#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26
1687 - மிகப்புகழ்பெற்ற பண்டைய கிரேக்கக் கட்டிடமான பார்த்தினன், மோரியப் போரில் சேதமுற்ற நாள்
. வெனிஸ் குடியரசுக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையிலான இப்போரில், மோரியாவை வெனிஸ் குடியரசு கைப்பற்றியதால் இது மோரியப்போர் என்று குறிப்பிடப்படுகிறது. மோரியா என்பது தற்போதைய கிரீசின் தென்பகுதியிலுள்ள பெலப்பனீஸ் தீபகற்பத்தின் அக்காலத்திய பெயர். புனித ரோமப் பேரரசின் ஹாப்ஸ்பர்க் அரசர்கள், போலந்து-லிதுவேனியா, வெனிஸ், ரஷ்யா ஆகியவை அடங்கிய புனிதக்கூட்டணிக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையே 1683-99 காலத்தில் நடைபெற்ற பெரும் துருக்கியப்போரின் ஒருபகுதியாக இப்போர் நடைபெற்றது. பார்த்தினன் என்பது அறிவு, கைவினைத்திறன், போர் ஆகியவற்றின் கிரேக்கக் கடவுளான ஏதெனா-வின் ஆலயமாகும். பழைய கிரேக்கக் கட்டிடக்கலையின் எஞ்சியுள்ள அடையாளங்களில் மிகமுக்கியமானதாகக் குறிப்பிடப்படும் பார்த்தினன், கி.மு.447இல் தொடங்கப்பட்டு, 438இல் கட்டி முடிக்கப்பட்டாலும், அழகுபடுத்தும் பணிகள் 432வரை தொடர்ந்தன. பார்த்தினன் கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ஏதனாவுக்கு ஓர் ஆலயம் இருந்து, கி.மு.480இல் பாரசீகப் படைபெயெடுப்பில் அழிக்கப்பட்டது. கிரேக்கக் கட்டிடக்கலையின் டோரிக் முறைப்படி கட்டப்பட்ட பார்த்தினன், கிரேக்கச் சிற்பக்கலையின் மிகச்சிறந்த சிற்பங்களைக்கொண்டிருந்தது. கிரேக்கத்தின் நடு, மேற்குப்பகுதிகளிலிருந்து டோரிக், கிழக்குப்பகுதியிலிருந்து அயானிக், பின்னாளில் உருவானதும், மூன்றிலும் அதிக அழகாக அலங்கரிக்கப்பட்டதுமான கோரிந்தியன் ஆகிய முறைகள் கிரேக்க கட்டிடக்கலையில் காணப்படுகின்றன. பெரும்பாலான கிரேக்க ஆலங்களைப் போலவே, நகரின் கருவூலமாகவே பயன்படுத்தப்பட்டுவந்த பார்த்தினன், கி.பி.6ஆம் நூற்றாண்டுகாலத்தில் கன்னி மேரிக்கான கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1400களின் இடைப்பகுதியில், ஏதென்சை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றியதையடுத்து, இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது. பார்த்தினன் அமைந்திருந்த கோட்டை நகரான ஏதெனியன் அக்ரோபொலிஸ் என்பதன் வெடிமருந்துக் கிடங்காக இதனை துருக்கியர்கள் பயன்படுத்திவந்த நிலையில், 1687 செப்டம்பர் 26 அன்று, ஃபிலோபாப்பஸ் மலையிலிருந்து வெனிஸ் படையினர் சுட்ட குண்டு விழுந்ததில், இதன் ஒரு பகுதி சேதமுற்றது. உயரமான என்ற பொருளுடைய அக்ரோன், நகரம் என்ற பொருளுடைய பொலிஸ் ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான அக்ரோபொலிஸ் என்பது, கிரேக்கத்தின் கோட்டை நகரங்களின் பொதுவான பெயர் என்றாலும், பார்த்தினன் அமைந்துள்ள ஏதென்சின் அக்ரோபொலிசைக் குறிக்கவே அச்சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26
எக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 1978).
கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் (Karl Manne Georg Siegbahn) டிசம்பர் 3, 1886ல் ஸ்வீடனின் ஓரிப்ரோவில் ஜார்ஜ் சீக்பான் மற்றும் எம்மா ஜெட்டர்பெர்க்கின் மகனாகப் பிறந்தார். 1906ல் ஸ்டாக்ஹோமில் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் லண்ட் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கினார். அவரது கல்வியின் போது அவர் ஜோகன்னஸ் ரைட்பெர்க்கின் செயலாளர் உதவியாளராக இருந்தார். 1908ல் அவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1911 ஆம் ஆண்டில் லண்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வறிக்கை காந்தவியல் ஃபெல்ட்மெசுங்கன் (காந்தப்புல அளவீடுகள்) என்று பெயரிடப்பட்டது. ரைட்பெர்க்கின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் செயல் பேராசிரியரானார். மேலும் அவருக்குப் பின் 1920ல் முழு பேராசிரியராக இருந்தார். இருப்பினும், 1922 ஆம் ஆண்டில் அவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவிக்கு லண்டை விட்டு வெளியேறினார்.
1937 ஆம் ஆண்டில், ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸின் நோபல் நிறுவனத்தின் இயற்பியல் துறையின் இயக்குநராக சீக்பான் நியமிக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இது மன்னே சீக்பான் நிறுவனம் (எம்எஸ்ஐ) என மறுபெயரிடப்பட்டது. இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டன. ஆனால் இந்த பெயர் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட மன்னே சீக்பான் ஆய்வகத்தில் வாழ்கிறது. மன்னே சீக்பான் 1914ல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஹென்றி மோஸ்லி சில கூறுகளின் அலைநீளத்திற்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் இடத்திற்கும் இடையிலான உறவைக் கண்டுபிடிப்பதற்காக அதே வகை ஸ்பெக்ட்ரோமீட்டரைப் பயன்படுத்தினார். அதன்பிறகு அவர் மேம்பட்ட சோதனை எந்திரத்தை உருவாக்கினார். இது வெவ்வேறு கூறுகளின் அணுக்களால் உற்பத்தி செய்யப்படும் எக்ஸ்ரே அலைநீளங்களை மிகத் துல்லியமாக அளவிட அனுமதித்தது.
மேலும், மோஸ்லி கண்டுபிடித்த பல நிறமாலை கோடுகள் அதிக கூறுகளைக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார். இந்த கூறுகளைப் படிப்பதன் மூலமும், ஸ்பெக்ட்ரோமீட்டரை மேம்படுத்துவதன் மூலமும், சீக்பானுக்கு எலக்ட்ரான் ஷெல் பற்றிய முழுமையான புரிதல் கிடைத்தது. எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபி, சீக்பான் குறியீட்டில் உள்ள உறுப்புகளுக்கு சிறப்பியல்புடைய வெவ்வேறு நிறமாலை கோடுகளுக்கு பெயரிடுவதற்கான ஒரு மாநாட்டை அவர் உருவாக்கினார். சீக்பானின் துல்லியமான அளவீடுகள் குவாண்டம் கோட்பாடு மற்றும் அணு இயற்பியலில் பல முன்னேற்றங்களைத் தூண்டின.
சீக்பானுக்கு, எக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக 1924ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் ஹியூஸ் பதக்கம் 1934 மற்றும் ரம்ஃபோர்ட் பதக்கம் 1940 ஆகியவற்றை வென்றார். 1944ல், அவர் சீக்பான் பம்பிற்கு காப்புரிமை பெற்றார். சீக்பான் 1954 இல் ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எக்ஸ் கதிர் நிறமாலை மூலம் எலக்ட்ரான்களுக்கு மூன்றாவது உறை(எம். தொடர்) உள்ளது என்பதைக் கண்டறிந்தவர். எக்ஸ் கதிர்த் நிறமாலைத் ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் செப்டம்பர் 26, 1978ல் தனது 91வது அகவையில் ஸ்டாக்ஹோம், ஸ்வீடனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 26 செப்டம்பர் ]
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம் - 1954
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) இறந்த தினம் இன்று (செப்டம்பர் 26).
தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) இறந்த தினம் இன்று (செப்டம்பர் 26).
குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.
l
திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.
l
இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.
l
‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
l
‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.
l
இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.
l
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.
l
‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
l
‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.
l
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 26 செப்டம்பர் ]
பாபநாசம் சிவன் (Papanasam Sivan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 26).
கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்ட பாபநாசம் சிவன் (Papanasam Sivan) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 26).
l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம் கிராமத்தில் (1890) பிறந்தார். இயற்பெயர் ராமசர்மா. 7 வயதில் தந்தையை இழந்தார். இதையடுத்து, பிள்ளைகளுடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார் தாய். மஹாராஜாவின் ஏற்பாட்டால் இலவச உணவுடன், கல்வியும் கிடைத்தது.
l மலையாளம், சமஸ்கிருதமும் பயின்றார். இளம் வயதிலேயே இசையில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தார். மஹாராஜா சமஸ்கிருதக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.
l தாய் மறைவுக்குப் பிறகு, அண்ணனுடன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்தார். நெற்றி நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில் முன்பு மனமுருகிப் பாடுவார். பரமசிவனே பாடுவதாக கருதிய மக்கள் ‘பாபநாசம் சிவன்’ என்றனர். அதுவே பெயராக நிலைத்தது.
l வித்வான் நூரணி மகாதேவ ஐயர், சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை பயின்றார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரிடம் மாணவனாகச் சேர்ந்தார். 7 ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் 1918-ல் இவரது முதல் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து பல இடங்களில் கச்சேரிகள் நடத்தினார்.
l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார். ‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே கண் பாராய்’, ‘நான் ஒரு விளையாட்டு பொம்மையா’ போன்றவை இவரது புகழ்பெற்ற கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால் ‘தமிழ் தியாகய்யர்’ என்று போற்றப்பட்டார்.
l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து அசோக்குமார், சாவித்திரி, நந்தனார், சிவகவி, ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.
l காலத்தால் அழியாத பாடல்களான ‘மன்மத லீலையை’, ‘ராதே உனக்கு’, ‘அம்பா மனங்கனிந்து’ ஆகியவை இவர் இயற்றியவை. பாடல் எழுதும்போதே மெட்டும் அமைத்துவிடும் திறன் பெற்றவர்.
l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களில் பாடி நடித்துள்ளார். 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக 800 பாடல்களை எழுதியுள்ளார். 100 கிருதிகளைக் கொண்ட இவரது முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-ல் வெளிவந்தது.
l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல் ‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’ என்ற நூலை எழுதினார். ராமாயணத்தை சுருக்கி, 24 ராகங்களில் 24 பாடல்களாக ‘ராமசரித கீதம்’ என்னும் நூலை படைத்தார். 75 வயதிலும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில் வீதிகளில் பஜனை பாடிச் செல்வார். மிக எளிமையானவர். இவரது சகோதரர் ராஜகோபால் ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி.
l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா சிகாமணி, சிவபுண்ய கானமணி, சங்கீத கலாரசிகமணி என பல்வேறு விருதுகளைப் பெற்ற பாபநாசம் சிவன் 83-வது வயதில் (1973) மறைந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 26 செப்டம்பர் ]
பெரியசாமித்தூரன் பிறந்த நாள் செப்டம்பர் 26
பெ. தூரன் என்கிற
பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் தமிழ் இசைவல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கைச் சுருக்கம்
பழனிவேலப்பக் கவுண்டர்-பாவாத்தாள் ஆகியோருக்கு மகனாக 1908 ஆம் ஆண்டு தமிழ் நாடு, ஈரோடு மாவட்டம்மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பிறந்தார். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர் - சங்கர்இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைத்தனர். இவர், கொங்கு வேளாளரில் "தூரன்" குலத்தைச் சார்ந்தவர் என்பதால் தன் பெயரோடு "தூரன்" என்று சேர்த்துக் கொண்டார். "மஞ்சக்காட்டு வலசு பழனிவேலப்ப கவுண்டர் மகன் பெரியசாமித்தூரன்" என்பதன் சுருக்கமே ம. ப. பெரியசாமித்தூரன் ஆகும். இவர் தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து 1929இல் ஆசிரியப்பணி ஆற்றினார். மே 1, 1939இல்காளியம்மாளைத் திருமணம் செய்து கொண்ட தூரனுக்கு, சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி என்ற மகள்களும், சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர். மருமகள் செண்பகத்திலகம் ஆவார்.
