ShareChat
click to see wallet page
#📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #📢 அக்டோபர் 1 முக்கிய தகவல்🤗 இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சிய எதிர்த்து எதிர்கட்சியே ஜெயிக்க முடியாதுங்கறது தான் எதார்த்தம். ஆனா RK நகர்ல அதிமுக - திமுக என்ற இரு பெரும் கட்சிக்களின் புகழ் பெற்ற சின்னங்களையும், படை மற்றும் பண பலத்தையும் மீறி தனியாளாக தினகரனுக்கு வெற்றியைச் சாத்தியப் படுத்திக் கொடுத்த சாமர்த்தியசாலி செந்தில் பாலாஜி. அதனால் தான் ஸ்டாலின் அவரைக் கட்சிக்குள் சேர்த்துக் கொண்டு மாவட்ட செயலாளர் பதவியைக் கொடுத்து மந்திரியாக்கி, கொங்கு மண்டலத்தில் திமுகவை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு என அவருக்குக் கட்சியில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். திமுக ஒன்றும் பலகீனமான நிலையில் இல்லை. 2019, 2021, 2024 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் 2024 ல் 40க்கு 40 ஐ அடித்திருக்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளில் நில அபகரிப்பு இல்லை, மின் வெட்டு இல்லை, 2G இல்லை, வீராணம் இல்லை, ஒவ்வொரு ஆண்டும் மேட்டுர் அணை வேறு நிரம்பித் தொலைந்து விடுகிறது, தொழில், கல்வி, GDP , வேலை வாய்ப்பு, பேரிடர் மேலாண்மை என எல்லாத் தளங்களிலும் தேசிய அளவில் முன்ணணி மாநிலம் என ஒன்றியமே புள்ளிவிவரம் தரும் அளவிற்கு சிறப்பான ஆட்சியென முன்னெப்போதையும் விட மிக வலுவான நிலையில் இருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக நிலையாக நிற்கின்றனர். போதாக் குறைக்கு மநீம கரைந்து திமுக வோடு ஐக்கியமாகி விட்டது. ஆனால் எதிரணியோ கலகலத்துக் கிடக்கிறது. இப்போது அதிமுகவை பாஜக வம்படியாக மிரட்டி கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறது. பாமகவில் அப்பனும் மகனும் அடிதடி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தேமுதிக அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது. ஓபிஸ்ஸும், சசிகலாவும் எப்படியாவது அதிமுகவுக்குள் நுழைய முடியாதா என தவித்துக் கிடக்கின்றனர். இதில் செங்கோட்டையன் வேறு கலகம் செய்யப் பார்க்கிறார். எடப்பாடியோ ஆம்புலன்ஸ் உள்ள வந்தா அடி என ஒரு நாலாம் தர ரவுடியைப் போன்று நிதானம் இழந்து பிதற்றிக் கொண்டிருக்கிறார். நாம் தமிழர் சீமானின் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் விஜய் வேறு களத்தில் குதிக்க உண்மையாக கலங்கிப் போனது சீமானும் எடப் பாடியும் தான். விஜயின் வருகை திமுகவுக்கு அனுகூலமே. அவரையும் அவரது தற்குறிக் கூட்டத்தையும் இணையத்தில் பிற முட்டாள்களைக் கலாய்ப்பது போல மட்டுமே திமுக அபிமானிகள் வைது கொண்டிருந்தனர். அது கூட ஒரு ஜாலியாகத் தான் சென்று கொண்டிருந்தது. அவர்களை திமுக ஒரு பொருட்டாகக் கூட மதிக்க வில்லை என்பது மட்டுமே உண்மை. விஜய் தான் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுகவை ஒரண்டை இழுத்துக் கொண்டிருந்தார். அவர் ஆளுங்கட்சியைத் தவிர வேறு யாரை வம்புக்கு இழுக்க முடியும். ஸ்டாலினின் இடத்தில் எடப்பாடி இருந்திருந்தால் CM சித்தப்பா எனக் கிண்டலடித்து எடப்பாடியாரை வம்புக்கு இழுத்திருப்பார். அவர் அப்படி மட்டுமே அரசியல் செய்ய முடியும். அவருக்கு சித்தாந்தமோ கொள்கைகளோ கிடையாது. இதைக் கூடவா 50 வருடம் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட திமுக தலைமையால் புரிந்து கொள்ள முடியாது? கரூரின் மக்கள் தொகை தோராயமாக 10 லட்சம் என வைத்துக் கொள்வோம். அன்று கூடிய கூட்டம் 30,000 பேர் என்று வைத்துக் கொண்டால் கூட வெறும் 3% . இந்த பூத் கமிட்டி கூட இல்லாத, எந்த ஒரு அமைப்புப் பலமோ, நிர்வாக அனுபவமோ, தேர்தல் அனுபவமோ அற்ற சிறு தற்குறிக் கூட்டத்தைக் கண்டு பயந்து திமுகவின் சார்பாக செந்தில் பாலாஜியும் பெரும் சதித் திட்டம் தீட்டி, அவர்கள் கேட்ட இடத்தைக் கொடுக்காமல், மின்சாரத்தைத் துண்டித்து, கல்லெறிந்து, செருப்பு வீசி, ரவுடிகளை உள்ளே நுழைத்து, கத்திகளைக் கொண்டு ரசிகர்கள் சட்டைகளைக் கிழித்து, நினைத்தபடி