#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 27
பேஸ்மேக்கரை கண்டறிந்த வில்சன் கிரேட்பாட்ச்
நினைவு தினம் இன்று.
வில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch, செப்டம்பர் 6, 1919 – செப்டம்பர் 27, 2011) என்பவர் செயற்கையாக உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கியைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியாளர். இவர் 350க்கும் மேற்பட்ட காப்புரிமங்களை பெற்றிருக்கிறார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தினால் நிருவகிக்கப்படும் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்களுக்கு வழங்கப்படும் லெமெல்சன்-எம்ஐடி விருதினைப் பெற்றவர்.
நியூயார்க்கின் பஃபல்லோ நகரில் பிறந்த கிரேட்பாட்ச் இராணுவ சேவையில் இணைந்து 1945 ஆம் ஆண்டு வரையில் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றியவர். கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் படித்து 1950 இல் பட்டம் பெற்றார். பஃபல்லோ பல்கலைக்கழகத்தில் 1957 ஆம் ஆண்டில் முதுமாணிப் பட்டம் பெற்றார்.
பெருமளவிலான விலங்கியல் சோதனைக்குப்பின் வில்சன் கிரேட்பாட்ச் மூலமாக உருவாக்கப்பட்ட உட்பொருத்தக்கூடிய இதயமுடுக்கிகள் 1960 ஏப்ரல் மாதம் முதல் முறையாக மனிதர்களில் பயன்படுத்தப்பட தொடங்கின. கிரேட்பாட்ச் கண்டுபிடிப்பு முந்தைய சுவீடன் நாட்டு கருவிகளிலும் வேறுபட்டதாயிருந்தது. அவை ஆற்றல் மூலமாக முதனிலை மின்கலங்களைப் (பாதரச மின்கலம்) பயன்படுத்தின. முதல் சிகிச்சை பெற்றவர் மேலும் 18 மாதங்கள் வாழ்ந்தார். காப்புரிமம் பெறப்பட்ட இக்கண்டுபிடிப்பை அடுத்து மினியாப்பொலிசைச் சேர்ந்த மெட்ரோனிக் நிறுவனம் இதயமுடுக்கிகளில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு புதிய கருவிகளை தயாரித்தது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 27 செப்டம்பர் ]
இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம் - 1907
புரட்சியாளர் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பகத்சிங்தான். ஆம். தன்னுடைய கடைசி மூச்சின்போதும் தன்னுடைய பாதங்கள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என நினைத்தவர். தூக்கில் தொங்கி சொந்த மண்ணில் கால்படாமல் சாவதை விரும்பாத அவர், துப்பாக்கிக் குண்டு ஏந்தி உயிரிழக்கத் தயாராக இருந்தார். தன் உயிர் போகும் கடைசி தருணத்திலும் இந்தியாவின் விடுதலையைப் பற்றி மட்டுமே நினைத்தார்.
Bhagat Singh
1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு மாமாக்கள் சிறையிலிருந்து வெளியான சிறந்த நாளாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த கிசன் சிங் தன் மகனுக்கு பகத் சிங் என்று பெயரிட்டார். பகத் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத்சிங், இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடைமை கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
Bhagat Singh
இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிடுகிறார். இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த அம்மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, இந்திய விடுதலையே எம் லட்சியம்' என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார். 14-வது வயதில் 'வந்தே மாதரம்' என்று காகிதத்தில் எழுதி, அந்தக் காகிதங்களைக் கொண்டுபோய் சுவர்களில் ஒட்டுகிறார் பகத்சிங்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணினார். தோழர்களுடன் இணைந்து இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பில் ஒருவராக இணைகிறார். பின்னர், நவஜவான் பாரத் சபை' என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.
Bhagat Singh
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது, ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது, மதவாதப் போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது' போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்படத் தொடங்கினர்.
'நமது இறுதி லட்சியம் சோசலிசம்' என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி 'இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்' (HRSA) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல, இந்திய முதலாளிகளிடமிருந்தும் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் பகத்சிங். சைமன் கமிஷனில் சட்டவரையறை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராடினர். இதில், பிரிட்டிஷ் போலீஸார் தடியடி நடத்த உத்தரவிட, அந்தச் சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் உயிரிழந்தார்.
