிபுரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.'' Getty Images கூட்டத்தை முன்பே கணிக்க முடியவில்லையா? ''தவெகவின் அனுமதி கடிதத்திலேயே 10,000 பேர் கூடுவார்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தனர். இதில், 20 பேருக்கு ஒரு போலீஸ் என, 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சித் தலைவர் வரும்போது அவரின் பின்னாலும் நிறைய கூட்டம் கூடியது. அதனால் பரப்புரை நடைபெறும் இடத்தில் 25,000க்கும் அதிகமானோர் கூடியிருக்கலாம்.'' பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா? ''தவெக தலைவர் உரையாற்றும்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது உண்மையல்ல என, கரூரில் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர். தடுப்புகள் அமைத்து கட்சியினர் வைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் தொண்டர்கள் உள்ளே நுழைந்தபோது அப்பகுதியில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டது.'' DIPRகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் காவலர்கள் தடியடி நடத்தியதால் தான் இது நடந்ததா? ''பரப்புரை நடைபெறும் இடத்தை நோக்கி வாகனத்தின் பின்னால் வந்தவர்கள் என பலரும் நகர ஆரம்பித்தனர். அதனால், கூட்ட நெரிசல் அதிகமாகவே பரப்புரை வாகனம் இன்னும் முன்னே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அதை கட்சியினர் கேட்கவில்லை.'' பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் தொடங்கிவிட்டதா? ''நண்பகல் 12 மணிக்கு விஜய் வந்திருக்க வேண்டும். காலையிலிருந்தே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. மதியம் 3 மணி முதல் கூட்டம் அதிகமாகிவிட்டது. வாகனம் பரப்புரை இடத்திற்கு நெருங்கவே, அதன் பின்னால் உள்ளவர்கள், ஏற்கெனவே உள்ள கூட்டத்துடன் கலந்ததால், கூட்ட நெரிசல் அதிகமானது.'' இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு அமுதா ஐஏஎஸ் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் பதிலளித்தனர். என்ன நடந்தது? Getty Images கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார். அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. 'கரூரில் மட்டும் ஏன் இப்படி? உண்மை வெளியே வரும்' - விஜய் பேசியது என்ன? tvk #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ - விஜய் மௌனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் என்ன ~  நடந்தது? விஜய் மௌனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள் என்ன ~  நடந்தது? - ShareChat
நவராத்திரி பண்டிகையானது, ஒரு மனிதனுக்கு வீரம் (துர்கா), செல்வம் (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துகிறது. முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். புராணங்களின்படி, நவராத்திரியின் 9-வது நாளில், அன்னை பராசக்தி அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்குப் பூஜை செய்து வழிபட்டதை குறிக்கும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் வகையில், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும், நம் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருக்கும் பொருட்கள் மற்றும் கருவிகளை வைத்து இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். ஆயுத பூஜைக்கான வழிபாட்டு முறைகள் : வீட்டை தூய்மைப்படுத்துதல் : பூஜை தொடங்கும் முன் வீடு முழுவதும் சுத்தமாக துடைத்து, நிலை, கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் சுத்தம் செய்து, திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். மாவிலை தோரணங்கள் கட்டுவது விசேஷம். பூஜை அறை : பூஜை அறையை சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு, வினை தீர்க்கும் விநாயகரை வணங்குவது அவசியம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமப் பொட்டு, அருகம்புல் வைத்து வழிபட்ட பின்னரே சரஸ்வதியை வணங்க வேண்டும். தொழிலுக்கு மரியாதை : ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப ஆயுத பூஜை அன்று நம்முடைய தொழில் கருவிகளை வணங்க வேண்டும். பூஜை அறையில் புத்தகங்கள், பேனாக்கள், வீட்டு உபயோக கருவிகளான சுத்தி, அரிவாள்மனை போன்றவற்றை சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழில் சார்ந்த இயந்திரங்களுக்குப் பொட்டு வைத்து அலங்கரித்து வணங்க வேண்டும். வாகனம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களில் சந்தனத்தை தெளித்து, பூ வைத்து