#📢 செப்டம்பர் 29 முக்கிய தகவல்🤗 #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு. அரவிந்தன், இப்பதிவை அரசியல் நோக்கத்துடன் யாரும் அணுக வேண்டாம் 🙏🏻 சராசரி மக்கள் நலன் பார்வையில் இப்பதிவை படித்தால் போதும் 👍🏻
முன்பு எல்லாம் அரசியல் தலைவர்கள், கட்சி பரப்புரைகளையோ, கூட்டத்தையோ, மாநாடுகளையோ.. ஒவ்வொரு ஊரிலும் திடல் என்று ஒன்று இருக்கும், மைதானம் என்று ஒன்று இருக்கும், கார்னர் என்று ஒன்று இருக்கும்.. அவ்வாறான ஒரு பெரிய இடத்தில் தான் அவைகளை நடத்துவார்கள் 👍🏻 அதாவது தஞ்சையில் எடுத்தீர்களேயானால் திலர்கள் திடல் என்ற இடத்தில் மட்டும் தான் முன்பெல்லாம் அவ்வாறு நடக்கும்.. மதுரையில் எடுத்தீர்களேயானால் தமுக்கம் மைதானம் என்று இருக்கும்.. திருச்சியில் எடுத்தீர்களேயானால் ஜி கார்னர் என்று இருக்கும்.. அங்கேதான் கூட்டங்கள் நடக்கும்..
இப்பதிவை படிப்பவர்களில், பொதுவாக ரோடு என்றால் எதற்காக உரியது என்று யாரேனும் ஒரு புத்திசாலி விளக்கம் தாருங்களேன்??
ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும் 🙄🙄
அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. 🙄🙄 சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..
ஆம்புலன்ஸ் போகதானே ரோடே தவிர, கூட்டங்கள் நடத்த இல்லை என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அங்கே கூட்டங்கள் அனுமதி பெற்று நடைபெற்று நடக்கிறப்போ, ஏன் ஆம்புலன்ஸ் இங்கு வருகிறது என்று புத்திசாலித்தனமான கேள்விகள் வேறு.. இப்போது கூட்ட நெரிசல் அதிகமாகி உயிர் சேதங்கள் ஏற்படும் பொழுது உங்கள் தலைவர் மைக்கிலேயே.. எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! எப்பா ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கப்பா!!! என்று கதறினாரே இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஏன் ஆம்புலன்ஸ் கூட்டத்துக்கு நடுவே தேவைப்படுகிறது 🙄🙄
பெண்கள் இங்கே வாருங்கள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வாருங்கள், ஒருவரை மீது ஒருவர் ஏறி செல்லுங்கள், வெளியூர்களிலிருந்து இங்கே நடக்கும் கூட்டத்திற்கு வாருங்கள் என்று உங்களை ஆளுங்கட்சி அழைத்ததா??போலீஸ் அழைத்ததா?? இல்லை எவர் தான் அழைத்தார்கள்?? நான் தளபதி வெறியன் அப்படி என்று சொல்லிக் கொண்டு உங்களை வரச் சொல்லி யார்தான் அழைத்தார்கள் 🙄
இப்பொழுது இங்கே அரசியல் களத்தில் நடந்த இந்தத் துயர உயிரிழப்புகளுக்கு காரணம் அவன் தான், இவன் தான், நான் இல்லை அவனில்லை என்று "Fingers Pointing Game " ஆரம்பித்துவிட்டது.. ஆனால் இந்த உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க காரணம் உயிர் இழந்தவர்களே.. முட்டாள்தனமாக ஒருவரை பார்க்கச் சென்று உயிரை விட்டவர்களே.. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்று இல்லாதவரை நாம் எவரையும் குற்றம் சாட்டி விட முடியாது🙏🏻
உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் இந்த இறப்புக்களுக்கு பிறகாவது.. தானாக முன்வந்து நீதிமன்றத்தை கூட்டி.. இனி வரும் காலங்களில் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் Road show என்ற concept இருக்கவே இருக்கக் கூடாது என்று உத்தரவு இட வேண்டும்.. பொது மக்களுக்கு இடையூறாகவும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருக்கும் இந்த road show களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் 🙏🏻 இறந்த இந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் 🙏🏻
... Dr. கு.. அரவிந்தன்....