இதனால், கோபமடைந்த புரட்சியாளர்களான பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்காட்டை கொல்வதற்குப் பதிலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர். பின்னர், ஆங்கிலேயர் சட்டங்களை எதிர்த்து குண்டுவீச்சில் ஈடுபட்டனர். சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்.
Bhagat Singh
அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதமாகத்தான் தூக்கு மேடை வந்தார். ``ஒரு புரட்சியாளர் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வந்து விடுகிறேன்’’ என்று அவர் கூறும்போது, அவர் கையிலிருந்தது லெனினின் அரசும் புரட்சியும்’ நூல்.
அவரது இறப்பு, பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. இறப்பதற்கு முன் தன்னுடைய அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில், `என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். நீங்கள் அழுது என்னைக் கஷ்டப்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அழக் கூடாது. என்னை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய புரட்சியாளராக இருந்ததால் இவர், சாஹீத் பகத் சிங் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
வெறும் 23 வருடம் வாழ்ந்த பகத்சிங்கை, மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. அவருடைய புரட்சி, சுதந்திரப் போராட்டத்துக்கு உந்துசக்தியாக இருந்தது. அவரை, நிராகரித்துவிட்டு வரலாற்றை யாராலும் பேசிவிட முடியாது. அவரைப் பற்றி எழுத்துகளில் இருப்பதைவிடவும் எழுதப்படாமல் போனதே அதிகம்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று-[ 27 செப்டம்பர் ]
சி. பா. ஆதித்தனார் பிறந்த நாள் செப்டம்பர் 27
சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
சி. பா. ஆதித்தனார்
பிறப்பு
27 செப்டம்பர் 1905
இறப்பு
24 மே 1981 (அகவை 75)
படித்த இடங்கள்
புனித சூசையப்பர் கல்லூரி
இளமைக் காலம்
இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.
பத்திரிகைப் பணி
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
அரசியலில் ஆதித்தனார்
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.
மறைவு
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 27
1947 – தென்னிந்தியத் திருச்சபை சென்னையில் நிறுவப்பட்ட நாள்
தென்னிந்தியத் திருச்சபை வரலாறு செப்டம்பர் 27- 1947
தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிஷனெரி சங்கம் (LMS), மதுரை அமெரிக்கன் மிஷன், மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஷன் சபை, போன்றவைகள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய ஜக்கியச் சபை - (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தன.
இந்த அமைப்பு மற்ற இந்திய புரோட்டஸ்தாந்து திருச்சபைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன், அச்சபைகளுடன் தொடர்பு கொண்டு அவற்றையும் தென்னிந்திய ஜக்கியச் சபையில் இணைப்பதற்காக தரங்கம்பாடியில் 1919 ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிலும். அதற்குப் பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் பெரும்பங்கேற்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர் பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா. தமிழ்நாட்டில் பிறந்த இவர் ஆங்கிலிக்கன் சபையின் முதல் இந்தியப் பேராயராக 1912, திசம்பர் 29இல் திருநிலைப்பாடு பெற்று, புதிதாக நிறுவப்பட்ட தோர்ணக்கல் மாவட்டப் பேராயராக நியமனம் பெற்றிருந்தார்.
தென் இந்திய திருச்சபை பிரார்த்தனைகள் மற்றும் விவாதங்கள் இருபத்தெட்டு ஆண்டுகளின் விளைவாக, அதன் பயனாக 1920 தில் ஆங்கிலேக்கன் சபைகள் இதணுடன் இணைவதற்கு தொடர்பை ஏற்படுத்தினர். பின்பு இவர்களைத் தொடர்ந்து 1925தில் மெதடிஸ்ட் சபைகளும் இணக்கம் தெரிவித்தன. இந்த நடவடிக்கைகளின் பயனாக 1947லில் தென்னிந்தியத் திருச்சபை (Church of South India) என்ற மாபெரும் அமைப்பு உதயமானது. இந்த அமைப்பு 1947 - செப்டம்பர் 27 ஆம் நாள் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 27
தமிழின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று!
நாகேஷ் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
நாகேஷ் செப்டம்பர் 27, 1933 அன்று தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். இவரது இயற்பெயர் நாகேஸ்வரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார்
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் மறக்கவியலா நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் 31.01.2009 அன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.
