#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று... செப்டம்பர் 27
1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்ட நாள் செப்டம்பர் 26
1825 - நீராவி என்ஜினால் இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயில் வண்டிச் சேவையான ஸ்டாக்டன்-டார்லிங்டன் ரயில்வே, இங்கிலாந்தில் திறக்கப்பட்டு, சுமார் 500 பயணிகளுடன், 14 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடைந்தது. இடையில் நிறுத்தப்பட்ட 55 நிமிடங்களைக் கழித்தால், சராசரியாக 13 கி.மீ. வேகத்தில் பயணித்திருந்தது. இதற்கு முன்பே, நிலக்கரியை எடுத்துச் செல்ல நீராவி என்ஜினைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்த ஹெட்டன் நிலக்கரி ரயில்வே என்ற நிறுவனமே, விலங்குகளைப் பயன்படுத்தாத முதல் ரயில் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. அதாவது, இவற்றுக்கு முன்னரே ரயல்வே என்பது இருந்தது. சமமற்ற சாலைகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதில் இருந்த சிரமங்களைக் களைய, தொடக்கத்தில் மரத்தாலும், பின்னர், இரும்புப் பட்டைகளாலும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, குதிரைகளால் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. வேகன்வே என்று அழைக்கப்பட்ட இவற்றில், மண் பாதைகளைவிட அதிக சரக்குகளை விலங்குகளால் இழுக்க முடிந்தது. மிகப் பழங்காலத்திலேயே, கற்கள் முதலானபவற்றாலும் இவ்வாறான தடங்கள் அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்புத் தண்டவாளங்களும் தொடக்கத்தில், ட வடிவத்தில் இருபுறமும் சக்கரங்கள் விலகாவண்ணம் அமைக்கப்பட்ட ப்ளேட்வே என்ற அமைப்பிலிருந்து, பின்னர்தான் எட்ஜ்வே எனப்படும் தற்போதைய வடிவத்தை அடைந்தன. செயல்படும் நீராவி என்ஜினை 1712இல் தாமஸ் நியூகாமன் உருவாக்கினார். இதனை மேம்படுத்தி 1781இல் ஜேம்ஸ்வாட் உருவாக்கிய என்ஜின் சக்கரங்களைச் சுழலச் செய்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து, வெற்றிகரமாக வண்டிகளை இழுக்கும் என்ஜினை, ரிச்சர்ட் ட்ரெவிதிக் 1804இல் உருவாக்கினார். இவரின் என்ஜினை மேம்படுத்தி, நீராவி என்ஜினால் இயக்கப்படும் ரயில் வண்டிகளை நடைமுறைக்குக் கொண்டுவந்ததாலேயே, ஜார்ஜ் ஸ்டீவன்சன், ரயில்வேயின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். ஸ்டாக்டன்-டார்லிங்டன் ரயில்வே, ஹெட்டன் நிலக்கரி ரயில்வே ஆகிய இரண்டுமே ஸ்டீவன்சன் உருவாக்கிய நீராவி என்ஜின்களால்தான் இயக்கப்பட்டன. ரயில்வேயில் நீராவி என்ஜினின் வரவே, தொழிற்புரட்சியின் மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருந்தது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
