
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#பத்திஸ்டேட்ஸ் #🙏ஆன்மீகம் #தெரிந்து கொள்வோம் சாந்த சொரூபியாக மாறிய பகவதி அம்மன்..!!
இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார்.
முகவரி:
கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.
போன்: +91-480-280 3061.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பிடம்:
திருச்சூரிலிருந்து 45 கி.மீ., குருவாயூரிலிருந்து 50 கி.மீ., எர்ணாகுளத்திலிருந்து 55 கி.மீ.தூரத்தில் கோவில் உள்ளது. அனைத்து ஊர்களிலிருந்தும் கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.
#நவராத்ரி பூஜை #நவராத்ரி ஸ்பெஷல் *நவராத்திரி* *ஆறாம் நாள்*
*உயர்வு தரும் ஆறாம் நாளான* *இந்திராணி பூஜை*
*அம்மன் வடிவம்* : இந்திராணி
*பூஜையின் நோக்கம்* : தூம்பர லோசன வதம் புரிதல்.
*இந்திராணி வடிவம்* : இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள்.
மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.
வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள்.
சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள்.
உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை.
பண்டாசுரன் என்ற அசுரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப்பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள்.
நெருப்பு வட்டமானது தனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள்.
இதனால் துர்கா தேவி ஜ்வாலா துர்கா என்று அழைக்கப்படுகிறாள்.
*அன்னைக்கு சாற்ற* *வேண்டிய* *மாலை :*
செம்பருத்தி
*அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* :
சந்தன இலை
*அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* : ஆரஞ்சு நிறம்
*அன்னையின் அலங்காரம்* : பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம்
*அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள்* :
சிவப்பு நிற மலர்கள்.
*கோலம்* :
பருப்பு மாவு கொண்ட தேவிநாம கோலம் போட வேண்டும்.
*நைவேத்தியம் :* தேங்காய் சாதம்
*குமாரி பூஜையில் உள்ள* *குழந்தையின் வயது* :
7 வயது
*குமாரி பூஜையால் உண்டாகும்* *பலன்கள்* :
செல்வ செழிப்பு உண்டாகும்.
*பாட வேண்டிய* *ராகம்* :
நீலாம்பரி
*பயன்படுத்த வேண்டிய* *இசைக்கருவி* : பேரி
*குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* :
வடகம்
*பலன்கள் :* மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும்.
🙏 🪷🙏
#நவராத்ரி ஸ்பெஷல் #பத்திஸ்டேட்ஸ் #நவராத்ரி பூஜை *நவராத்திரி* *ஐந்தாம் நாள்*
சௌபாக்கியம் அருளும் ஐந்தாம் நாளான வைஷ்ணவி பூஜை
*அம்மன் வடிவம்* : வைஷ்ணவி.
*பூஜையின் நோக்கம்* :
தூத சம்வாதம்.
*வைஷ்ணவி வடிவம்* :
கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள்.
திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள்.
கருட வாகனம் கொண்டவள்.
தீய சக்திகளை அழிக்க வல்லவள்.
செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.
தென்நாட்டில் ஐந்தாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் சபரி துர்க்கை.
அர்ச்சுனனுக்கு பாசுபதம் அளிக்க வேட்டுவ உருவம் தரித்து சென்ற சிவபெருமானுடன் அவருக்கு துணைவியாக சென்ற அம்பிகையின் தோற்றம்.
சபரி என்றால் வேட்டுவக் குலப்பெண் என்று பொருள்.
வேட்டுவச்சியாக அம்பிகை தரித்த கோலமே சபரி துர்க்கை ஆகும்.
வனத்தில் வசித்து ஞானத்தை அருளக்கூடியவள்.
பாவங்களைப் போக்கி அருளை அளிக்கக்கூடியவள்.
*அன்னைக்கு சாற்ற வேண்டிய* *மாலை* : பாரிஜாதம்.