வழிபடலாம். நைவேத்தியம் : நைவேத்தியத்துக்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை, பாயாசம் என பல வகையான பழங்களை வைத்துப் பூஜையை தொடங்க வேண்டும். பூஜை செய்த இடங்களில் மணியடித்து, நீரினால் 3 முறை சுற்றி நைவேத்தியம் செய்து, ஆயுதங்கள் மற்றும் புத்தகங்களுக்கும் நிவேதனம் செய்த பிறகு, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் விபூதி, குங்குமம் மற்றும் பொரிக்கடலை ஆகியவற்றை அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். பூஜை செய்ய உகந்த நேரம் எது..? சரஸ்வதி பூஜை நேரம் (அக்டோபர் 1, புதன்கிழமை) : இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. எனவே, காலை 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். அதேபோல், நவராத்திரி விழாவின் நிறைவாக 10-வது நாளில் அம்பிகை மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விஜயதசமி அக்டோபர் 2ஆம் தேதியான வியாழன் அன்று வருகிறது. #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #நவராத்திரி
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் - ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி ? வழிபட வேண்டிய வழிமுறை ! 0  உகந்தநேரம் எது. 2 ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி ? வழிபட வேண்டிய வழிமுறை ! 0  உகந்தநேரம் எது. 2 - ShareChat
தமிழக வெற்றிக் கழகம் 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோய் உள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27ந் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும். ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்தி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும். தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது. அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உன்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது. இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ - விஜய் பேச்சில் இவ்வளவு 9_6irGIূIBBLOIT..? கம்யூனிஸ்ட்கட்சி கண்டனம் 4 300 விஜய் பேச்சில் இவ்வளவு 9_6irGIূIBBLOIT..? கம்யூனிஸ்ட்கட்சி கண்டனம் 4 300 - ShareChat
புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி தொடங்கியது. இதையொட்டி பலர் தங்கள் வீடுகளில் கொலு வைத்துள்ளனர். இந்த நவராத்திரி இன்று ஆயுத பூஜையுடன் முடிவடைகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம். ஒரு மனிதனுக்கு வீரம், செல்வம், ஞானம் ஆகிய மூன்று அவசியம் என்பதே இந்த மூன்று மூன்றாக பிரித்து வழிபடுவதன் நோக்கமாகும். 9 நாட்கள் அரக்கன் மகிஷாசுரனை அழிக்க அனைத்து தெய்வங்களிடம் இருந்து அன்னை பெற்ற ஆயுதங்களுக்கு பூஜை செய்ததாக ஐதீகம். இதனால்தான் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களுக்கு பூஜை போடும் வழக்கம் வந்தது. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் பொருட்களை துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து கொண்டாடுகிறோம். நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி அன்று அம்பிகை மகிஷனை அழித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளாகும். என்ன செய்யலாம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நாளில் என்னென்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், வீடு, வாசல், நிலை கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவைகளை துடைத்து அவற்றிற்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். நிலை வாசலில் நிலை வாயிலிலும் சாமி அறையிலும் மாவிலை தோரணம் கட்டிவிட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை செய்யும் முன்பு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் குங்குமம் அதாவது மஞ்சளிலோ அல்லது மாட்டு சாணத்திலோ பிள்ளையார் பிடித்து வைத்து அதில் மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து வழிபட வேண்டும். கல்வியில் சிறந்த சரஸ்வதி தேவியை வணங்க புத்தகங்கள், பேனா உள்ளிட்டவைகளுக்கு பொட்டு வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். எதற்கெல்லாம் பூஜை அது போல் அரிவாள் மனை, கத்தி, சுத்தியல், கட்டிங் பிளையர், கத்தரிகோல், பூண்டு நசுங்கும் இடி கல், குழவி கல், சப்பாத்தி போடும் கட்டை என நாம் என்னவெல்லாம் பயன்படுத்துகிறோமோ அதற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும். அது