ShareChat
click to see wallet page
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள். *இனிமையான சுகந்த வாசனை!* எனக்கு அன்பானவர்களே, இன்றைக்கு "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்" (2 கொரிந்தியர் 2:15)என்று பவுல் எழுதுகிறார். இதற்கு முந்தைய வசனத்தில், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று கூறுகிறார். ஆண்டவர்தாமே நமக்காக இதைச் செய்கிறார். அவர் நம் கரங்களைப் பற்றி வெற்றிப் பவனியாக அழைத்துச் செல்கிறார். தேவன், உங்களை கிறிஸ்துவின் சுகந்த வாசனை என்று அழைக்கிறார். பழைய காலத்தில் பட்டணங்களை வெற்றிக் கொண்ட பிறகு, ராஜாக்கள் பெரிய ஊர்வலம் நடத்துவார்கள்; அப்போது தூபவர்க்கம் எரிக்கப்படும்; போரினால் ஏற்பட்ட அழிவுகள் காண்பிக்கப்படும்; கூட்டத்தினர் ஆரவாரிப்பார்கள். ஆனால், பவுல், நீங்களே தூபவர்க்கமாய், தேவனுக்கு முன்பாக எழும்பும் சுகந்தவாசனையாய் இருக்கிறீர்கள் என்கிறார். நீதியான வாழ்க்கை நடத்துவதின் மூலம், கிறிஸ்துவின் நற்கந்த வாசனையை பரப்பும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. நீதியான வாழ்க்கை நடத்துவது தெரிவல்ல; மாறாக, நமக்குள் தேவன் இருப்பதால் அத்தியாவசியமானதாகும். பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆரோனும் ஆசாரியர்களும் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டார்கள். அந்த தைலம் அவர்கள் தலைகளில், தாடிகளில், அங்கிகளில் வழிந்தோடி சுகந்த வாசனையை கொடுத்தது. ஆகவேதான் கர்த்தர், "சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்" (எசேக்கியேல் 20:41)என்று கூறுகிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயம் சுகந்தவாசனையாய் இருக்கிறது என்றும் வேதம் கூறுகிறது (ஏசாயா 11:3). நாம் பயபக்தியாய் வாழ்ந்து, தேவனுக்கு பயப்படும்போது அவருக்கு பிரியமான வாசனையாக மாறுகிறோம். இயேசுவின் சுபாவத்தை காட்டும்படி வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவைப் போல வாழும்போது, இந்த உலகம் முழுவதற்கும் நாம் நற்கந்தமாக மாறுகிறோம். "பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல..." (நீதிமொழிகள் 27:9)என்று வேதம் அழகாக கூறுகிறது. ஆம், ஆண்டவர் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உங்களை சந்தோஷத்தை, ஆறுதலை, சமாதானத்தை தரும் நற்கந்தமாக பயன்படுத்துவாராக. அவரது பிரசன்னத்தால் உங்களை நிரப்புவாராக; தேவன் அறிகிற அறிவினால் உங்களை நிரப்பி, தம்மைப்போல மாற்றுவாராக. ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - இரட்சிகிகபீபடுகிறவ கீகளுகிகுள்ஸேூி கெட்டுப்போகிறவீகளு ககுள்ஸேஜீ நாங்கள் தேவனுக்குத்கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் 2கொயிந்தியர் 215 இரட்சிகிகபீபடுகிறவ கீகளுகிகுள்ஸேூி கெட்டுப்போகிறவீகளு ககுள்ஸேஜீ நாங்கள் தேவனுக்குத்கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம் 2கொயிந்தியர் 215 - ShareChat

More like this