நகைச்சுவை நாயகன் நாகேஷ் : சிறப்பு கட்டுரை
தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.
நான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மனோ சாமியோ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.
ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, பிசியாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.
நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.
இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை கம்ப ராமாயணம் நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது வயிற்று வலி நோயாளி வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். டாக்டர்... என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன் என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.மேக்அப் போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. தாமரைக்குளம் இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.திருவிளையாடல் படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, சியர்ஸ் சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல் என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன் மகளிர் மட்டும் ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான தசாவதாரம் வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் பிணமாக வாழ்ந்த நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது? என்றார்.சிரித்தபடியே நாகேஷ், உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் அம்மை என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. சிரித்து வாழ வேண்டும் என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.
ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் என்றென்றும் நாகேஷ் பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 27
ராபர்ட் எட்வர்ட்சு பிறந்த நாள்
ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards, செப்டம்பர் 27, 1925-ஏப்ரல் 10, 2013), பிரித்தானிய உயிரியலாளரும் சோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் முன்னோடியும் ஆவார். மருத்துவர் பாட்ரிக் ஸ்டெப்டோவுடன் (1913 – 1988) இணைந்து இவர் நடத்திய ஆய்வுகள் 1978 ஆம் ஆண்டில் முதலாவது சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்க வழிவகுத்தது. இவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
#அறியப்படுவது
reproductive medicine
in-vitro fertilization
#விருதுகள்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2010)
#முதல் சோதனைக் குழாய்க் குழந்தை
ராபர்ட் எட்வர்ட்சு 1960களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை சூலை 25, 1978இல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது.
அந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
எனினும், கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கடவுள் வகுத்த இயற்கைச் சட்டத்தை மதிக்காமல் செயற்கைமுறையில் கருத்தரிக்க மனிதர் முனைவது அறநெறிக்கு எதிரானது என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு. மேலும், ஒரு கருத்தரிப்பு வெற்றிகரமாக நிகழவேண்டும் என்றால் அதற்குத் தயாரிப்பாக வேறுபல கருக்களையும் உருவாக்கவேண்டும், பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படாத பல கருக்கள் சோதனைக் கூடத்தில் பாதுகாக்கப்படவேண்டும், பயன்படுத்தப்படாத கருக்கள் அழிக்கப்பட நேரிடும். இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி, கத்தோலிக்க திருச்சபை செயற்கைமுறைக் கருத்தரிப்புக்கு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது.
#ராபர்ட் எட்வர்ட்சு ஏப்பிரல் 10, 2013இல் காலமானார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 27-1998
1998 – கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 27
கூகுள் (Google) என்பது அமெரிக்காவில்தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழினுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழினுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு இன்று பிறந்த தினம்
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*.
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று... செப்டம்பர் 27
1825 – உலகின் முதலாவது பயணிகள் நீராவித் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்ட நாள் செப்டம்பர் 26