போல் மோட்டார், லிப்ட் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். இயந்திரங்களுக்கு பூஜை வீட்டில் இருக்கும் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவைகளுக்கும் பூஜை செய்ய வேண்டும். எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் உங்கள் தொழிலுக்கு பிரதானமாக பயன்படுத்தும் பொருளை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். அது போல் பஸ், லாரி, ஆட்டோ, இரு சக்கர வாகனம், சைக்கிள், கார் உள்ளிட்டவைகளையும் துடைத்து பூ, பூஜை செய்யலாம். வாகனங்கள், இயந்திரங்களுக்கு சந்தனத்தை கரைத்து தெளித்து அதில் பொட்டு வைக்க வேண்டும். வாழை கன்று தேவைப்பட்டால் வாழை கன்றை கட்டலாம். பின்னர் சுண்டல் செய்து, பொரி கடலை, பழங்கள் வைத்து தேங்காய் உடைத்து படைக்க வேண்டும். சுவாமிக்கு தனி பூஜையும் வாகனங்கள், மோட்டார், கடைகளுக்கு தனி பூஜையும் போட வேண்டும். சுண்டல் கடலை ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனியே பொரி கடலை, சுண்டல் வைக்க வேண்டும். வாகனங்களின் டயர்களில் எலுமிச்சை பழத்தை வைத்து பூஜை முடிந்ததும் ஓட்டி பார்க்க வேண்டும். அதுபோல் வாகனங்களுக்கு சுத்தி போட வேண்டும். உகந்த நேரம் இந்த ஆண்டு இன்றைய தினம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வருவதால் காலை 9 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் பூஜை செய்யலாம். மாலையில் பூஜை போடும் வழக்கம் இருப்போர், மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம். மேலும் காலை 9 டூ 10, மதியம் 1.30 டூ 3, மாலை 4 டூ 5, இரவு 6 டூ 10 ஆகிய நேரங்களிலும் பூஜை செய்யலாம். அவரவருக்கு எப்போது தோதுபடுகிறதோ அந்த நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம். #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🙏நமது கலாச்சாரம் #ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் #சரஸ்வதி #ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
🙏🏻புரட்டாசி மாதம்✨ - Ayudha Pooja 2025: gl6urgl ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்யஉகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி ? Ayudha Pooja 2025: gl6urgl ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்யஉகந்த நேரம் எது? வழிபடுவது எப்படி ? - ShareChat
அதன்பின்னர் 3 நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் கல்வி மிக முக்கியமானது என்பதால் சரஸ்வதி தாய் அறிவையும், ஞானத்தையும் வழங்கும் பொருட்டு பூஜை நடத்தப்படும். அதே போன்று இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை இன்று அக்டோபர் 1ம் தேதி காலை 9:15 முதல் 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக அமைந்திருக்கிறது. அதே போன்று இன்று மாலை 6 மணிக்கு மேல் 7:30க்குள் பூஜை செய்யலாம். ஆயுத பூஜை வழிமுறைகள் கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் திருநீறு கரைத்து 3 பட்டையிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும். திருநீறு வைத்து, திலகமிட்ட பொருட்களை அம்பாளின் திருவுருவ புகைப்படத்திற்கு முன் வைத்து அம்பாளுக்கு பிரியமான சர்க்கரைக் கலந்த பொங்கல், புளியோதரை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்து படைக்கலாம். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம். ஆயுத பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பூஜை நேரத்தில் கோபப்படுவதோ, தொழிலாளர்கள் மீது எரிச்சல் காட்டுவதோ, அவர்களை ஏவல் செய்வதோ கூடாது. வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஆயுத பூஜை தினத்தில் கல்வி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்வதால் தொழில், கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் கிடைக்கும். #🙏நமது கலாச்சாரம் #ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
🙏நமது கலாச்சாரம் - ன்று ஆயுத பூஜை சரஸ்வதி நேரம. ৬60868IT601 [56060 6  எப்படி வழிபட்டால் சரஸ்வதி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும்?! ன்று ஆயுத பூஜை சரஸ்வதி நேரம. ৬60868IT601 [56060 6  எப்படி வழிபட்டால் சரஸ்வதி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும்?! - ShareChat
