பொதுவாகவே இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் என்பது பார்ப்பனிய கூட்டங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் மூலமும் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருகிறது அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமை மையப்படுத்தி முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் என்பது மிகத் தீவிரமான ஒன்றாக உள்ளது.
பொதுவாக இந்திய மாநிலங்களில் அசாமில் தான் சதவீத அடிப்படையில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக முஸ்லிம்கள் உள்ளனர் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 40% முஸ்லிம்கள் அசாமில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது காரணம் 2021 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதால் உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை..
அசாமில் பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்கள் அதிகளவாக குடியேறியுள்ளதால் ஹிந்துக்களில் மக்கள் தொகை குறைகிறது அதனால் என் ஆர் சி என்ற பெயரில் நாங்கள் கணக்கெடுப்பை நடத்தி முஸ்லிம்களை வெளியேற்ற போகிறோம் என்று கூறினார்கள் அதற்கு ஏற்றார் போல தேசிய அளவிலான சட்டங்களையும் இயற்றினார்கள் அவர்கள் கூற்றுப்படி அஸ்ஸாம் மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷ் அகதிகள் என்பதே ஆகும் அதாவது கிட்டத்தட்ட 80 லட்சம் முஸ்லிம்கள் அகதிகள் என்பது பார்ப்பனிய கூட்டங்களில் நிலைப்பாடு..
இவர்கள் கூறுவதைப் போன்று பங்களாதேஷில் இருந்து பெரும்பாலான முஸ்லிம்கள் அசாமிற்கு குடியேறிவிட்டனராஎன்று பார்த்தால் அசாம் மாநில வரைபடத்தை பார்க்கும் பொழுது பங்களாதேஷோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் அஸ்ஸாமின் பகுதி என்பது மிக மிகக் குறைவு இரண்டே இரண்டு மாவட்டங்கள் மட்டும்தான் பங்களாதேஷ் எல்லையை தனது மாநில எல்லையோடு பகிர்கிறது அந்த இரண்டு பகுதிகளிலும் முஸ்லிம்களின் மக்கள் தொகை என்பது இருபது சதவீதத்திற்கும் குறைவு. இந்த இரண்டு மாவட்டங்களும் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்கள்.
இதைவிட கூடுதலாக மேகாலயா உள்ளிட்ட மற்ற வட கிழக்கு மாநிலங்கள் எல்லாம் பங்களாதேஷோடு தங்களது பகுதிகளை பெரும் நிலப்பரப்பை பகிர்கிறது ஆனால் அந்த பகுதியில் முஸ்லிம்களை மக்கள் தொகை 10% கூட கிடையாது. ஒருவேளை முஸ்லிம்களின் மக்கள் தொகை பங்களாதேஷில் இருந்து வந்ததால் தான் அதிகரித்தது என்றால் அசாமை விட மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்க வேண்டும் இத்தனைக்கும் அந்த மாநிலங்கள் என்பது ஒட்டுமொத்த மக்கள் தொகை வெறும் 10 லட்சத்திற்கும் குறைவு என்பதே எதார்த்தமான உண்மை..
மேலும் மேற்குவங்கம் என்பது பங்களாதேஷோடு மிகப்பெரிய எல்லையை பகிர்கிறது அப்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் அதிகப்படியான பங்களாதேஷ் முஸ்லிம்கள் குடியேறி இருக்க வேண்டும் அப்படியான சூழ்நிலையும் அங்கு இல்லை..
உண்மையை கூற வேண்டுமென்றால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையும் பொழுது பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த பங்களாதேஷில் இந்து மக்கள் தொகை அந்த சமயத்தில் கிட்டத்தட்ட 15 சதவீதம் இருந்தது இரு பகுதிகளையும் ஏற்பட்ட கலவரங்களின் காரணமாக இங்கிருந்து முஸ்லிம்கள் அந்த பகுதிக்கும் அங்கிருந்து இந்துக்களின் இந்த பகுதிக்கும் மாரி குடியேறினர் ..
இதை மெய்ப்பிக்கும் வண்ணம் தான் அசாமில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட என் ஆர் சி கணக்கெடுக்கும் உறுதி செய்தது என் ஆர் சி கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 19 லட்சம் அசாமில் உள்ள மக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்கவில்லை அதனால் அவர்கள் வந்தேறிகள் என்று அசாம் அரசு முத்திரை குத்தியது இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த பட்டியலில் வெறும் ஆறு லட்சம் மட்டுமே முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதே..
உண்மையில் இவர்கள் அகதிகள் தானா அல்லது சரியான ஆவணங்களை கொடுக்க முடியாமல் இப்படியான சூழ்நிலைகளில் சிக்கினார்களா என்பது அடுத்த கேள்வி ஏனென்றால் முன்னாள் குடியரசுத் தலைவர் ராணுவத்தின் உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் உள்ளிட்டவரின் குடும்பங்களை எல்லாம் அகதிகள் என்று முத்திரை குத்தினார்கள் இருந்தாலும் இவர்கள் கூறியதைப் போன்று 80 லட்சம் முஸ்லிம்கள் எல்லாம் அங்கு அகதிகளாக இல்லை மாறாக வெறும் ஆறு லட்சம் மட்டுமே என்ற உண்மை வெளியானது மீதம் உள்ளவர்கள் முஸ்லிம்கள் கிடையாது ஹிந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
இத்தனைக்கும் இந்த கணக்கெடுப்பு எடுத்தது முஸ்லிம் வெறுப்பு அரசியலில் ஊறிய பார்ப்பனிய சர்க்கார் தான் இருந்தாலும் அந்த கணக்கெடுப்புக்கு பின்பும் கூட இன்னமும் அசாமில் 80 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக உள்ளனர் என்ற பொய்களை தொடர்ந்து பரப்பிக் கொண்டே தான் உள்ளனர்..
எது எப்படியோ இந்த தேசத்தைப் பொறுத்தவரை பார்ப்பனிய கூட்டங்கள் தங்களது உயர் சாதி கூட்டத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டும் அப்படியான ஒரு எதிரியை தான் முஸ்லிம்கள் என்ற பெயரில் கட்டமைத்துள்ளார்கள் இந்த கட்டமைப்பின் மூலம் தாங்கள் அரங்கேற்றம் அத்தனை கொடுமைகளையும் நியாயப்படுத்தி தங்களது உயர் சாதி கூட்டங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் நரித்தனத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் ..
இந்த சுயநலமான அரசியல் எத்தனை காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி எது எப்படியோ சொந்த நாட்டின் ஒரு பகுதி கிட்டத்தட்ட 20% மக்களை எதிரிகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை வளர்த்து சட்டங்களில் மூலம் அவர்களை ஒடுக்க நினைப்பதன் மூலம் இந்த தேசம் ஒரு காலமும் வளரப்போவதில்லை மாறாக வீழ்ச்சியை மட்டும் சந்திக்கும் என்பதே எதார்த்தமான உண்மை #👨மோடி அரசாங்கம்

