
Arunachalam
@463115585
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
இன்னிக்கு ஈரோட்டுல
முதல்வர் முக.ஸ்டாலின் பேசினப்ப -
மதுரை எம்ப்பி சு.வெங்கடேசன்
முகநூல்ல இப்படி எழுதிருக்காருன்னு
சொன்னப்பதான் -
போய்த் தேடிப் பாத்தேன்.
என்னா அநியாயம்ங்க இது?
தமிழ்நாட்டு ரயில்வே துறைக்கு
நம்ம மோத்திஜி கெவர்மண்டு செஞ்ச
நாலு வஞ்சகத்தை -
லிஸ்ட் போட்ருக்காரு சுவெ.
என்னான்னு கேளுங்க.
🌑
வஞ்சகம் நம்பர் 1.
2024-25 ஆம் வருஷம் புதிய ரயில்வே
வழித்தடத்துக்குன்னு
ரூ.31458 கோடி ஒதுக்கிருக்காங்க.
அதுல தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கினது
வெறும் 301 கோடி.
அதாவது நூத்துக்கு
ஒரே ஒரு பர்சண்ட் மட்டும்!
பாஜக ஆளுற மாநிலங்களுக்கு
பல்லாயிரம் கோடி.
தமிழ்நாடு, கேரளாவுக்குப்
பட்டை நாமமா?
நாங் கேக்கலைங்க !
வேலையத்துப்போயி
இந்த சுவெ கேட்ருக்காரு!
🌑
வஞ்சகம் நம்பர் 2.
இந்த வருஷ பிரதமர் கதி சக்தித் திட்ட
அறிவிப்புத் தொகை ரூ 29 995 கோடி!
இந்தத் திட்டத்துப்படியோ இல்லன்னா -
வேறு எந்தப் பேரிலயோ -
தெற்கு இரயில்வேக்குன்னு
ஒரு திட்டமும் அறிவிக்கப்படல.
ஒத்த ரூவா நிதியும் குடுக்கலே.
🌑
வஞ்சகம் நம்பர் 3.
நிலக்கரி இரும்புத்தாது ஏத்திட்டுப்போற
கார்ப்பரேட் கம்பெனிங்களுக்கு
தூரத்தைப் பொறுத்து -
15 லருந்து 20 சதவீத கட்டண சலுகையாம்!
ஆனால் மூத்த குடிமக்களுக்கு
ஒரு கட்டண சலுகையும் கெடயாது!
இரும்புக்கு, நிலக்கரிக்கு இருக்கற
மரியாதைகூட மனிசனுக்கு இல்லியான்னு
நாங் கேக்கலைங்க - பொழப்பத்துப் போன
இந்த எம்ப்பி கேட்ருக்காரு!
🌑
வஞ்சகம் நம்பர் 4.
இரயில்வேத் திட்டம் - நிதி ஒதுக்கீடுங்களை
முழுசா மக்களுக்கு விளக்கற
பிங்க் புக்கை வெளியிடாம
மோத்திஜி மொத்தமா ஊத்தி மூடிட்டாராம்!
தரவுகளையும், புள்ளிவிபரங்களையும்
மக்கள்ட்டருந்து மறைக்கறது
மாபெரும் வஞ்சகமில்லையான்னு
எம்ப்பி கேக்கறாரு!
🌑
வஞ்சகம் நம்பர் 5.
9000 காலியிடங்களை நிரப்பணும்னு
நம்ம மோத்திஜி கிட்ட
தெற்கு இரயில்வே கேட்ருக்கு.
ஆனால் 2000 பேரை மட்டுமே
தேர்வு செய்ய அனுமதிச்சிருக்காங்க.
600 டிரைவர் காலியிடங்களை நிரப்பணும்னு
கேட்டதுக்கு - வெறும் 200 பேருக்கு மட்டுமே
பர்மிஷன்னு சொல்லி நம்ம மக்களுக்கு
கேட்டை இழுத்து மூடிட்டாரு மோத்திஜி !
🌑
ஏற்கனவே - கோய்ம்பத்தூர் மதுரை
மெட்ரோ திட்டத்துக்கு -
மக்கள் தொகைன்னு பொய்க் காரணம் காட்டி
வெச்சானுங்க ஆப்பு !
இப்ப இந்த லிஸ்ட்டு!