✨👨‍🦱💭 திருமணத்துக்கு பிறகு ஆண்கள் செய்யும் தியாகங்கள் 💭👨‍🦱✨ திருமணம் ஆன பின், பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் பல தியாகங்களைச் silently செய்து வருகிறார்கள்: 👉 தனிப்பட்ட சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து, குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். 👉 தங்களின் விருப்பங்களைப் புறக்கணித்து, மனைவி–குழந்தைகளின் விருப்பங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். 👉 வேலைப்பளுவைச் சமாளித்து, குடும்பத்தின் நிம்மதிக்காக நிதி பாதுகாப்பை உருவாக்குகிறார்கள். 👉 பெற்றோருக்கும் மனைவிக்கும் இடையில் சமநிலை வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் வாழ்கிறார்கள். 👉 மனதில் இருக்கும் பல சுமைகளையும் வெளியில் காட்டாமல் சிரிப்புடன் நடத்துகிறார்கள். 🌸 உண்மையில், ஆண்களின் மௌன தியாகங்களால்தான் ஒரு குடும்பம் நிலைத்திருக்கிறது. அவர்களின் அன்பையும், தியாகத்தையும் மதிக்க கற்றுக்கொள்வோம். 🙏❤️ #திருமணத்துக்குப்பிறகு #ஆண்களின்_தியாகம் #💑கணவன் மனைவி காதல்💞 #👨‍👩‍👧‍👦என் குடும்பம்: என் உலகம்😍 #🤗ஆண் பெண் நட்பு😎 #🤗குடும்ப பாசம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💑கணவன் மனைவி காதல்💞 - ஒரு ஆணின் தியாகம் ஒரு ஆணின் தியாகம் - ShareChat
செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே இந்த தேர்வுகள் வருகிற 26ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், வருகிற 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்படப்படவுள்ளது. எனவே காலாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. அரசு பள்ளிகளில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இதுவே தனியார் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் 6 நாள் மட்டுமே விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது. எனவே காலாண்டு விடுமுறையொட்டி வெளியூர் செல்ல மாணவர்களோடு பெற்றோர்களும் பயண திட்டங்களை வகுத்து வருகிறார்கள் #📰தமிழக அப்டேட்🗞️ #காலாண்டு விடுமுறை நீட்டிப்பு😃😁 #பள்ளி காலாண்டு விடுமுறை ஆறிவிப்பு 🥰🥳🥳💥
📰தமிழக அப்டேட்🗞️ - ணவர்களுக்கு குஷி ! LDIT காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்களா ? அசத்தல் அறிவிப்பு ணவர்களுக்கு குஷி ! LDIT காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்களா ? அசத்தல் அறிவிப்பு - ShareChat
இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பதால் பலன்கள் என்னென்ன? என்னென்ன விரதங்கள், வழிபாடுகள் மேற்கொள்ளலாம்? இந்த மாதம் வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம். மழை துவங்கும் மாதம்தான் புரட்டாசி.. தமிழ் மாதங்களில் 6வது மாதமாக வரும் புரட்டாசி கன்னி ராசிக்குரிய மாதமாகும். நட்சத்திரம், திதி, கிழமை என அனைத்துமே சிறப்பாக உள்ளது இந்த புரட்டாசியில்தான்.. புரட்டாசி மாத சனிக்கிழமையில், சனி பகவான் அவதரித்தார் என்பதால், சனியால் பாதிப்புள்ளவர்கள், புரட்டாசியில் விரதம் மேற்கொள்ளலாம். இதனால் சனியிலிருந்து விடுபடலாம். புரட்டாசி சனிக்கிழமை புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொண்டால், பூஜையறையை சுத்தம் செய்து, மாக்கோலம் போட வேண்டும். துளசி, தாமரை பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய பயன்படுத்த வேண்டும். சனிக்கிழமைகளில் புதிய அகல் விளக்கில், தாமரைத்தண்டு திாி போட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பெருமாள் படங்களுக்கு 5 முக குத்து விளக்கை ஏற்றி வைத்தும், நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை பெருமாளுக்கு நிவேதனமாக படைக்கலாம். பெருமாள் மாதம் இந்த சனிக்கிழமைகளில் எள், வெல்லம் இவற்றை சாப்பாட்டுடன் சோ்த்து பிசைந்து காகங்களுக்கு உணவாக வேண்டும். சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால் அனைத்துவிதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.. புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்கிறார்கள். இதற்கு பெருமாளுக்கு பூஜை செய்து முடிந்ததுமே, அன்னதானமும் செய்ய வேண்டும். எள்ளுப் பொடி சாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பலருக்கும் அதை வழங்கலாம். புரட்டாசி மாதம் வரும் மகாளய பட்சத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்படுகிறது.. இதனால் மூதாதையர்கள் சாபங்களிலிருந்து விடுபடலாம். செய்யக்கூடாதவை புரட்டாசியில் புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்கலாம். இந்த மாதத்தில் பகலில் தூங்கவே கூடாது.. வெற்றிலை, பாக்கு சாப்பிடக்கூடாது. மது, மாமிசத்தை தவிர்க்க வேண்டும். புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர மகாலட்சுமி விரதம், கபிலா சஷ்டி