கல்வி
இளம் வயதிலேயே தாயை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடுமாகாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். அங்கு பணியாற்றிய தமிழாசிரியர் திருமலைசாமி ஐயங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ்அறிவை ஊட்டுபவர். "அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது," என்று கூறியுள்ளார் தூரன்.
தான் படித்த பள்ளியில் விடுதி வசதி இல்லாததால் ஒரு கன்னடிய நாயக்கர் வீட்டில் தங்கி உணவுண்டு படித்தார். மாணவப் பருவத்தில் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம் சென்று ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் முதலியோர் எழுதிய புதினங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். 1926 - 27இல் சென்னை மாநிலக் கல்லூரியில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை இடைநிலை (இன்டர்மீடியட்) வகுப்பில் பயின்றார். 1929 இல் இல் இளங்கலை (பி. ஏ) கணித பட்ட வகுப்பில் சேர்ந்தார். 1931 இல் பட்ட வகுப்புத் தேர்வு எழுதாத போதும் கோபி செட்டி பாளையம் வைரவிழாப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.
பெரியசாமித்தூரனை தமது கல்லூரி மாணவப் பருவம் முதலான நண்பராகவும், பாரதி பாடல்களில் ஈடுபடுத்தியவராகவும், தமிழ்ப்பற்றை மேலும் தூண்டி வளர்த்தவராகவும் பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலுகுறிப்பிடுகின்றார்.[1]
நாட்டுப்பற்று
தூரனின் பாட்டி அவரது மாணவப் பருவத்திலேயே இராட்டை ஒன்றை அளித்து அதில் நூல் நூற்கவும் கற்றுத் தந்தார். அந்த இராட்டையில் நூல் நூற்று, பெரியார் தம் வீட்டிலேயே நடத்திய கதர்க் கடையில் நூல் சிட்டங்களைக் கொடுத்து கதர் வாங்கி அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே உடன் பயின்ற மாணவர்களுடன் இணைந்து "வனமலர்ச் சங்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதிபாடல்களைப் பரவலாக்கி, தேசியப் போராட்டத்துக்கு வலு சேர்த்தார். "பித்தன்" என்ற மாத இதழை நடத்தவும் தூரன் காரணமாக இருந்தார்.
ஆசிரியப் பணி
1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபாளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பிறகு போத்தனூரிலும், அதன் பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில்இயங்கிய இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் சேர்ந்து ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் 1948வரை பணியாற்றினார். அப்போது சிலரிடம் நேரடியாக இசைப்பயிற்சி பெற்றார்.
கலைக்களஞ்சியம் வெளியிடல்
அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கத்தின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. தன்னாட்சி உரிமை உடைய இக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய பத்து தொகுதிகளை வெளியிட்டார். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம்பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.
இசை ஆர்வம்
இளம்வயதில் சிற்றப்பா அருணாசலக்கவுண்டர் கூறிய கதைகளும், மற்றொரு உறவினர் அருணாசலக்கவுண்டர் கற்றுக் கொடுத்த இசைப்பாடல்களும் தூரனுக்குக் கதையிலும் இசையிலும் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது. பிறவியிலேயே கவி உள்ளம் படைத்த தூரன் தமிழில் பாடல்கள் (கீர்த்தனைகள்) புனையத் தொடங்கினார். பிற்காலத்தில் இவரது கீர்த்தனைகள், சுர, தாள இசைக் குறிப்புகளுடன் தொகுதிகளாக வந்துள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய இசைவாணர்கள் பலரும் தூரனின் பாடல்களை மேடையில் பாடியுள்ளனர். இசைக் கல்லூரிகளில் இவரது பாடல்கள் சிலவற்றைப் பாடமாக வைத்துள்ளனர்.
