#சர்வதேச கழிவறை தினம் நவம்பர்-19
சர்வதேச கழிவறை தினம் நவம்பர்-19
( World Toilet Day 19 நவம்பர் 2020 )
இது சிங்கப்பூரில் Jack Sim ல் அறிமுகப்படுத்தப்பட்டு ஐ.நா.சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உலகக் கழிவறைநாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளிலேயே 2001 ம் ஆண்டில் உலகக்கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்புநாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2013 ஜூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நவம்பர் 19 ம் நாளை ஐக்கியநாடுகளின் சிறப்புநாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது.
இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கியநாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