தமிழனும் மலையாளத்துக்காரனும்
எவ்வ்ளோ அடிச்சாலும்
தாங்கறானுங்கய்யான்னு
நெனைக்கிறாங்க போல!
என்னமோ போடா
சோனமுத்தா 😞
🌑
நாஞ்சொல்றது சரின்னு பட்டா
ஷேர் செய்யுங்க போதும்!
🌑
#highlight
#suvenkatesanMP #southernrailway
பதிவு : தோழர் Rathan Chandrasekar #👨மோடி அரசாங்கம்
இதனால்... பாஜகவின் தேர்தல் #ஓட்டுத்திருட்டு மோசடிகளை எதிர்க்கிற... காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது எல்லாம் இரண்டு விஷயங்கள் மட்டுமே.
1. முதல் விஷயம்.
9.12.2025 அன்று...
தமிழ்நாட்டில் #வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதில்... தமது அல்லது பெற்றோர் அல்லது தாத்தா/பாட்டி ஆகியோரின் 2002/2005 SIR தகவல்களை தேட முடியாமல், சரியாக படிவம் நிரப்புவதில் குறைபாடு கொண்டவர்கள் விடுபட்டுப் போய் இருப்பார்கள்.
அவர்கள் எல்லாரும்... படிவத்தின் பின்பக்கம் கூறப்பட்டுள்ள... தே ஆ குறிப்பிட்ட 13 ஆவணங்கள் காட்டி மீண்டும் SIR வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம்.
இதனிடையில்... இந்த ஆண்டு புதிதாக தமிழ்நாட்டில் 18 வயது பூர்த்தி ஆனவர்கள்... 2025 வாக்காளர் பட்டியலில் இல்லாமல்... வேறு எங்கிருந்தோ புதிதாக இங்கே வந்து சேர்ந்தவர்கள்... எல்லாம் SIR வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு...
அடுத்த ஆண்டு... 07.02.2026 அன்று...
தமிழ்நாட்டில் #இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதை கையில் வைத்துக்கொண்டுதான்... கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் தருவார்கள். தே ஆ செய்துள்ள தகிடுதத்தங்கள் இதில் தான் வெளிப்படும்.
இந்த நாளுக்கும்...
தேர்தல் அறிவிப்பு நாளுக்கும் இடைப்பட்ட ஓரிரு வாரங்களில் யாரையும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது... என்று காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவிக்க வேண்டும். அப்படி சேர்த்தால்... அது யாருக்குமே தெரியாது.
பிகாரில் இப்படித்தான்... இறுதி வாக்காளர் பட்டியல் (7.42 கோடி வாக்காளர்கள் என்று இதையும் முழுமையாக அன்று புள்ளி வைத்து) வெளியிட்ட பின்னர்... தேர்தல் வேட்புமனு அறிவிப்புக்கு இடையேயான 10 நாட்களில் மட்டும்.... 3.66 லட்சம் வாக்காளர்கள் திடீரென சேர்க்கப்பட்டதாக... தேர்தல் எல்லாம் முடிந்த பிறகுதான்... தே ஆ மற்றொரு அறிவிப்பில் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை 7,45,26,858 என்று முதன் முறையாக அறிவித்தது. (ஒப்பிட்டுப் பார்க்க : படங்கள் 2 & 3)
இது நிச்சயமாக... மோசடி முறைகேடு தில்லுமுல்லு அன்றி வேறில்லை.
2. இரண்டாம் விஷயம்.
தேர்தல் முடிந்த பின்னர்....
இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் மாலை வெளியிடப்பட்டு... அது மீண்டும் மீண்டும் நள்ளிரவில் மாற்றப்பட்டு... மறுநாளும் மாற்றப்பட்டு... ஓரிரு நாள் கழித்து இறுதி சதவீதம் வெளியிடப்படுகிறது.
இனி இதுபோல நடக்கவே கூடாது.
ஒருமுறை மட்டும... கட் அண்ட் ரைட் ஆக இறுதி சதவீதம் அறிவிக்கப்பட வேண்டும்.
அதுவும்....
வெறும் சதவீதமாக மட்டும் இல்லாமல்...
வாக்காளர் எண்ணிக்கையாக இருக்க வேண்டும்.