வெளிவந்த நூல்கள்
உயிரியல் (மரபியல்)
பாரம்பரியம் (1949),
பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1954),
கருவில் வளரும் குழந்தை 1956
உளவியல்
குழந்தை உள்ளம் 1947,
குமரப்பருவம் 1954,
தாழ்வு மனப்பான்மை 1955,
அடிமனம் 1957,
மனமும் அதன் விளக்கமும் 1968
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் 1953 (குழந்தை உள்ளம் நூலின் விரிவாக்கம்)
மனம் என்னும் மாயக் குரங்கு 1956 (மனமும் அதன் விளக்கமும் நூலின் சுருங்கிய வடிவம்)
கதைத் தொகுதிகள்
மாவிளக்கு
உரிமைப் பெண்
காலிங்கராயன் கொடை
தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்
தூரன் எழுத்தோவியங்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
தேன்சிட்டு
பூவின் சிரிப்பு
காட்டுவழிதனிலே
மொழிபெயர்ப்பு நூல்கள்
கானகத்தின் குரல்
கடல் கடந்த நட்பு
பறவைகளைப் பார்
நாடக நூல்கள்
காதலும் கடமையும்
அழகு மயக்கம்
சூழ்ச்சி
மனக்குகை
ஆதிமந்தி
பொன்னியின் தியாகம்
இளந்துறவி
இசை நூல்கள்
கீர்த்தனை அமுதம்
இசைமணி மஞ்சரி
முருகன் அருள்மணிமாலை
நவமணி இசைமாலை
இசைமணி மாலை
கீர்த்தனை மஞ்சரி
கவிதை நூல்கள்
இளந்தமிழா
மின்னல்பூ
நிலாப்பிஞ்சு
தூரன் கவிதைகள்
பட்டிப்பறவை
பிற
குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார். சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
நவமணி இசைமாலை
மின்னல் பூ
இளந்தமிழா
தூரன் கவிதைகள்
நிலாப் பிஞ்சு
ஆதி அத்தி
அழகு மயக்கம்
பொன்னியின் தியாகம்
காதலும் கடமையும்
மனக்குகை
சூழ்ச்சி
இளந்துறவி
தூரன் எழுத்தோவியங்கள்
பிள்ளைவரம்
மா விளக்கு
உரிமைப் பெண்
காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத் தொகுதி)
காலச் சக்கரம் (பத்திரிகை)
தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
இசைமணி மஞ்சரி
முருகன் அருள்மணி மாலை
கீர்த்தனை அமுதம்
பட்டிப் பறவைகள்
கானகத்தின் குரல்
கடல் கடந்த நட்பு
பறவைகளைப் பார்
தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
மோகினி விலாசம்
அருள் மலை நொண்டி
காட்டு வழிதனிலே
பூவின் சிரிப்பு
தேன் சிட்டு
காற்றில் வந்த கவிதை
பாரதியும் பாரத தேசமும்
பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
பாரதியும் பாப்பாவும்
பாரதித் தமிழ்
பாரதியும் கடவுளும்
பாரதியும் சமூகமும்
பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
பாரதியும் தமிழகமும்
பாரதியும் உலகமும்
பாரதியும் பாட்டும்
மனமும் அதன் விளக்கமும்
கருவில் வளரும் குழந்தை
குமரப் பருவம்
பாரம்பரியம்
பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
அடி மனம்
நல்ல நல்ல பாட்டு
சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
மழலை அமுதம்
நிலாப்பாட்டி
பறக்கும் மனிதன்
ஆனையும் பூனையும்
கடக்கிட்டி முடக்கிட்டி
மஞ்சள் முட்டை
சூரப்புலி
கொல்லிமலைக் குள்ளன்
ஓலைக்கிளி
தரங்கம்பாடித் தங்கப் புதையல்
நாட்டிய ராணி
மாயக்கள்ளன்
தம்பியின் திறமை
மறைவு
1980ஆம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987 ம் ஆண்டு சனவரி 20 ஆம் நாள் மறைந்தார்.
பெரியசாமித்தூரனின் பணிகள் தொடர்பாக கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் சில ஆய்வேடுகளும் வெளியாகியுள்ளன.
சில ஆய்வேடுகள்
பெ. தூரனின் இலக்கியப்பணி (எம்.பில் ஆய்வேடு) மா. இராமச்சந்திரன், 1987
Periyaswamy Thooran - A Study (எம்.பில் ஆய்வேடு) 1989
பெ. தூரன் கவிதைத்திறன் (எம்.பில் ஆய்வேடு) 1990
நூல்கள்
சாகித்திய அக்கதமி வெளியிடும் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற நூல் வரைசையில் ஒன்றாக ம. ப. பெரியசாமித் தூரன் எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியத்தால் எழுதப்பட்டு 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் நான்காவது பதிப்பு (2010) பத்து அத்தியாயங்களையும் மூன்று பின்னிணைப்புக்களையும் 123 பக்கங்களில் கொண்டிருக்கிறது.
