ShareChat
click to see wallet page
#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🙏அம்மன் துணை🔱 #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ மகாலட்சுமியை இப்படி வழிபடுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்.* 🌹 எவ்வளவு தான் பாடுபட்டு உழைத்தாலும் முன்னேற்றம் இருப்பதில்லை, வெற்றியும் கிடைப்பதில்லை என்பது தான் பலரின் கவலையாகவே இருந்து வருகிறது. நம் வாழ்வில் பணப்பிரச்சனை, மனக்கவலை என ஏதாவதொரு பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்ட ஒன்று பணம். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் தான் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. கஷ்டங்கள் தீரவும், அதிர்ஷ்டம் பெருகவும் எத்தனையோ வழிகளை முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என்பவர்கள், 5 ரூபாய் நாணயத்தை வைத்து தங்களின் பிரச்சனைக்கு ஏற்ற இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்லதொரு மாற்றம் ஏற்படும். அசல்பதிவேற்றியவருக்கு நன்றி. மகாலட்சுமியை வழிபட உகந்த நாள்: மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி, செல்வத்திற்கான கடவுள் என அனைவராலும் சொல்லப்பட்டாலும், மகாலட்சுமி 16 வகையான செல்வங்களை வழங்கக்கூடிய தெய்வமாகும். குழந்தை பேறு, வெற்றி, தைரியம், பதவிகள் உள்ளிட்ட 16 வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியவர்கள் தான் அஷ்டலட்சுமிகள். இவர்களை முறையாக வழிபட்டு வந்தாலே வாழ்வில் எந்தவித குறையும் இல்லாமல், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க வெள்ளிக்கிழமை ஒரு சிறந்த நாளாகும். மற்ற கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டாலும் சிறப்பு தான். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தினந்தோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்றம் அடைய. உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் அடிக்கடி பிரச்சனைகள் வந்து, பண கஷ்டத்தால் கவலைப்படுபவர்கள், 5 ரூபாய் நாணயத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். 5 ரூபாய் நாணயத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவவும். அதை மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டவும். அந்த நாணய முடிச்சை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள். மறுநாள் காலையில் அந்த பொட்டலத்தை எடுத்து உங்களுடைய அலுவலகம் அல்லது வியாபார இடத்தில் பணத்தை வைக்கும் லாக்கரில் வைக்கவும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும், தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கும். வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க.. சில நேரங்களில் நிறைய சம்பாதித்தாலும், பணம் கையில் தங்காமல் போகலாம். வீட்டில் எப்போதும் பண பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இதற்கு வெள்ளிக்கிழமை அன்று ஒரு 5 ரூபாய் நாணயத்தை கங்கை நீரால் சுத்தம் செய்த பிறகு, அதை சில ரோஜா பூக்கள் மற்றும் அரிசியுடன் சேர்த்து லட்சுமி தேவியின் காலடியில் வைத்து அவளை வணங்கவும். அந்த பொருட்களை இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த பொருட்களை எடுத்து சிவப்பு துணியில் கட்டி, அதை உங்களுடைய பணப்பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூக்களை மாற்றி, இப்படி மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பண கஷ்டத்தில் இருந்து விடுபடலாம். உங்களுடைய வீட்டில் பொருளாதார நிலை உயரும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு பண சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்கும். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க.. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய மண் கலசத்தில் மஞ்சள் கலந்த அரிசியை போடவும். அதில் கங்கை நீரால் சுத்தம் செய்த 5 ரூபாய் நாணயத்தை போடவும். அந்த கலசத்தை எடுத்து பூஜை அறையில் வைக்கவும். தினமும் இறைவனை வழிபடும் போது அந்த கலசத்தையும் சேர்த்து வழிபடுங்கள். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் கெட்ட சக்திகள் நீங்கும். நல்ல சக்திகள் உண்டாகும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் சந்தோஷம், அமைதி ஆகியவை நிலவும். வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க இந்த பரிகாரத்தை செய்து வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டு சகல செல்வங்களையும் பெறுவோம்.✍🏼🌹
🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் - KR KR KR KR KR KR - ShareChat

More like this