ShareChat
click to see wallet page
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம் *படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக* விளங்க துளசியை பெருமாளுக்கு* சாற்றுக* ------------------------------------------------------------------------------------ துளசியால் பெருமாளை அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும். துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது. துளசி இலையின் நுனியில் நான்முகனும் (பிரம்மா), மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள். துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத் திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது. படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க.. ------------------------------------------------------------------------------------ புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும். தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
🙏ஆன்மீகம் - திருவாங்கம்ப ( நமோ நயரயயணமி திருவாங்கம்ப ( நமோ நயரயயணமி - ShareChat

More like this