தொண்டில் கனிந்த தூரன் எனும் நூல் சிற்பி பாலசுப்பிரமணியம்என்பவரால் தொகுக்கப்பட்டு பாரதீய வித்யா பவன் கேந்திரா வெளியீடாக வெளிவந்துள்ளது.
விருதுகளும் சிறப்புகளும்
பத்மபூஷன் விருது, வழங்கியது: இந்திய அரசு
கலைமாமணி விருது, வழங்கியது: தமிழக அரசு
இசைப்பேரறிஞர் விருது, 1972. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.
2008 இல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தனது ஆண்டு விழாவை பெ.தூரன் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடியது.
தமிழக அரசு அவருடைய நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியுள்ளது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26,
கவிஞர் டி.எஸ். எலியட் பிறந்த தினம் இன்று.
தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 - 4 ஜனவரி 1965) என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டுரையாளர், நூல் வெளியீட்டாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர். 1914ஆம் ஆண்டு தனது 25ஆவது வயதில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அங்கேயே தன்னுடைய பணி மற்றும் திருமணத்தை அமைத்துக்கொண்டார். மேலும் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுத்து 1927ஆம் ஆண்டு தனது 39 வது வயதில் பிரிட்டிஷ் குடிமகனானார்.
எலியட் எழுதிய "தி லவ் சாங் ஆப் ஜெ. ஆல்பிரேட் ப்ருபிராக்" (1915) என்ற கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் நவினத்துவ இயக்கத்தின் தலைசிறந்த படைப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து "தி வேஸ்ட் லேண்ட்" (1922), "தி ஹாலோ மென்" (1925), "சாம்பல் புதன்" (1930) மற்றும் "நான்கு குவார்டெட்ஸ்" (1943) உள்ளிட்ட மிக பிரபலமான ஆங்கில கவிதைகள் வெளிவந்தன. இவருடைய ஏழு நாடகங்களில் குறிப்பாக "மர்டர் இன் தி கதீட்ரல்" (1935) மற்றும் "தி காக்டெய்ல் பார்ட்டி" (1949) போன்ற நாடகங்கள் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.தற்கால கவிதைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் முன்னோடியாக திகழ்ந்தமைக்காகவும் 1948 இல் இலக்கியத்தில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 26 செப்டம்பர் ]
தோப்பில் முகமது மீரான் பிறந்த நாள் செப்டம்பர் 26
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் பிறந்த நாள் செப்டம்பர் 26
தோப்பில் முகமது மீரான் என்பவர் (செப்டம்பர் 26, 1944 - மே 10, 2019)[1] தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினத்தில் 1944-ம் ஆண்டு செப்.26-ம் தேதி பிறந்த மீரான், மலையாளத்தில் பி.ஏ படிப்பை முடித்தவர். தொடக்கத்தில் மலையாளத்தில் எழுதினார். பின்னர், தான் கேட்ட, பேசிய தமிழ் மொழியை முதலீடாகக் கொண்டு, எழுத ஆரம்பித்தார். அது பின்னாளில் அவருக்கான தனித்துவமிக்க மொழிநடையாக உருப்பெற்றது.
துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம், உள்ளிட்ட நாவல்களையும், அன்புக்கு முதுமை இல்லை. தங்கரசு, அனந்தசயனம் காலனி, ஒரு குட்டித்தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இதில் சாய்வு நாற்காலி நூலுக்காக அவருக்கு சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது.
இஸ்லாம் மீது மதிப்பு கொண்ட மீரான், தான் சார்ந்த முஸ்லீம் சமூக மக்களை விமர்சனங்களோடு அணுகினார். அதற்காக தொடக்கத்தில் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார். `எனக்கு கடவுள் பக்தி உண்டு; நானும் 5 வேளை தொழுவேன்; ஆனால் இஸ்லாம் நிறுவனமாவதை ஏத்துக்கமாட்டேன்’ என்று அழுத்தமாக கூறியவர்.
60களில் இருந்து எழுத தொடங்கிய மீரானின் கதைகளை வெளியிட எந்த பதிப்பகங்களும் முன்வரவில்லை. பல்வேறு சவால்களை கடந்து எழுத்துலகில் பயணிக்க ஆரம்பித்த அவருக்கு, காலம் சரியான அங்கீகாரத்தை வழங்கியது.