விரதம், ஸித்தி விநாயக விரதம், சஷ்டி - லலிதா விரதம், அனந்த விரதம், அமுக்தாபரண விரதம், உள்ளிட்ட விரதங்கள் உள்ளன.. முக்கிய விரதங்கள் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியதால், பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும். அதிலும், வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஒரு வருடத்துக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும். புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடக்கும்.. காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்களால் அவதிப்படுபவர்களும் இந்த மாதத்தில் கருட வழிபாடு செய்வது பலனை தரும். புரட்டாசி மாதத்தில் எந்த விரதம் மேற்கொண்டாலும் சரி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம் நிறைவாக இருக்கும்.. மொத்தத்தில் இறைவனுக்கு காணிக்கை, நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. Hemavandhana #✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் #புரட்டாசி மாசம் விரதம் முடிஞ்சி மறுநாள் 🍖🍤🍗 Enjoy 💯😋 சிக்கன் அலப்பறை 🤣 #புரட்டாசி மாசம் சிறப்பு
✡️புரட்டாசி ஸ்பெஷல் ஜோதிடம் - ShareChat
05/08/2022 | இன்றைய ராசி பலன்! #🔯கைரேகை ஜோதிடம்🖐 #🔍பஞ்சாங்கம் அறிவோம்📗 #✡️ஜாதக பொருத்தம்
🔯கைரேகை ஜோதிடம்🖐 - மேஷம் அசதி புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது . குடும்பத்தினர் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள் , முயற்சிகளுக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள் , ஆல் தி பெஸ்ட் ! சிம்மம் ஆதரவு உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் , உங்கள் முயற்சிக்கு ரிஷபம் அனுகூலம் தனுசு செலவு காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள் , வாழ்க்கைத்துணையால் காரியங்கள் அனுகூலமாகும் . சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர் கள் , மாலையில் மகிழ்ச்சி உண்டாகும் . சிலருக்கு | உறவினர்களுடன் பேசி நலம் விசாரிப்பீர்கள் , உடல் ஆரோக்கியம் வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உழைக்கும் கரங்கள் ! கன்னி FF மகிழ்ச்சி வாழ்க்கைத்துணையின் ஆதரவு | நிறைவேற்றுவீர்கள் , சிலருக்கு கிடைக்கும் , உடல் திடீர் பணவரவுக்கும் , திடீர் ஆரோக்கியத்தில் கூடுதல் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு . கவனம் தேவை , - என்ஜாய் தி டே ! ஆல் தி பெஸ்ட் ! 4 மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் , எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்புண்டு , ஆனாலும் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் . - செலவே சமாளி ! | மிதுனம் உதவி மகரம் பணவரவு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் , சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும் . எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் , சிலருக்கு புதிய ஆடை , ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும் . - ஜாலி டே ! மேம்படும் . ஆல் இஸ் வெல் ! குடும்பத்தினரின் அன்பும் புதிய முயற்சிகள் சாதகமாக ஆதரவும் கிடைக்கும் . அவர்களின் | முடியும் , காரியங்களில் தேவைகளை மகிழ்ச்சியுடன் துலாம் அலைச்சல் அனுகூலம் உண்டாகும் . சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்படலாம் . - ரிலாக்ஸ் ப்ளீஸ் ! கும்பம் நற்செய்தி D | Ø விருச்சிகம் ஈ ஆரோக்கியம் கடகம் தாமதம் புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும் , குடும்பத்தினர் கேட்டதை வாங்கித் தருவீர்கள் , நண்பர்கள் தொடர்பு கொண்டு நல்ல செய்தியைப் பகிர்ந்துகொள்வர் , - இனி எல்லாம் சுபமே ! மனதில் இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும் , வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும் , எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும் . உடல்நலனில் கவனம் தேவை , . தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது ! மகிழ்ச்சியான நாள் , ஆனால் , குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் , குடும்பத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது . - ஹெல்த் இஸ் வெல்த் ! மீனம் பொறுமை எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள் , எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் , சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும் . டேக் கேர் ப்ளீஸ் ! - ShareChat