1825 - நீராவி என்ஜினால் இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயில் வண்டிச் சேவையான ஸ்டாக்டன்-டார்லிங்டன் ரயில்வே, இங்கிலாந்தில் திறக்கப்பட்டு, சுமார் 500 பயணிகளுடன், 14 கி.மீ. தூரத்தை இரண்டு மணி நேரத்தில் சென்றடைந்தது. இடையில் நிறுத்தப்பட்ட 55 நிமிடங்களைக் கழித்தால், சராசரியாக 13 கி.மீ. வேகத்தில் பயணித்திருந்தது. இதற்கு முன்பே, நிலக்கரியை எடுத்துச் செல்ல நீராவி என்ஜினைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்த ஹெட்டன் நிலக்கரி ரயில்வே என்ற நிறுவனமே, விலங்குகளைப் பயன்படுத்தாத முதல் ரயில் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றிருந்தது. அதாவது, இவற்றுக்கு முன்னரே ரயல்வே என்பது இருந்தது. சமமற்ற சாலைகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதில் இருந்த சிரமங்களைக் களைய, தொடக்கத்தில் மரத்தாலும், பின்னர், இரும்புப் பட்டைகளாலும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு, குதிரைகளால் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. வேகன்வே என்று அழைக்கப்பட்ட இவற்றில், மண் பாதைகளைவிட அதிக சரக்குகளை விலங்குகளால் இழுக்க முடிந்தது. மிகப் பழங்காலத்திலேயே, கற்கள் முதலானபவற்றாலும் இவ்வாறான தடங்கள் அமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்புத் தண்டவாளங்களும் தொடக்கத்தில், ட வடிவத்தில் இருபுறமும் சக்கரங்கள் விலகாவண்ணம் அமைக்கப்பட்ட ப்ளேட்வே என்ற அமைப்பிலிருந்து, பின்னர்தான் எட்ஜ்வே எனப்படும் தற்போதைய வடிவத்தை அடைந்தன. செயல்படும் நீராவி என்ஜினை 1712இல் தாமஸ் நியூகாமன் உருவாக்கினார். இதனை மேம்படுத்தி 1781இல் ஜேம்ஸ்வாட் உருவாக்கிய என்ஜின் சக்கரங்களைச் சுழலச் செய்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்து, வெற்றிகரமாக வண்டிகளை இழுக்கும் என்ஜினை, ரிச்சர்ட் ட்ரெவிதிக் 1804இல் உருவாக்கினார். இவரின் என்ஜினை மேம்படுத்தி, நீராவி என்ஜினால் இயக்கப்படும் ரயில் வண்டிகளை நடைமுறைக்குக் கொண்டுவந்ததாலேயே, ஜார்ஜ் ஸ்டீவன்சன், ரயில்வேயின் தந்தை என்று குறிப்பிடப்படுகிறார். ஸ்டாக்டன்-டார்லிங்டன் ரயில்வே, ஹெட்டன் நிலக்கரி ரயில்வே ஆகிய இரண்டுமே ஸ்டீவன்சன் உருவாக்கிய நீராவி என்ஜின்களால்தான் இயக்கப்பட்டன. ரயில்வேயில் நீராவி என்ஜினின் வரவே, தொழிற்புரட்சியின் மிக முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருந்தது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 27
ஐன்ஸ்டீன் முதல் முறையாக E=MC^2 என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்திய தினம் இன்று (1905).
இச்சமன்பாட்டின் விளக்கத்தை பார்ப்போமா?
உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman's Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC^2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள்.
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்கிறார்
அதுதான் E=MC^2.
இதில் M- நிறை ,
E- ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), ஆற்றல்(Energy) பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆற்றல் (Energy):
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
நிலக்கரி ஒரு நிலை ஆற்றல். இதை எரிக்கும் போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இது ஜுல் என்ற அலகால் அளக்கப்படுகிறது..
நிறை (mass):
W=Mg என்பது அனைவரும் அறிந்ததே.
நிறை kg லும், எடை N அலகிலும் அளக்கப்படுகிறது.
எடுத்துகாட்டு: ஐஸ் கட்டி 100கிராம் என்றால் அது உருகி தண்ணீராக மாறினால் கூட அதே 100கிராம்தான் இருக்கும். ஆக, நிறை ஆனது மாறிலி.
கதைக்குள் வருவோம். E=MC^2
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே ஐன்ஸ்டீன் சொல்வது.
சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.
1.ஒரு பீரங்கி மற்றும் ஓர் இரும்புக் குண்டை எடுத்துக்கொள்வோம். இந்தக் குண்டை அதிக ஆற்றலுடன் உந்தி வெளியே தள்ளும் போது, ஒளியின் திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
நாம் வெளியே தள்ளும் ஆற்றலில் (energy)ஒரு பாதி மட்டும் வேகத்தை அதிகப்படுத்தும். மற்றொரு பாதி, அந்த இரும்புக் குண்டின் நிறையை (mass) அதிகப்படுத்தும்.
ஆக, ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய எந்த ஒரு பொருளின் வேகத்தை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் அதன் நிறையைத்தான் அதிகப்படுத்தும்.
2. ஒரு கால்பந்தை ஒருவன் மெதுவாக கிக் செய்கிறான்.அது உருண்டு வந்து காலில் படுகிறது. நம்மீது ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பந்தை அதிக வேகத்தில்(m/s) கிக் செய்கிறான் என்றால் அது உங்கள் முகத்தில் வந்து படும் போது அந்தப் பந்தின் நிறையானது முதலில் இருந்ததை விட அதிகமாகக் காணப்படும். அதுவே அந்த பந்தானது ஒளியின் வேகத்தில் சென்றால் நினைத்துப் பாருங்கள்..
