#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று செப்டம்பர் 26,
கவிஞர் டி.எஸ். எலியட் பிறந்த தினம் இன்று.
தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 - 4 ஜனவரி 1965) என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டுரையாளர், நூல் வெளியீட்டாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர். 1914ஆம் ஆண்டு தனது 25ஆவது வயதில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அங்கேயே தன்னுடைய பணி மற்றும் திருமணத்தை அமைத்துக்கொண்டார். மேலும் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுத்து 1927ஆம் ஆண்டு தனது 39 வது வயதில் பிரிட்டிஷ் குடிமகனானார்.
எலியட் எழுதிய "தி லவ் சாங் ஆப் ஜெ. ஆல்பிரேட் ப்ருபிராக்" (1915) என்ற கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் நவினத்துவ இயக்கத்தின் தலைசிறந்த படைப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து "தி வேஸ்ட் லேண்ட்" (1922), "தி ஹாலோ மென்" (1925), "சாம்பல் புதன்" (1930) மற்றும் "நான்கு குவார்டெட்ஸ்" (1943) உள்ளிட்ட மிக பிரபலமான ஆங்கில கவிதைகள் வெளிவந்தன. இவருடைய ஏழு நாடகங்களில் குறிப்பாக "மர்டர் இன் தி கதீட்ரல்" (1935) மற்றும் "தி காக்டெய்ல் பார்ட்டி" (1949) போன்ற நாடகங்கள் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.தற்கால கவிதைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் முன்னோடியாக திகழ்ந்தமைக்காகவும் 1948 இல் இலக்கியத்தில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