அப்போதுதான்... இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு தே ஆ யாரையும் பட்டியலில் சேர்க்கவில்லை என்பதை... தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே நம்மால் கணக்கு போட்டு பார்த்து சரி காண இயலும்.
பிகாரில் இன்று வரை 66.91% வாக்கு சதவீதமும்...
வாக்காளர் எண்ணிக்கையும் ஒத்துப்போக வில்லை. சதவீத தசம ஸ்தானம்... என்பதே பல ஆயிரம் ஓட்டுகள். சில நூறு ஓட்டுகளில் வெற்றியை இழந்தோர் ஏராளம்.
படம் 4 பாருங்கள்.
பிகார் தேர்தலில் போட்டியிட்ட எல்லா கட்சிகளும் வேட்பாளர்களும் பெற்ற மொத்த ஓட்டுகள் :
51,740,266
தே ஆ சொன்ன கணக்குப்படி இது தான்...
66.91% என்றால்....
பிகார் மாநில மொத்த வாக்காளர் எண்ணிக்கை(100%)... 7,73,28,151 என்று வருகிறது. -----(A)
ஆனால்... தேர்தல் முடிந்த பிறகு தே ஆ அறிவித்த (படம்3)பிகார் மாநில மொத்த வாக்காளர் எண்ணிக்கை(100%)...7,45,26,858 மட்டுமே.----(B)
இதைவிட பெரிய கோல்மால்...
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட தே ஆ அப்போது (படம்2)பிகார் மாநில மொத்த வாக்காளர் எண்ணிக்கை(100%)...7.42,00,000 தான்.----(C)
இப்படி...
7.42 ... 7.45... ஆகி... கடைசியில் 7.73 ஆகி உள்ளது.
மொத்ததில்....
3.66 லட்சம் வாக்காளர்கள் மட்டும் கூடவில்லை.
31.28 லட்சம் வாக்காளர்கள் திடீரென அதிகரித்துள்ளனர்.
இன்று வரை இது எப்படி ஆனது என்று இந்தியாவில் ஒருத்தர் கூட விளக்கம் தரவில்லை.
மொத்ததில்...
இதுதான்...
பிஹார் தேர்தலில் நடத்த #ஓட்டுத்திருட்டு..?!
இது தமிழ்நாட்டில் நடந்தால்...
நாமெல்லாம்...
1885ல் துவக்கப்பட்ட கட்சியாக்கும்...
நாங்கள்...
75 ஆண்டுகள் கட்சி நடத்துகிறோம்...
என்று பெருமை பீத்துவதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.... நேற்று முளைத்த காளானிடம் ஏமாந்து போனால்..!
Mohamed Ashik #👨மோடி அரசாங்கம்
RSS பதிவு செய்யப்படாத அமைப்பு பல ஆண்டுகளாக பணம் வருவது எப்படி!!! காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மூத்த நிர்வாகிகள் இதை கண்காணிக்காதது ஏன்? இதன் விளைவாக இன்று வரை Rahul Gandhi , Priyanka Gandhi Vadra தொடர்ந்து சதி வேலையால் தோல்வியை சந்திக்கிறோம்,இதனால் பாதிக்கப்படுவது ஒட்டு மொத்த இந்தியாவுமே இந்திய மக்களுமே...😔😔😔 #👨மோடி அரசாங்கம்
#NewsUpdate | ரூ.1 கோடி வரை ஆண்டுக் கட்டணம் செலுத்தி முதுநிலை மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள EWS பிரிவினர்
#SunNews | #EWS | #NeetPG | #👨மோடி அரசாங்கம்
துருக்கி மற்றும் சீன துப்பாக்கிகளை டிரோன் மீது கட்டிவிட்டு... இந்திய பாகிஸ்தான் எல்லை தாண்டி டிரோன்களை பறக்கவிட்டு...
இந்தியாவில் வாழுகின்ற #பாகிஸ்தான் #ஸ்லீப்பர்செல்கள் வசம் கொண்டு வந்து போடுகிறது... பாகிஸ்தான்.
இந்தியாவில் அந்த கள்ள துப்பாக்கிகளை விற்கிற #பாகிஸ்தான்_கைக்கூலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய சர்வதேச ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட இந்தியர்களான #பாகிஸ்தான்_தீவிரவாதிகள் யார் யார் தெரியுமா..?!