*அன்னைக்கு சாற்ற வேண்டிய* *இலை* :
விபூதி பச்சை.
*அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்* :
பச்சை நிறம்.
*அன்னையின் அலங்காரம்* : சுகாசனத்தில் காளி துர்க்கை அலங்காரம்.
*அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய* *மலர்கள் :*
மல்லிகை மற்றும் முல்லை மலர்கள்.
*கோலம் :*
கடலை மாவு கொண்டு பறவை கோலம் போட வேண்டும்.
*நெய்வேத்தியம் :* தயிர் சாதம்.
*குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது* :
6 வயது.
*குமாரி பூஜையினால் உண்டாகும்* *பலன்கள் :* கவலைகள் அகலும்.
*பாட வேண்டிய ராகம்* :
பந்துவராளி.
*பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி* : ஜல்லரி.
*குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்* :
அப்பளம்.
*பலன்கள்* :
சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
🙏🪷🙏
#நவராத்ரி ஸ்பெஷல் #நவராத்ரி பூஜை #பத்திஸ்டேட்ஸ் *புரட்டாசி மாதம் 10ம் நாள் 26-செப்டம்பர்-25, ப்ருகு வாரம் வெள்ளிக்கிழமை* *நவராத்திரி ஐந்தாம் நாள்* *அன்று*
புனிதமாக அம்பிகையை வைஷ்ணவி மற்றும் ஸ்கந்தமாதா அலங்காரத்தில் போற்றி வழிபடுவோம் வாரீர்
அன்னம், கிளி போன்ற பறவை வகை கோலம் வரைந்து அம்பிகையை வழிபட வேண்டும். மலர் மனோரஞ்சிதம் பாரிஜாதம் மலர் மாலைகள் சாற்றி திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அர்ச்சனை செய்து, .
நைவேத்தியமாக தயிர்சாதமும், பூம்பருப்பு சுண்டல் கடலை பருப்பு சுண்டல் மாதுளை பழம் படைத்து வழிபட வேண்டும். . இந்த நாளில் அம்பிகைக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.
நவதுர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 5 ஆம் நாளுக்கு தேவியின் ஸ்கந்த மாதா ரூபத்தில் வழிபடவேண்டும்
வைஷ்ணவி தேவி
சங்கு, சக்கரம், கதை, வில் பொற்கரங்களில் ஏந்தியவளே . கருடன் வாகனத்தில் அமர்ந்து விஷ்ணு ஸ்வரூபமாக
அபூர்வ தரிசனம் தருபவளே
துன்பங்கள் நீங்கி, குறைவில்லா செல்வத்தோடு பேரின்ப மோக்ஷம் கிடைத்திடுமே
"ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே, சக்ர ஹஸ்தாயை தீமஹி, தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்" என்று மந்திரம் சொல்லி தியானித்து பணிந்திடுவோம்
ஸ்கந்தமாதா
பக்தி செய்த தேவர் துயர் தீர்த்திடவே பரமனை வேண்டிடச் செய்தவளே
சிவனின் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே
அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே
வீணரை வென்றிட சேயினைப் பணித்து வேலினைத் தந்திட்ட சக்தி துர்க்கையளே!
ஸ்கந்தமாதா வெனச் சிம்மத்திலமர்ந்து குமரனை ஆறுமுகனை மடியினில் கொண்டவளே
மேல் வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே
மற்றிரு கைகளில் மலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜத்தாளே
நவநாயகியரில் ஐந்தாம் நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்திடுவோம்
🪷🪷🪷
#🙏ஆன்மீகம் #பத்தி #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #ஜெய் ஸ்ரீ ராம்வாலின் மீது *சிவன் நின்று தவம் புரியும் காட்சி*
#💃🏽குட்டீஸ் டப்ஸ்மாஷ் #🚹உளவியல் சிந்தனை #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉 அறிவுள்ள குழந்தை*
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை