ஸ்ரீ (969)🏹🚩*ஸ்ரீசார்ங்கபாணி ஸ்வாமி கோவில் கும்பகோணம்*
*பாசுரம்:*
காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!
கானகமாமடுவில் காளியனுச்சியிலே
தூய நடம்பயிலும் சுந்தர என்சிறுவா!
துங்கமதக்கரியின் கொம்பு பறித்தவனே!
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை
அந்தரமின்றியழித்தாடிய தாளிணையாய்!
ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. (69)
*பெரியாழ்வார் திருமொழி முதற்பத்து - ஐந்தாம் திருமொழி உய்யவுலகு தலையை நிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப் பருவம்* #ஸ்ரீ இராமர்
00:40