அஜய்,
மன்தீப்,
ரோஹன்,
தல்விந்தர்.
இவர்களில் இருவர் பஞ்சாப். இருவர் உத்தர பிரதேசம். இவர்கள் மூலமாக... டில்லி மற்றும் சுற்றியுள்ள பல மாநிலங்களில் உள்ள கொலைக் குற்றவாளிகள் மற்றும் கலவர கும்பல்களுக்கு பல மாதங்களாக ஆயுதங்களை வழங்கி உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. யார் யாரிடம் கொடுத்தார்கள் என்று எந்த விபரமும் வரவே இல்லை. அதைப்பற்றி யாரும் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.
கைது செய்யும் போது... 10 விலையுயர்ந்த வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் 92 துப்பாக்கித் தோட்டாக்களை கையும் டிரோனுமாக குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
இதெல்லாம்...
கடந்த 2 நாட்களாக தமிழ் ஊடகங்கள் உட்பட பல செய்தி தளங்களில் இதெல்லாம் வரவே இல்லையே. ஏன்..?!
கைதானது... சங்கிகள் என்பதாலா..?!
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி இவர்களின் பெயர்களை போலீஸ் சொல்லியும் மறைத்து இருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்... இவர்களின் மூஞ்சியை கூட மறைத்து இருக்கிறது.
ஏன்... மேலிடத்தில் இருந்து ஏதும் மிரட்டல் வந்ததா..?!
(#Mohamed #👨மோடி அரசாங்கம்
31 லட்சத்து 73 ஆயிரம் பேர்
வசிக்கும் இந்தூரில்
5.9 கிமீ தூரத்துக்கு
மெட்ரோ ரயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
தாம் தூம் தமாக்காவா
மோடி இதை ஆரம்பிச்சு
வெச்சாரு.
இப்ப இந்த மெட்ரோவுல
நாள் ஒன்றுக்கு பயணம் செய்வது 80 பேர்தான்.
அக்டோபர்ல, மொத்தமே
2 ஆயிரம் பேர்தான் use பண்ணி இருக்காங்க. மாத வருமானம் தோராயமா
4.75 லட்சம் ரூபாய்.
ஒரு மாத மின்சார கட்டணம்
மட்டுமே 20 லட்சம் ரூபாய்!!!
ஆனா கோயமுத்தூர்,
மதுரைக்கு மெட்ரோ ரயில் விட முடியாதுன்னு ஒன்றிய அரசு திட்டவட்டமா மறுத்து இருக்கிறது!!!
தமிழ்நாடுனாலே
மோடி
"கை கழுவி"டறாரு !!! #👨மோடி அரசாங்கம்
ஆச்சர்ய குறிகள் !!!
உண்மையில் தற்குறிகள் ஒரு பக்கம் ஆச்சர்ய குறிகளாகவே தெரிகிறார்கள். பட்டனை தட்டினாலே விபரங்கள் கொடுக்கும் இந்த நாளில், தமிழ்நாட்டின் அரசிலும் ஒன்றிய அரசியலின் எதேச்சதிகாரமும் தெளிவாக புரியும் இந்த நாளில் கூட இப்படியொரு கூட்டத்தை கூட்டி அதனை அரசியல் என சொல்ல முடியுமா என்ற ஆச்சர்யம் இப்போது வரை இருக்கிறது.
தன்னுடைய படத்தை தயாரித்து பணம் சம்பாதித்த ஒருவன் எப்படி துணை முதல்வராக இருக்கலாம் என்ற சுய அரிப்பு அல்லது பொறாமை தான் இதற்கெல்லாம் காரணமாக இருக்க முடியும். விஜய் குறித்த சினிமா தகவல்கள் சேகரித்தால் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவருக்கு அடுத்த கட்ட தலைவர்களின் பேச்சுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமும், தன் மேடையில் தன்னைதானே புகழ்ந்து சினிமா பஞ்ச பேசி வரும் ஒருவனை கவனிப்பதன் மூலம் இது வெறும் அரசியல் மட்டுமே இல்லை வேறு ஒரு ஆசை அல்லது திணிப்பு இதன் பின்னால் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும்.