வட்டாரமொழியைக்கொண்டு, தான் சார்ந்த மண்ணின் கதைகளை குறுக்கு வெட்டுத்தோற்றத்துடன் பதிவு செய்தவர். அவரிடம் சொல்வதற்கு ஏராளமான கதைகளிருந்தன. ஆனால் காலம் தான் அதை எழுதவதற்கான அவகாசத்தை கொடுக்கவில்லை. ஆம்! 2019 -ம் ஆண்டு மே-10ஆம் தேதி பூவுலகைவிட்டு மறைந்தார் மீரான்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 26 செப்டம்பர் ]
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பிறந்த நாள் செப்டம்பர் 26
நவீன இந்தியாவில் சீர்திருத்தத்தை முன்னெடுத்த மகத்தான தலைவர்களில் ஒருவர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். மேற்கு வங்கத்தின் பர்சிங்கா கிராமத்தில் பிறந்தவர். அவரது பிறந்தநாள் இன்று.
* வறுமையில் வளர்ந்தவர். தந்தை கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.
* 1839-ம் ஆண்டு சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். இலக்கியம், வேதாந்தம், ஸ்மிருதி, நியாய சாஸ்திரம், வானவியல் ஆகியவற்றில் புலமை பெற்றார்.
* கொண்ட கொள்கைக்காக கல்லூரி பண்டிதர் பணியை ஒருமுறை ராஜினாமா செய்தார் வித்யாசாகர். ‘‘சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார்கள். ‘‘தெருத்தெருவாக காய்கறி விற்பேன். கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டேன்’’ என்றார் உறுதியுடன்.
* வங்க மொழியில் அற்புதமான இலக்கண நூல்களை எழுதினார். வங்க எழுத்துகளை மாற்றியமைத்து சீர்திருத்தம் செய்தார். உரைநடையில் புரட்சியை ஏற்படுத்தின இவரது எழுத்துக்கள்.
* கல்வித் துறையில் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தபோது 35 மகளிர் பள்ளிகளைத் திறந்தார்.
* சமஸ்கிருதக் கல்லூரியின் கதவுகளை அனைத்து சாதி மாணவர்களுக்கும் திறந்துவிட்டார். எதிர்ப்புகளை மீறி, ஒடுக்கப்பட்ட மக்களோடு அமர்ந்து உணவருந்தினார். ஆதரவற்றவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதை கடமையாகக் கருதினார்.
* கணவரை இழந்தோருக்கான மறுமணச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் வரலாற்றுச் சாதனை. மூட நம்பிக்கைகள் அதிகம் கொண்ட அந்த காலத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வேதங்கள், சமஸ்கிருதப் பாடல்களில் உள்ள மறுமண ஆதரவுக் கருத்துகளை மேற்கோள் காட்டினார்.
lகணவரை இழந்தோர் மறுமணச் சட்டத்துக்காக 987 பேரிடம் கையெழுத்து பெற்று அரசிடம் சமர்ப்பித்தார். 1856, ஜூலை 26-ல் மறுமணத்தை அங்கீகரிக்கும் அந்த மகத்தான சட்டம் அமலுக்கு வந்தது. அப்போது மறுமணம் செய்துகொண்ட பலரும் தங்கள் சேலையில் இவரது பெயரை நெய்துகொண்டனர்.
* குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் போராடினார். அதன் விளைவாக பெண்களின் திருமண வயது 10 ஆகவும், ஆண்களின் திருமண வயது 14 ஆகவும் மாற்றப்பட்டது.
* தனது மரணத்துக்குப் பிறகு யாருக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்று உயில் எழுதி, தனி யாக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கியிருந்தார். வருங்
காலத்தில் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் அதில் இருந்து ஒதுக்கச்சொன்ன கருணைக் கடல் அவர்!
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26
ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில் பிறந்த தினம்.
ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில்,(26 செப்டம்பர் 1886 - 3 சூன் 1977) ஏ.வி. ஹில் என்று அறியப்படும் இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உடற்கூறு அறிஞர் ஆவார். மேலும் உயிரி இயற்பியல் செயல்முறை ஆய்வுகள் செய்வதற்கு கட்டமைப்பு நிறுவியவற்களின் ஒருவர். இவர் 1922 ஆம் ஆண்டு உடலியக்கவியல் மற்றும் மருத்துவத்திற்கான விளக்க சோதனையில் தசைகளில் ஏற்படும் வெப்பம் பற்றி ஆய்வுக்காக நோபல் பரிசை பகிர்ந்துகொண்டர்.
எலும்பு தசைகள் சுருங்கி ஓய்வெடுக்கும்போது வெளியாகும் வெப்பத்தின் பல துல்லியமான அளவீடுகளை ஹில் செய்தார்.
ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், சுருக்கத்தின் போது வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது, இதற்கு இரசாயன ஆற்றல் முதலீடு தேவைப்படுகிறது, ஆனால் தளர்வின் போது அல்ல, இது செயலற்றது.[17]
அவரது ஆரம்ப அளவீடுகள் ஸ்வீடிஷ் உடலியல் நிபுணர் மேக்னஸ் ப்ளிக்ஸ் விட்டுச் சென்ற உபகரணங்களைப் பயன்படுத்தியது, ஹில் வெப்பநிலை உயர்வை 0.003 டிகிரி செல்சியஸ் மட்டுமே அளவிடுகிறது.
பிரசுரத்திற்குப் பிறகு, ஜேர்மன் உடலியல் வல்லுநர்கள் வெப்பம் மற்றும் தசைச் சுருக்கம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருப்பதை அறிந்தார், மேலும் அவர் அவர்களின் வேலையைப் பற்றி மேலும் அறிய ஜெர்மனிக்குச் சென்றார்.
அவர் தனது கருவியை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுவதற்கும், தயாரிப்பின் மூலம் வெளியிடப்படும் வெப்பத்திற்கும் அவரது தெர்மோகப்பிள் மூலம் பதிவு செய்வதற்கும் இடையிலான நேர தாமதத்தைக் குறைப்பதற்கும் தொடர்ந்து மேம்படுத்தினார்.
உயிரியல் இயற்பியலின் நிறுவனர்களில் ஒருவராக ஹெர்மன் ஹெல்ம்ஹோல்ட்ஸுடன் ஹில் கருதப்படுகிறார்.
வில்லியம் ஸ்டிர்லிங்கின் தொடர்ச்சியாக 1920 இல் மான்செஸ்டரின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் உடலியலில் சேருவதற்கு முன்பு ஹில் 1919 இல் சுருக்கமாக கேம்பிரிட்ஜ் திரும்பினார்.
தன்னைப் பாடமாகப் பயன்படுத்தி - தினமும் காலை 7:15 முதல் 10:30 வரை ஓடினார் - ஒரு கோடு ஓடுவது ஆற்றல் அங்காடிகளை நம்பியிருக்கிறது என்பதை அவர் காட்டினார், பின்னர் அவை அதிகரித்த ஆக்ஸிஜன் நுகர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
வோவுக்கு இணையாக.
#கௌரவங்களும் விருதுகளும்
ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (1918) அதிகாரி
ராயல் சொசைட்டியின் உறுப்பினர் (1918)
உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (1922)
1926 ஆம் ஆண்டில், நரம்புகள் மற்றும் தசைகள்: நாங்கள் எப்படி உணர்கிறோம் மற்றும் நகர்த்துகிறோம் என்ற தலைப்பில் ராயல் இன்ஸ்டிடியூஷன் கிறிஸ்துமஸ் விரிவுரையை வழங்க அவர் அழைக்கப்பட்டார்.
கம்பேனியன் ஆஃப் ஹானர் (1946)
ராயல் சொசைட்டியின் கோப்லி பதக்கம் (1948)
பிரிட்டன் சங்கத்தின் தலைவர் (1952)
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 26
உளவியல் வல்லுநர் பாவ்லோவ் பிறந்த தினம் இன்று.
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் ( செப்டெம்பர் 26 1849 – பிப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார்.
பாவ்லோவ் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார்(1904).
1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திமித்ரி இவானோவிச் பிசாரெவ்வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் இவான் செசேனோவ் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயல்பியலையும் கணிதத்தையும் படிக்கத் தேர்ந்தெடுத்தார். இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*