நீதிமன்றங்களின் தீர்ப்புகள் எல்லை தாண்டக்கூடாது
அரசுத்துறைகள், பொதுத்துறைகள், தனியார் துறைகள் என ஒவ்வொரு துறை சார்ந்த வழக்குகளில்
அந்தத்துறைகளின் விதிகளுக்கு உட்பட்டு நீதி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன்.
ஆனால் திருப்பரங்குன்றம் நிகழ்வு சார்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பும்,
அதனைத் தொடர்ந்து நீதிமன்றப் பாதுகாப்புக்கு நிற்கும் காவல் படையை அனுப்பி
தீர்ப்பை நடைமுறைப்படுத்தச் சொல்வதும்
இந்திய நீதிமன்றங்கள் செய்யாத ஒன்று.
நீதிபதியாக இல்லாமல்,
தனியொரு மனிதரின் பக்தி, அரசியல் விருப்பம் சார்ந்து ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார் நீதவான்.
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்கும் இந்தத்தீர்ப்பின் விளைவுகள்
எத்தகையன என்பதைக் கணக்கில் கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் -
சட்டப்படியான நடைமுறைக்குள் நின்று சமாளித்த தமிழ்நாட்உ அரசின் காவல் துறை பாராட்டுக்கு உரியது.
அ.இராமசாமி பதிவு #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