பிஜேபிக்கு சங்கி, திமுகவிற்கு உபிஸ், அதிமுகவிற்கு அடிமைகள், இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் சில அடிப்படை “வசவு” எல்லா காலத்திலும் உண்டு. ஆனால் தன் கட்சிக்கு இருக்கும் அப்படியான வசவை எடுத்துக்கொண்டு விளக்கம் கொடுக்கும் ஒரு கட்சி தலைவரை இப்போதுதான் பார்க்கிறேன்.
கட்சி தொடங்கி ஒராண்டுக்கும் மேல் ஆகிறது. இதுவரை தன் கட்சியின் கொள்கை என்ன என்றால் ”பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் “ என்கிறார்கள். அது கொள்கை இல்லை தன் கட்சியின் சமூகப்பார்வை அபப்டி இருக்கும் என்ற அறிவிப்பு. கொள்கை என்ன அதனை எப்படி நடைமுறை படுத்துவோம் என்ற அறிவுப்பு கூட இதுவரை கொடுக்க முடியவில்லை. நேற்று அறிவித்தவையும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள்தான்.
தன் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர், போன எலக்சனில் திமுக கட்சி கலர் சைக்கிள்ள வந்து ஓட்டுப்போட்ட நன்றி விசுவாம இல்லையானு கேட்கிறார். அதனை மேடையில் அமர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார் ஆச்சர்யமான தற்குறிகளின் தலைவர். இன்றுவரை மறுப்பு இல்லை. என்ன விசுவாசம் இவர் எதிர்பார்த்தார் ? அவர்கள் என்ன கொடுக்கவில்லை என்பதும் தெரியவில்லை. கொள்கை எதிரி அரசியல் எதிரி என்கிறார்கள். ஆனால் கொள்கை எதிரியை பற்றி இதுவரை ஒன்றுமே பேசவில்லை. கேட்டால் அவர்கள் கொள்கை எதிரி என்கிறர்கள். சரி அரசியல் எதிரி பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால் “ பாப்பா “ “அங்கிள்” தான். ஏற்கனவே திமுகவை திட்ட நிறைய கட்சிகள் இருக்கிறது. இவர்களைவிட நன்றாகவே திட்டுவார்கள். ஏன் திமுகவை திட்டி பாடலே வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் இவர் புது அட்மிஷன் அவ்ளோதான். ஆனால் ரொம்ப பழைய அரசியலாக இருக்கிறது.
நேற்று அவர் பேச பேச விழுந்த கைதட்டு எல்லாம் அவரின் ஹீரோச டைப் வசனங்களுக்கு மட்டுமே. முன்னாள் ரசிகரான அவரின் கட்சி தொண்டர்களுக்கு அதுதான் தெரியும். என்ன ஒன்று பிஜிஎம் மட்டும் இல்லை. உண்மையில் நீங்கள் தற்குறிகளாக ஆச்சர்யகுறிகளா என தெரியவில்லை. ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் கேவலக்குறிகள் என்பது மட்டுமே தெரிகிறது. அதுவும் நீங்கள் பேசபேச நன்றாக தெரிகிறது. மாவட்டம் தோறும் பேசுங்கள். அது தமிழ்நாட்டுக்கு நல்லது.
பா. சரவணகாந்த். #👨மோடி அரசாங்கம்
150 ஆண்டு இந்திய தொழிலாளிகள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்துள்ளது மோடி அரசு.
இந்திய தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறை படுத்தியுள்ளது.
70 சதமான தொழிலாளிகள் சட்ட பாதுகாப்பு அற்றவர்களாக மாறுவார்கள். இது காலனிய காலத்து உழைப்பு சுரண்டலுக்கு சமமானது.
இந்த கொடிய அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
#UnionGovt
#ஒன்றியஅரசு
#👨மோடி அரசாங்கம்
#ராகுல்ஜி யை "#பப்பு" என்ற பாஜககாரனின் கைகூலி தான் #தற்குறி TVK Vijay
என்பது நிரூபணமாகியிருக்கிறது!
#பவளவிழா "பாப்பா" என #திமுக மீது விமர்சனம் செய்கிறான் #தற்குறி!