கூட்ட நெரிசலை உருவாக்கி 40 பேரைக் கொன்று, மருத்துவமனைக்கு விரைந்து நல்லவன் போல் நாடகமாடி தவெக வின் மீது பழியைப் போட்டு அந்தக் கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றார் என உறுதியாக நம்புகின்றனர். மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டிற்குத் தீ வைத்தார் என நம்புபவர்களை விட அதிக அசூயையோடு நான் செந்தில் பாலாஜியை விமர்சித்திருக்கிறேன். தலையில் இரட்டை இலை சின்னத்தை LED விளக்குகளாகப் பொருத்திக் கொண்டு தலைமைக்குத் தன் விசு வாசத்தைக் காட்டியதற்காக; ஜெயலலிதாவிற்காக அங்கப் பிரதட்சனம் செய்ததற்காக, அம்மாவிற்காக வேண்டிக் கொண்டு மொட்டை அடித்ததற்காக, முதல் தேர்தலில் ஒட்டுக்காக ஒவ்வொரு வாக்காளர் காலிலும் விழுந்து எழுந்ததற்காக, திமுக, அதிமுக, தினகரன், மீண்டும் திமுக என மாறி மாறித் தாவியதற்காக, பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கியதற்காக என நான் பல முறை அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர் மீது சுமத்தப் படும் பழியில் எள்ளளவும் உண்மையில்லை என்பதே எனது பார்வை. அப்படி முதல்வன் திரைப்படத்தில் ரகுவரன் கதாபாத்திரத்தின் ரேஞ்சுக்கு அவரை வில்லனாக சித்தரிக்க முனைபவர்களின் வெறுப்பு என்னை ஆச்சர்யப் பட வைக்கிறது. இதில் இன்னும் ஒரு கூத்து அதே செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது வியந்தோதியவர்கள் இன்று அவர் மீது சதிக்குற்றம் சாட்டி வாதிட்டுக் கொண்டிருப்பது. அத்தனை பேர் கைகளிலும் செல்போன்கள், இருபுறமும் இருந்த கட்டிடங்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் கைகளில் செல்போன்கள், தெருவில் இருக்கும் CCTV கேமிராக்கள், ட்ரோன்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக வலைதள இன்ஃப்ளுயன்ஸர்கள், காவலர்கள் என இத்தனை பேரையும் தாண்டி தள்ளு முள்ளு ஏற்படுத்தி தனது நோக்கத்தை செந்தில் பாலாஜி நிறைவேற்றிக் கொண்டார் என்கின்றனர். திமுக வின் சதி என்கின்றனர். ஆதாரம் என்ன எனக் கேட்டால் "அதான் தெளிவா கரண்ட்ட கட் பண்ணிட்டாய்ங்களே" என்கின்றனர். அந்த அளவுக்கெல்லாம் நான் ஒர்த் தில்லீங்ணா என இன்று விஜய் வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து ஒரு காணொளியைப் பதிவிட்டிருக்கிறார். இருந்தும் ஆத்தா வையும் சந்தைக்குப் போகணும் காசு குடு என்பதைப் போல திரும்பத் திரும்ப திமுக சதி என்றே உருண்டு கொண்டிருக்கின்றனர். இதோ திமுக விஷச் செடியாம். எதிர்வரும் தேர்தலில் மக்களால் வேரோடு பிடுங்கி எறியப் படுமாம். இதற்கு முந்தய பதிவில் தம்பி ஒருவர் அடித்துச் சொல்கிறார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகாவது திமுக வெறுப்பாளர்கள் வாய் மூடுமா என்பதைக் காணக் காத்திருக்கிறேன். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
📺அரசியல் 360🔴 - Under the stalwart leadership of @mkstalin; DMK registers continuous victory; triumphing in all 40 constituencies in the 2024 general elections: Together; we for Social inclusivity Tamil pave the path Nadu remains strons. #MKstalin #DMKATN #TNElectionResults PEN IMg TRIUMPH LEGACY  २०२४ LOK SABHA ETCTION 2022 DMK REPEATS ITS SUCCESS STORY IN LOCAL BODY TAMIL NADU ELECIION 204 BY WINNING A0OUT OF 40 TNASSEMBLY SEATS IN THE ELECTION 2024 ELECTION २०१९ LOk SABHA ELECTION Under the stalwart leadership of @mkstalin; DMK registers continuous victory; triumphing in all 40 constituencies in the 2024 general elections: Together; we for Social inclusivity Tamil pave the path Nadu remains strons. #MKstalin #DMKATN #TNElectionResults PEN IMg TRIUMPH LEGACY  २०२४ LOK SABHA ETCTION 2022 DMK REPEATS ITS SUCCESS STORY IN LOCAL BODY TAMIL NADU ELECIION 204 BY WINNING A0OUT OF 40 TNASSEMBLY SEATS IN THE ELECTION 2024 ELECTION २०१९ LOk SABHA ELECTION - ShareChat

More like this