
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💔 💕விஷம் 💔
#🙏கோவில் #தெரிந்து கொள்வோம் #பத்தி கட்டப்பட்ட கக்கன்மாத் கோவில்*🌹
இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும். பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று கதைகள் கூறுகிறது. அதுவும் சிவ பெருமானே இந்த கோவில் பேய்களால் கட்டப்பட வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சிமெண்ட் பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது.புராண கதைகளின்படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினாராம். பேய்களால் கற்களை கொண்டு அடுக்கி இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள். மேலும் அவர் ஒரு சிவபெருமானின் பக்தர் என்றும் சுற்றி ஒரு சிவன் கோவில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.இந்த கோவிலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாகவும், அது எப்படி கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் பலர் நம்புகிறார்கள். இங்குள்ள பல சிலைகள் உடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயில் மத்திய பிரதேசத்தின் அற்புதமான கோவிலாக கருதப்படுகிறது.இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 120 அடி உயரமுள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த கோவிலை சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் உடைந்திருந்தாலும், கக்கன்மாத் கோவில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.🌹
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் *வாழ்க்கை அவ்வளவுதான்*
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🚹உளவியல் சிந்தனை #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️
#🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் #தெரிந்து கொள்வோம்
*படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக* விளங்க துளசியை பெருமாளுக்கு* சாற்றுக*
------------------------------------------------------------------------------------
துளசியால் பெருமாளை அர்ச்சிக்கும் போது பெருமாளின் திருநாமங்களை ஜபிக்க வேண்டும்.
துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு.
துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.
துளசி இலையின் நுனியில் நான்முகனும் (பிரம்மா), மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
துளசி பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை.
வைணவத் திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.
பெருமாளுக்கு உகந்த தெய்வீகத் தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.
படிப்பில் பிள்ளைகள் கெட்டிக்காரராக விளங்க..
------------------------------------------------------------------------------------
புத்தி காரகன் புதன் பகவான் ஆவார். புதன் என்றால் பச்சை. புதன் கிழமையில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று, துளசியை பெருமாளுக்கு சாத்த வேண்டும்.
தொடர்ந்து, நவகிரக சன்னதியில் உள்ள, புதன் பகவானுக்கு இரண்டு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வழிபாட்டினை தொடர்ந்து செய்வதால், பிள்ளைகள் நிச்சயம் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #பத்திஸ்டேட்ஸ் செண்பகவல்லி* அம்மன் கோவிலில் ஐப்பசி* திருக்கல்யாண தேரோட்டம்* .....
14.11.2025
வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு *தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார்* . *இரவு 6 மணிக்கு* *சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார்* .
15.11.2025
சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் *சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது* .
😟😯😟😯😟
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் அம்பாள் அன்ன வாகனத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக அம்பாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, செயல் அலுவலர் (பொறுப்பு) வள்ளிநாயகம், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் மண்டக படிதாரர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தெரிந்து கொள்வோம்.....
🙏🙏🙏🙏🙏