#25நாட்கள் படம் ஓடியதற்கே வெள்ளி விழா கொண்டாடுகின்ற வெறும் சினிமாகாரனுக்கு,
#75ஆண்டுகள் ஒரு இயக்கம் மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, நெருப்பாற்றில் நீந்தி வந்தால்...., நீண்ட வரலாற்று பயணத்தின் முதிர்ச்சியை பாப்பா என்ற இளம் சொல்லுக்குள் அடைக்க நினைக்கும் நீ ஒரு அக்மார்க் #தற்குறியேதான்!
தானே... தான்மட்டுமே என்னும் கதகதப்பில் மிதப்பவன்தான் #தற்குறி!
பராசக்தியைப்போல் மனோகராவைப்போல் வேலைக்காரியைப்போல் ஓர்இரவைப்போல்
மாமன்னனைப் போல்
ஜெய்பீம் போல் ஒரே ஒரு தனது திரைப்படத்தை அடையாளம் காட்டட்டும் இந்த #தற்குறி!
"குறி வைத்தால் தவறமாட்டேன்;
தவறுமானால் குறி வைக்கமாட்டேன்!"
அது உனக்கும் #சங்கவிக்குமான பிரச்சினை!
அது உனக்கும் #திரிஷாவிற்குமான பிரச்சினை!
சொந்த சுவர்மறைவு பிரச்சினைகளை பொதுவெளியில் பேசி புளங்காகிதம் அடையும் காகிதப்புலி #தற்குறி என்பது ஊரார் அறிந்த ஹாரர் மூவி!
ஆனால் அரசியலுக்குள் இன்றைக்கு உள்ளே வந்த #சின்னபாப்பா நீதான்!
செம்மொழி பாதுகாப்பு தெரியுமா உனக்கு?
இந்தி எதிர்ப்புப் போரை அறிவாயா நீ?
நெருக்கடி காலங்களில் வதைப்பட்டு தனிமை சிறைகளில் கிடந்திருக்கின்றாயா நீ?
மண்டல் கமிஷன் 27 சதவிகித பிற்பட்டோர் இடஒதுஒதுக்கீடு சட்டப் போராட்டம் அறிந்தவனா நீ?
வள்ளுவர் கோட்டம் வள்ளுவர் சிலை நிர்மாணம் ஏன் எனத் தெரியுமா உனக்கு?
சத்துணவை முட்டையோடு சாப்பிட்டிருக்கின்றாயா நீ?
பள்ளியில் இளம் சிறார்கள் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபின் அவர்களின் முக மலர்ச்சியைக் கண்டதுண்டா நீ?
நான் முதல்வன் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் பயனாளர்களின் உயர்க் கல்வி மேம்பாடு கவனித்ததுண்டா நீ?
#திராவிடமாடல் ஆட்சியின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை இந்தியாவின் பிற மாநிலங்கள் பின்பற்றுவது அறிவாயா நீ!
என்றாவது ஒருநாள் மழை நாளில் பாதிப்படைந்த தெருக்களில் இறங்கி கால் நனைத்ததுண்டா நீ?
#சனாதனம் #ஒழிக என்று உயர் குரல் எழுப்பியவனா நீ?
#தற்குறியே நீ மேடைகளில் அரசியல் பேசு;
பதிலளிக்கின்றோம்!
வாய்மூடி பல்லிளிக்கின்றாய்;
ஆதலினால் நீ #தற்குறியேதான்!
உனக்குப் பின்னால் காமராஜரும் பெரியாரும் அம்பேத்கரும் உன்னை நினைத்து சிரிப்பதை அறிவாயாடா நீ ?
DMK ITWing
Arivalayam அறிவாலயம்
Ellorum Nammudan
ராஜ லிங்கம்
ஜெயராமன் தி மு க #👨மோடி அரசாங்கம்








![👨மோடி அரசாங்கம் - Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV - ShareChat 👨மோடி அரசாங்கம் - Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV Rccbok RCcbo Delhi Police bust ISl-linked Major arms racket bustedin drone arms network; four Delhi; China-made weapons supplied from Pak arrested 10 high-end were foreign pistols seized 2 days 890 2days ago Today Telegraph India India 0 Rccbon Made In China, Turkey ISI-linked armsracket busted: 10 high-end foreign] Supplied To India Via Pak: Major Arms Racket Busted pistols Turkiye made PX- 5.7 pistol 92 live cartridge 2days ago 2days ago 1Ol Times or India W NDIV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_399666_1ec3c193_1764038398016_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=016_sc.jpg)