3. ஆற்றலை நிறையாகவும், நிறையை ஆற்றலாகவும் மாற்ற முடியும்.
தங்கக் கட்டியை எடுத்து சுமார் 10-20 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தினால், அதனுடைய நிறையானது 0.000000000000014கிலோ கிராம் அதிகரிக்கும்.
வெப்பப்படுத்துவதை நிறுத்தினால் பழைய நிலைமைக்குத் திரும்பும்.
ஆகவே, நிறையும் ஆற்றலும் சமம்..(E=M).
இதில் C^2 என்பது மாறிலி..(3×10^8 *3×10^8 = 9×10^16 m/s)
இதைத்தான் ஆற்றல்-நிறை சமன்பாடு E=MC^2 என்று சொல்கிறோம்..
நிறை ஒரு kg என்றால் C^2=9×10^16m/s. ஆக, 9,00,00,00,00,00,00,00,00 joule ஆற்றலை வெளிவிடும். இந்த ஆற்றல் ஐரோப்பா கண்டத்தை ஒரு மணி நேரத்துக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.
மிக குறைந்த நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்றோமே. அது எப்படி என்று பார்ப்போம்.
யுரேனியம் 235 உடன் ஒரே ஒரு நியூட்ரானை மோதச் செய்தால், அது யுரேனியம் 236 ஆகும். மேலும் , பிரிந்து 141 BR + 92kr + 3நியூட்ரான் ஆகும். இதற்கு பெயர்தான் அணுக்கரு பிளவு(Nuclear Fission)..
இந்த 3 நியூட்ரான்கள் அருகில் உள்ள 3 யுரேனியத்துடன் மோதி அதே வினை நடைபெறும் .
அதோடு 9 நியூட்ரான்கள் வெளிவரும் ...
9 நியூட்ரான்கள் 9 யுரேனியத்துடன் இணைந்து 27 நியூட்ரான்களாக , அப்படியே சங்கிலித் தொடர் (chain reaction) நடத்துகிறது.
என்ன நடக்கிறது :
யுரேனியம் + நியூட்ரான்
235+1=236u
பிளவின் போது
140.883 + 91 + 3×1.008=235.812u
236- 235.812 =0.188u
0.188 u இது மாதிரி குறைந்த அளவு ஆற்றலை ஒரு யுரேனியம் நியூட்ரானிடம் மோதி வெளி வருகிறது. இதேபோல் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய ஆற்றலை வெளிப்படுத்தும்....
ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டில் யுரேனியத்தின் அளவு 0.860கிராம் மட்டுமே. அதாவது நமது பேனா மூடியின் நிறையின் பாதி அளவே.
0.8 கிராம் 15,000,000 அளவு TNT ஐ வெளிப்படுத்தியது. சுமார் 80000 பேர் இறந்தனர்..
ஐன்ஸ்டீன்ஸ் E=MC^2 விளக்கம் என்பது குறைந்த அளவு நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.
அணுகுண்டு இப்படித்தான் வெடிக்கிறது:
போரின் போது, எடுத்துக்காட்டாக, அணு குண்டில் யுரேனியம் 100கி இருந்தால்தான் சங்கிலித் தொடரை ஏற்படுத்தும்.
ஆனால் ,95 கி மட்டுமே நிரப்பப்படும்.
குண்டு போடும் இடத்திற்கு வந்த உடன் 10கி உந்தித் தள்ளி 105கி ஆக ஆக்கி விடும். இது 100ஐ விட அதிகம் என்பதால் நியூட்ரானுடன் வினைபட்டு மிக அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது 5000 செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும்.
அறிவியலை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்குப் பயன்படுத்தினால் நினைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படும் புற்று நோய், DNA மாறுபாடு ஆகியவை அபாயகரமானவை.
அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டு வலிமை வாய்ந்தது. அது வெடிப்பதை நாமோ நமக்கு அடுத்தத் தலைமுறைகளோ நிச்சயமாக பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*